இன்றைய காலக்கட்டதில் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்க தொடங்கி விட்டனர். பாரம்பரியமாக நம்பகமான முதலீடாக பிக்சட் டெபாசிட் கருதப்படுகிறது. ஆனால் அதன் பாதுகாப்பு குறித்தும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளது. எடுத்துக்காட்டாக, இண்டஸ்இந்த் வங்கியில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான செய்திகள் வெளியானதையடுத்து, வங்கியின் நிதி சிக்கல்கள் தங்களது டெபாசிட் தொகை பாதிக்குமோ என்றும் வங்கியின் நிதி நிலை மேலும் மோசமடையுமோ என்றும் டெபாசிட் செய்தவர்கள் கவலைப்பட தொடங்கி விட்டனர்.
ஃபிக்சட் டெபாசிட் நன்மைகள்: ஃபிக்சட் டெபாசிட் உங்கள் பணத்தை சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றன. அதாவது பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் அல்லது வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களால் பிக்சட் டெபாசிட் பாதிக்கப்படுவதில்லை. இதனால் ஆபத்தை தவிர்க்க விரும்புவோருக்கு பிக்சட் டெபாசிட் ஏற்றது.

ஃபிக்சட் டெபாசிட்டுகள் எளிதான நிதி அணுகலை வழங்குகின்றன. முதிர்வு காலத்துக்கு முன்னதாக பணத்தை திரும்ப பெறுவதற்கு அபராதம் விதிக்கப்படாலம் என்றாலும், எப்போது வேண்டுமானாலும் பணத்தை திரும்ப பெறும் வாய்ப்பு உள்ளது. இது பல முதலீட்டு வகைகளால் வழங்கப்படுவதில்லை.
ஏற்ற இறக்கமான பங்குச் சந்தை அல்லது பிற முதலீட்டு சொத்துக்களை போலன்றி, பிக்சட் டெபாசிட்டுகள் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வருமானத்தை வழங்குகின்றன. முதிர்வின்போது பெறும் தொகையை முன்கூட்டியே தெரிந்து கொள்ள இது அனுமதிக்கிறது.
ஃபிக்சட் டெபாசிட் பாதுகாப்பு குறித்து நீங்கள் அதிகம் அக்கறை கொண்டால், நிலையான மற்றும் நம்பகமான வங்கியை தேர்ந்தெடுத்து ஃபிக்சட் டெபாசிட் செய்தால் இன்னும் ஒரு சிறந்த முதலீட்டு தேர்வாக இருக்கும்.
ஃபிக்சட் டெபாசிட் காப்பீட்டு கவரேஜ்: ஃபிக்சட் டெபாசிட்தாரர்களின் கவலையை போக்கும் நோக்கில், ஃபிக்சட் டெபாசிட் காப்பீட்டு கவரேஜை ரூ.5 லட்சத்திலிருந்து உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல். இந்த நடவடிக்கை வங்கி அமைப்பின் மீதான நம்பிக்கையை குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் பொதுவான டெபாசிட்தாரர்களிடம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஃபிக்சட் டெபாசிட காப்பீட்டு கவரேஜ் அதிகரிப்புக்காக டெபாசிட் இன்ஸ்யூரன்ஸ் அண்ட் கிரெடிட் கார்ப்பரேஷன் அதன் பிரீமியக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications