அரசின் பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடி மக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம், சுகன்யா சம்ரிதி யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று நிபுணர்கள் கூறி வந்தனர்.
ஆனால் அப்படியில்லை. வட்டியில் இம்முறையும் மாற்றமில்லை என அறிவித்துள்ளது அரசு. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இன்று நாட்டில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது அரசின் சிறுசேமிப்பு திட்டங்கள் தான்.
பாதுகாப்பான சிறுசேமிப்பு திட்டங்கள்
ஏனெனில் வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், முதலீட்டுக்கு பங்கமில்லாத, நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டங்களாகும். எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பான, மிகுந்த நம்பகத் தன்மை கொண்ட முதலீட்டு திட்டங்களாக பார்க்கப்படுகிறது. ஆக சாமானிய மக்கள் மத்தியில் இந்த சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளன. இந்த திட்டங்களுக்கு அரசு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகித்தத்தினை மாற்றம் செய்வது வழக்கமான ஒன்று.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
ஆக அப்படியாக இந்த முறை வட்டி விகித மாற்றத்தில் குறைக்கப்படலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர்,2021, காலாண்டுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் சாமானிய மக்கள் வயிற்றில் அரசு பாலை வார்த்துள்ளது எனலாம்.
என்னென்ன திட்டங்கள் லிஸ்ட்டில்
அரசின் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், சுகன்யா சம்ரிதி திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள், கிசான் விகாஸ் பத்திரம், அஞ்சலகத்தின் டைம் டெபாசிட்கள் என பலவும் இதில் அடங்கும்.
தற்போதைய வட்டி விகிதம் எவ்வளவு?
அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு வருடத்திற்கு - 4%
1 வருட டைம் டெபாசிட்டுக்கு - 5.5%
2 வருட டைம் டெபாசிட்டுக்கு - 5.5%
3 வருட டைம் டெபாசிட்டுக்கு - 5.5%
5 வருட டைம் டெபாசிட்டுக்கு - 6.7%
5 வருட தொடர் வைப்பு நிதிக்கு - 5.8%
5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு - 7.4%
5 வருட மாதாந்திர திட்டம் - 6.6%
5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் - 6.8%
பொது வருங்கால வைப்பு நிதி - 7.1%
கிசான் விகாஸ் பத்திரம் - 6.9%
சுகன்யா சம்ரிதி யோஜனா - 7.6%
இது தான் காரணம்?
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாததையடுத்து, வங்கிகள் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்ய வில்லை. அதே நேரம் சில வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் அரசின் முக்கிய சேமிப்பு திட்டங்களுக்கும் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை. இது வட்டி விகிதம் அதிகரிக்கப்படாவிட்டாலும், குறைக்கப்படவில்லை என்பதே மிக நல்ல விஷயமாகத் தான் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications