காப்பீடு திட்டங்கள் நமக்கும், நம்மை சார்ந்தவர்களின் எதிர்காலத்திற்கும் நன்மை தரக்கூடிய முதலீடுகள். காப்பீட்டை வீண் செலவாக எண்ணி தவிர்த்து விட முடியாது. ஏனேனில் யாருக்கு எப்போது என்ன மாதிரியான பிரச்னைகளும் இழப்புகளும் ஏற்படுகின்றன என்பதை நம்மால் கணிக்கவே முடிவதில்லை.
எனவே பாதுகாப்பு கருதி காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானது, அதிலும் வருமான வரி சலுகைகள் கிடைக்கிறது என்பதால் நிச்சயமாக நீங்கள் பரிசீலிக்க வேண்டும். இதேவேளையில் இத்தகைய இன்சூரன்ஸ் மூலம் ஒருவர் அதிகப்பட்சமாக எவ்வளவு வரி சேமிக்க முடியும் என்பதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

டெர்ம் பிளான்: மாரடைப்பு, விபத்து போன்றவற்றால் மக்கள் இறப்பது சாதாரணமாகி விட்டது. இப்படி ஏற்படும் திடீர் இறப்புகள் , அவர்கள் சார்ந்த குடும்பங்களை நிலை குலைய வைக்கின்றன. அப்போது கை கொடுத்து உதவுபவை தான் டெர்ம் பிளான்ஸ். வீட்டில் நீங்கள் ஒருவர் தான் வேலைக்கு சென்று சம்பாதிக்கிறீர்கள் என்றால் கட்டாயம் டெர்ம் பிளான் எடுத்துவிடுங்கள்.
இறப்பு பலனாக மற்ற காப்பீடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்த ப்ரீமியத்தில் கணிசமான தொகை கிடைக்கிறது. அதுமட்டுமின்றி டெர்ம் பிளான்களுக்கு ஆண்டு தோறும் செலுத்தும் ப்ரீமியங்களுக்கு வருமான வரி சலுகை கிடைக்கிறது.
டெர்ம் பிளானில் வரி சேமிப்பு: வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். அதுமட்டுமின்றி இறப்பு பலனாக கிடைக்கும் தொகைக்கு வருமான வரி கிடையாது. சில டெர்ம் பிளான்கள், ரிட்டர்ன் ஆஃப் ப்ரீமியம் என்ற விருப்பத்தை கொண்டுள்ளன. அதாவது குறிப்பிட்ட ஆண்டுகளை கடந்த பின், நீங்கள் செலுத்திய ப்ரீமியம் உங்களுக்கு கிடைக்கும்.
முதலீட்டுடன் கூடிய காப்பீடு திட்டம்: ஆயுள் காப்பீடு, நல்ல வருமானம் மற்றும் வரிச் சலுகை ஆகிய மூன்றும் கிடைக்கும் திட்டங்கள் தான் இவை. ஆயுள் காப்பீடு மட்டுமில்லாமல் யூலிப் எனப்படும் சந்தையுடன் இணைக்கபப்ட்ட திட்டங்கள் உங்கள் ப்ரீமியத்தை முதலீட்டாக்கி வருமானமும் தருகிறது.
வரி சேமிப்பு: இந்த திட்டங்களில் செலுத்தும் ப்ரீமியம் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். அதே போல இந்த திட்டங்களில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி கிடையாது. ஆனால் ஓராண்டுக்கான ப்ரீமியம் தொகை ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு: மருத்துவ காப்பீடு, கட்டாயம் அனைத்து குடும்பங்களும் இதனை எடுத்திருக்க வேண்டும் என்ற காலத்திற்கு நாம் வந்துவிட்டோம். திடீரென ஏற்படும் மருத்துவ செலவுகளை சமாளிக்க மருத்துவ காப்பீடு திட்டங்கள் பேருதவி செய்கின்றன.
மருத்துவ காப்பீடுகளுக்காக செலுத்தப்படும் ப்ரீமியத்திற்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80டியில் விலக்கு கிடைக்கிறது. வரி தாக்கல் செய்யும் நபர் , அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கான மருத்துவ காப்பீடு ப்ரீமியம் தொகைக்கு வரிச் சலுகை உண்டு.
வரி சேமிப்பு: இதன்படி 60 வயதுக்கு கீழ் இருந்தால் ஆண்டுக்கு ரூ.25,000 மற்றும் 60 வயதுக்கு மேல் இருந்தால் ஆண்டுக்கு ரூ.50,000 மற்றும் முழு உடல் பரிசோதனைக்கு ஆண்டுக்கு ரூ.5,000 சலுகை கிடைக்கிறது.
இதுவரை நீங்கள் எந்த காப்பீடு திட்டங்களையும் எடுக்கவில்லை எனில், முதலில் உங்களுக்கான சிறந்த திட்டத்தை தேர்வு செய்து காப்பீடு செய்து கொள்ளுங்கள். இது வரி சலுகையோடு எதிர்கால பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications