பங்குச்சந்தை முதலீடு ஆனாலும் சரி, வங்கி வைப்பு நிதி ஆனாலும் சரி வட்டி வருமானம் சிறிய அளவு சரிந்தாலும் மக்கள் பதற்றம் அடைந்து விடுவார்கள். ஆனால் நம்முடைய பணத்தையும், சேமிப்பையும், அமைதியாகவும் தினமும் ஒரு பேய் அழித்து வருகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அந்த பேய்-க்கு பெயர் தான் பணவீக்கம். இது உங்களுக்கு பெரிய விஷயமில்லை என தோன்றலாம், ஒரு சிறிய உதாணத்தை கேட்டால் இதன் முக்கியதுவம் புரிந்துவிடும்.
பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை காலப்போக்கில் உயர்வதாகும். ஆண்டுக்கு 5% அல்லது 7% விலை உயர்வு சிறியதாகத் தோன்றலாம், ஆனால் இது பல ஆண்டுகளில் கூட்டு வட்டி போல வளர்ந்து, உங்கள் பணத்தின் மதிப்பை கடுமையாக குறைக்கிறது.

உதாரணமாக, 7% பணவீக்க விகிதத்தில், இன்று ரூ.1 கோடி மதிப்புள்ள பணம் 20 ஆண்டுகளில் வெறும் ரூ.25.84 லட்சமாக மாறும். அதாவது, இன்றைய மதிப்பில் ரூ.1 கோடி வாங்கும் பொருளை 20 ஆண்டுகளுக்குப் பிறகு வாங்க வேண்டுமாயின் உங்களுக்கு ரூ.4 கோடி தேவைப்படும்.
சரி அடுத்த 20 ஆண்டுகளில் செலவுகள் எப்படியெல்லாம் உயரும்? என்பதை ஆண்டுக்கு 7% பணவீக்கத்தை கருத்தில் கொண்டு கணக்கிடலாம்.
- பள்ளிக் கட்டணம்: இன்று ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக உள்ளது, 20 ஆண்டுகளில் ரூ.3.87 லட்சமாக உயரும்.
- மருத்துவச் செலவு: இன்று ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஒரு சிகிச்சை, 20 ஆண்டுகளில் ரூ.19.35 லட்சமாக மாறும்.
- மாதாந்திர வீட்டு செலவு: இன்று ரூ.50,000 ஆக உள்ளது, 20 ஆண்டுகளில் ரூ.1.93 லட்சமாக அதிகரிக்கும்.
எனவே, 20 ஆண்டுகளில் ஓய்வு பெற திட்டமிடுபவர்கள், ரூ.1 கோடி போதுமானது என நினைத்தால், அது மிகப்பெரிய தவறு. இந்த ஒரு கோடி ரூபாய் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட கூட போதாமல் போகலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை. அமெரிக்கா, ஐரோப்பாவில் பணவீக்கம் 2-4 சதவீதத்திற்கும் கீழ் இருக்கும் காரணத்தாலேயே அவர்களால் குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கையை வாழ முடிகிறது.
முதலீட்டு கனவு: பல முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகள், ஆண்டுக்கு 7-8% வருவாய் தருவதாக நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், பணவீக்கமும் 7% ஆக இருந்தால், உங்க முதலீட்டின் உண்மையான வருவாய் பூஜ்ஜியமாகும். இதை ஒரு எளிய உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம் வாங்க:
நீங்கள் ரூ.1 கோடி பணத்தை ஆண்டுக்கு 8 சதவீதம் வருவாய் தரும் ஒரு முதலீட்டில் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். 20 ஆண்டுகளில், அது சுமார் ரூ.4.66 கோடியாக வளரும். ஆனால், 7% பணவீக்கத்தால், இந்த ரூ.4.66 கோடியின் உண்மையான மதிப்பு அன்றைய மதிப்பில் வெறும் ரூ.1.20 கோடியாக இருக்கும்.
இதனால், உங்கள் பணத்தின் வாங்கும் திறன் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டுமாயின், உங்கள் முதலீடுகள் பணவீக்கத்தை விட அதிக வருவாய் தர வேண்டும்.
உதாரணமாக, 7% பணவீக்கத்தை ஈடுக்கட்ட, உங்களுடைய பணத்தை 10-12% ஆண்டு வருவாய் தரும் முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டும். பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டுகள், அல்லது பிற நீண்டகால முதலீடுகள் இதற்கு உதவலாம். ஆனால், இவற்றில் ஆபத்தும் உள்ளதால், உங்களுடைய நிதி ஆலோசகருடன் ஆலோசனை செய்து முதலீட்டை திட்டமிடுவது முக்கியம்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications