அஞ்சல் துறையின் தொடர்வைப்புக் கணக்குக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டம் எனலாம்.
தற்போதைய காலகட்டத்தில் முன்னணி வங்கிகள் கூட வட்டி விகிதத்தினை குறைவாகத் தான் வழங்கி வருகின்றன. அதனுடன் ஒப்பிடும்போது அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் அதிகம் எனலாம்.
அதிலும் கையில் இருக்கும் ஒரு சிறு தொகையை மாத மாதம் முதலீடு செய்ய முடியும் என்பதால் அனைத்து தரப்பினரும் பயனடைய கூடிய ஒரு திட்டமாகும். குட் ரீட்டர்ன்ஸ் ரீடர் ஒருவர் நான் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்ய தயாராய் இருக்கிறேன். அஞ்சலகத்தில் ஆர்டி திட்டத்தில் எனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும். இதனை எப்படி தொடர் வைப்பு நிதியில் செய்வது என கேட்டிருந்தார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.
வட்டி அதிகம்
அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அஞ்சலக தொடர்வைப்பு நிதி கணக்கினை பெரியவர்கள் தனியாக தொடங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லையெனில் ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். இதே 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த கணக்கினை பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம்.
எவ்வளவு கிடைக்கும்?
நீங்கள் மாதம் 10,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். தற்போது வட்டி விகிதம் 5.8%. இதன் முதிர்வு காலம் 5 வருடம் என்பதால், 5 வருடத்திற்கு பிறகு உங்களுக்கு முதிர்வு தொகையாக 6,96,968 ரூபாய் கிடைக்கும். இதனை 10 வருட காலத்திற்கு நீட்டிக்கும்போது, நீங்கள் 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள், வட்டியாக 4,26,476 ரூபாயும், ஆக மொத்தம் 10 வருடம் கழித்து 16,26,476 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும்.
என்ன சலுகை?
தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால், தள்ளுபடி சலுகையினை பெறலாம். குறிப்பாக 6 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான தவணைகளை முன் கூட்டியே செலுத்தினால் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
ஒரு வருடத்திற்கான தொகையை முன் கூட்டியே செலுத்தினால், 12 ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். மேலும் 12 டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும், 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும்.
இடையில் பணம் எடுக்கலாமா?
இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகும் தொடர விரும்பினால் விண்ணப்பத்தினை கொடுத்து தொடரலாம். இவ்வாறு நீட்டிக்கப்படும் கணக்கினை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். எனினும் இதன் முதிர்வு காலம் 5 வருடங்களாகும்.
கடன் வசதி உண்டு
12 தவணை தொகை செலுத்திய பிறகு அதற்கு எதிராக, நீங்கள் இந்த தொடர் வைப்பு கணக்கின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம். இது உங்களது நிலுவையில் 50% பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை ஒரே தவணையாகவும் அல்லது மாத தவணையாகவும் கூட செலுத்திக் கொள்ளலாம். இதற்கு வட்டி விகிதமாக 2% + RD வட்டி விகிதமும் சேரும். ஒரு வேளை இந்த கடனை உங்களது திட்டம் முதிர்வு அடையும் வரை செலுத்தவில்லை எனில், உங்களது கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த கடனை நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் அலுவகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications