குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? விவரங்கள் இதோ..!

எலி வளையானலும் தனி வளை என்பது பழமொழி. ஆனால் இன்றைய பெரும்பாலான மக்களின் கனவும் இது தான். தங்களுக்கென ஒரு தனி வீடு, அது ஓலை குடிசையானலும் சரி, மாட மாளிகையாக இருந்தாலும் சரி. மொத்தத்தில் தங்களுக்கென சொந்த வீடு.

ஆனால் இன்றைய சாமனியர்களின் நிலை கையில் பணத்தை வைத்துக் கொண்டு வீடு கட்டும் நிலையில் இல்லை. எனினும் இந்த கனவு நிறைவேற பல சாத்திய கூறுகள் உள்ளன.

ஏனெனில் தற்போது வங்கிகள் குறைந்த வட்டியில் வீட்டுக்கடனை வழங்கி வருகின்றன. மேலும் மற்ற கடன்களுடன் ஒப்பிடும்போது, வீட்டுக்கடன்களுக்காக சில சலுகைகளையும் வங்கிகள் அளித்து வருகின்றன.

வீட்டுக்கடனுக்கு நிறைய சலுகைகள்

வீட்டுக்கடனுக்கு நிறைய சலுகைகள்

ஒன்று குறைந்த வட்டி விகிதம், கடனை திரும்ப செலுத்தும் கால அவகாசம், பழைய வீடுகளை புதுபித்தலுக்கு கடன், குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் என பல சலுகைகளை அளிக்கின்றன. நீங்கள் இனி எளிதாக வீடு கட்டலாம். அப்படி வங்கியிலேயே கடன் வாங்கி வீடு கட்ட நினைப்பவர்களில் பலர், குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பார்கள். அப்படி நினைப்பவர்களுக்கானது தான் இந்த கட்டுரை.

15 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த வட்டி

15 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த வட்டி

தற்போது நாட்டில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் 15 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைவாக வழங்கப்படுகின்றன. பல வங்கிகள் 7 சதவீதத்திற்கும் குறைவாக வழங்குகின்றன. அவ்வாறு மிகக் குறைந்த வட்டியினை வழங்கும் 10 வங்கிகளின் பட்டியலைத் தான் இங்கு கொடுத்துள்ளோம். இது மணிக்கன்ட் ரோலில் வெளியான ஒரு கட்டுரையினை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இங்கு 75 லட்சம் ரூபாய் கடன், 20 வருட கால அடிப்படையில் இஎம்ஐ விகிதத்தினை கொடுத்துள்ளோம். (செயல்பாட்டு கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் பூஜ்ஜியமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது)

பேங்க் ஆப் இந்தியா & சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் இந்தியா & சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் இந்தியா வங்கியின் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் வருடத்துக்கு 6.85 சதவீதமாகும். இங்கு மாத இஎம்ஐ விகிதம் 57,474 ரூபாயாகும்.

இதுவே சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் வருடத்துக்கு 6.85 சதவீதம் வட்டியாகும். இங்கு இஎம்ஐ விகிதம் 57,474 ரூபாயயாகும்.

கனரா வங்கி - பஞ்சாப் & சிந்த் வங்கி

கனரா வங்கி - பஞ்சாப் & சிந்த் வங்கி

கனரா வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம் 6.90 சதவீதமாகும். இதற்கு இஎம்ஐ விகிதம் 57,698 ரூபாயாகும்.

பஞ்சாப் & சிந்த் வங்கியில் வருடத்திற்கு வட்டி விகிதம், கனரா வங்கியை போலவே 6.90 சதவீதமாகும். இதற்கான இஎம்ஐ விகிதம் 57,698 ரூபாயாகும்.

யூனியன் பேங்க் ஆப் இந்தியா & பேங்க் ஆப் பரோடா

யூனியன் பேங்க் ஆப் இந்தியா & பேங்க் ஆப் பரோடா

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் வட்டி விகிதம் சற்று அதிகமாக வருடத்திற்கு 7 சதவீதமாகும். இதற்கான இஎம்ஐ விகிதம் 58,147 ரூபாயாகும்.

இதே பேங்க் ஆப் பரோடாவிலும் வட்டி விகிதமானது வருடத்திற்கு 7 சதவீதமாகும். இங்கும் இஎம்ஐ விகிதமானது 58,147 ரூபாயாகும்.

பேங்க் ஆப் மகாராஷ்டிரா & கோடக் மகேந்திரா வங்கி

பேங்க் ஆப் மகாராஷ்டிரா & கோடக் மகேந்திரா வங்கி

பேங்க் ஆப் மகாராஷ்டிராவினை பொறுத்த வரையில் வருடத்திற்கு வட்டி விகிதம் 7.05 சதவீதமாகும். இதற்கான இஎம்ஐ விகிதம் 58,373 ரூபாயாகும்.

இதுவே கோடக் மகேந்திரா வங்கியில் வட்டி விகிதமானது வருடத்திற்கு 7.10 சதவீதமாகும். இங்கு இஎம்ஐ விகிதமானது 58,598 ரூபாயாகும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி & பஞ்சாப் நேஷனல் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி & பஞ்சாப் நேஷனல் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் தான் லிஸ்டிலேயே சற்று அதிகமான வட்டியாகும். இங்கு வருடத்திற்கு 7.15 சதவீதமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கான இஎம்ஐ விகிதமானது 58,825 ரூபாயாகும். மேற்கண்ட அனைத்து டேட்டாகளும் ஆகஸ்ட் 14 அன்று அந்தந்த வங்கிகளின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

இதையும் கவனிக்க வேண்டும்

இதையும் கவனிக்க வேண்டும்

மேற்கண்ட இந்த இஎம்ஐ விகிதமானது உங்களது கடன் தொகைக்கான வட்டியினை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நீங்கள் உங்களது இஎம்ஐ-யினை தாமதமாக செலுத்தினாலோ அல்லது கூடுதல் கட்டணங்கள் இதில் வசூலிக்கப்பட்டால், இந்த தொகையானது வேறுபடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+