இந்தியாவில் பெண் குழந்தைகளின் உயர்கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் பெற்றோர் பாதுகாப்பான முறையில் பணத்தை முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்றும் இந்திய அளவில் இந்த திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவிலேயே அதிக அளவு வட்டி வருமானம் பெறக்கூடிய அதே வகையில் காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடையக்கூடிய மிகச்சிறந்த ஒரு முதலீட்டு திட்டமாக செல்வமகள் சேமிப்பு திட்டம் திகழ்கிறது. பெற்றோர் முறையாக திட்டமிட்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணத்தை செலுத்தினால் உங்களுடைய பெண் குழந்தைக்கு 21 வயது ஆகும்போது நீங்கள் செய்த முதலீட்டை விட மும்மடங்கு அதிகமான பணத்தை திரும்ப பெற முடியும். அது எப்படி என்பதை நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் இப்போது செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 8.2% வட்டி வருமானம் கிடைக்கிறது. பெண் குழந்தை பிறந்து அந்த குழந்தைக்கு 10 வயது ஆவதற்குள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கை தொடங்க வேண்டும். 15 வயது வரை இதில் முலீடு செய்ய முடியும். அந்த வகையில் உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த உடனேயே அந்த குழந்தையின் பெயரில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கி விடுங்கள்.
15 ஆண்டு காலத்திற்கு ஒவ்வொரு ஆண்டுக்கும் 1.5 லட்சம் ரூபாயை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 410 ரூபாய் போதும். தற்போதுள்ள 8.2% வட்டியே நீடிக்கிறது எனும் போது உங்களுடைய பெண் குழந்தைக்கு 21 வயது ஆகும்போது செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் நீங்கள் செய்த முதலீடு 22.5 லட்சம் ரூபாய், வட்டி வருமானமாக மட்டுமே 49.32 ரூபாய் கிடைக்கும். அதாவது 21 வயதாகும் உங்கள் கைக்கு 71.82 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
அதாவது நீங்கள் செய்த முதலீட்டை விட மூன்று மடங்கு பணம் உங்களுடைய கைகளில் கிடைத்திருக்கும். இந்தியாவில் இந்த அளவுக்கு லாபம் தரும் அரசு ஆதரவு பெற்ற முதலுக்கு மோசம் போகாத ஒரு சேமிப்பு திட்டம் என்றால் அது செல்வமகள் திட்டம் தான். குறைந்தபட்சம் 250 ரூபாயிலிருந்து ஒரு நிதியாண்டில் 1.5 லட்சம் ரூபாய் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் கிடைக்கக்கூடிய முதிர்வு தொகைக்கு வரி கிடையாது என்பது மற்றொரு சிறப்பு.
நாடு முழுவதும் செயல்படக்கூடிய தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கினை தொடங்கலாம். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய தபால் நிலையம் அல்லது வங்கியில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 250 ரூபாயில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். முதலீடு செய்யக்கூடிய பணத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 8.2 சதவீத வட்டி என்பது வழங்கப்படுகிறது.
கணக்கு முதிர்வு பெற்ற பிறகும் தொடர்ந்து நீங்கள் கணக்கை முடிக்காமல் தொடர்ந்து அதில் பணத்தை வைத்திருந்தால் தபால் நிலைய சேமிப்பு கணக்கிற்கு கிடைக்கும் வட்டி தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். நாட்டின் எந்த பகுதியிலும் இருக்கும் தபால் நிலையம் மற்றும் வங்கியிலும் இந்த கணக்கை மாற்றிக் கொள்ளலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீட்டிக்கும் வட்டிக்கும் 100% பாதுகாப்பு உண்டு.
இதில் வட்டி என்பது கணக்கிடப்பட்டு கணக்கில் தொடர்ச்சியாக சேர்க்கப்பட்டு விடும். பெண் குழந்தைக்கு 18 வயது பூர்த்தியான பிறகு அல்லது பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கணக்கில் இருக்கும் பணத்தில் 50 சதவீத தொகையை கல்விக்காக எடுத்துக் கொள்ளலாம். இந்த கணக்கு குழந்தைக்கு 21 ஆண்டுகள் முடியும் போது முதிர்ச்சி அடையும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

