டெல்லி: பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலை நாட்டவும், அவர்களின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண் குழந்தைகளின் வளர்ச்சியினை வலியுறுத்தும் விதமாக கடந்த 2012 முதல் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த தினத்தில் உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வைக்கலாம்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது சுகன்யா சம்ரிதி யோஜனா. இது உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமண பருவத்திலும் உதவும்.
பெண் குழந்தைகள் பெயரில் தொடங்கலாம்
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்கும் குறைவான குழந்தைகளின் பெயரில், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். இது அஞ்சலகத்தில் வழங்கப்படும் ஒரு பிரபலமான திட்டமாகும். இதனை வங்கிகளிலும் தொடங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு முதலீடு?
பெண் குழந்தைகளுக்கான இந்த பிரத்யேக திட்டத்தில் வட்டி விகிதம் தற்போது 7.6% ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இதனை வருடா வருடமோ, அல்லது உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப காலாண்டுக்கு ஒரு முறை கூட செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு
பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் முதிர்வு காலம் 21 ஆண்டுகள் ஆகும். எனினும் பெண் குழந்தைக்கு 18 வயதிற்கு மேல் திருமணம் ஆகும்போது தானாக இந்த கணக்கு மூடப்படும்.
வருடத்திற்கு 1.5 லட்சம் ரூபாய் வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்யும்போது மொத்தம் 22, 50,000 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். நீங்கள் தினசரி 411 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களது முதிர்வு தொகை, 65,93,071 ரூபாயாகும்.
முதலீட்டு தொகை - ரூ.22,50,000,
வட்டி வருமானம் - ரூ.43,43,071
வரி சலுகை
பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரிச்சலுகை கிடைக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கூட்டு வட்டியின் பலன் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பதால், மிகப்பெரிய வருவாய் கிடைக்கும். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஏற்ற ஒன்றாகவும் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications