தினசரி ரூ.44 ரூபாய் போதும்.. ரூ.27 லட்சம் கேரண்டி.. எவ்வளவு ஆண்டு முதலீடு.. என்ன திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்சூரன்ஸ் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது எல் ஐ சி தான். இன்று தனியார் நிறுவனங்களுக்கும் பெரும் போட்டியாளராக இருந்து வரும் எல்ஐசி, பல்வேறு வகையான இன்சூரன்ஸ் பாலிசிகளை வழங்கி வருகின்றது.

அந்த வகையில் நாம் இன்று LIC-ன் ஜீவன் உமாங் பாலிசி பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.

கண்டிப்பாக எடுக்க வேண்டிய 6 இன்சூரன்ஸ்கள்.. ஏன்.. என்ன காரணம்..! கண்டிப்பாக எடுக்க வேண்டிய 6 இன்சூரன்ஸ்கள்.. ஏன்.. என்ன காரணம்..!

இது என்ன வகையான பாலிசி. இதனை யாரெல்லாம் எடுக்கலாம். இதில் உள்ள சிறப்பு பலன்கள் என்ன? மற்ற முக்கிய கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

என்ன பாலிசி?

என்ன பாலிசி?

பொதுவாக இன்சூரன்ஸ் என்றாலே ஒதுங்கி போன காலம்போய், தற்போது தான் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு இது கணிசமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது எனலாம்.

 
எல்ஐசியின் ஜீவன் உமாங் திட்டமானது ஒரு ஹோல் லைஃப் மற்றும் என்டோவ்மென்ட் திட்டமாகும். இந்த பாலிசியில் 90 நாட்கள் முதல் கொண்டு 55 வயது வரையிலானவர்கள் இணைந்து கொள்ளலாம்.

நீண்டகால திட்டம்

நீண்டகால திட்டம்

இது ஒரு நீண்டகால திட்டமாகும். இந்த திட்டத்தில் பாலிசியின் முதிர்வு காலம் தொடங்கி, இறுதி காலம் வரையில் நன்மையை கொடுக்கின்றது. மேலும் பாலிசி முடிவுக்கு பிறகு ஒரு மொத்த தொகையும் கிடைக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும் போட்டு வைக்கலாம் என்பதால், அவர்களின் கல்வி, திருமணம் இது போன்ற செலவுகளுக்கும் வருமானத்தினை உறுதியளிக்கிறது.

சிறப்பு பலன் என்ன?

சிறப்பு பலன் என்ன?

இந்த பாலிசியின் காலம் நுழைவு வயதில் இருந்து 100 ஆண்டுகளாகும். இந்த பாலிசியின் முதிர்வு வயது 100 வயதாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்ச உறுதி தொகை என்பது 2 லட்ச ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. மேலும் பாலிசிதாரர் 100 வயதுக்கு முன் இறந்து விட்டால், அவரது நாமினிக்கு முழு நன்மையும் கிடைக்கும்.

100 வயது வரையில் பலன்

100 வயது வரையில் பலன்

ஜீவன் உமாங் திட்டத்தில் பாலிசி முதிர்வடைந்த பிறகு, எல் ஐ சி ஆண்டுதோறும் பாலிசி தொகையில் 8% செலுத்தும். பாலிசிதாரரின் பிரீமியம் செலுத்தும் காலம் 70 வயதாக இருந்தால், அந்த நபர் 100 வயது வரையில் பாலிசியின் முழு பலனையும் பெறுவார்.

வருடம் ரூ.40,000

வருடம் ரூ.40,000

உதாரணத்திற்கு தினசரி 44 ரூபாய் செலுத்துவதன் மூலம், மாதம் 1302 ரூபாய் செலுத்துவீர்கள். வருடத்திற்கு பிரீமியமாக 15,298 ரூபாயாக செலுத்துவீர்கள். நீங்கள் 30 வருடத்திற்கு இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்தியுள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். 30 வருடத்திற்கு, 4.58 லட்சம் ரூபாய் செலுத்தியிருப்பீர்கள். உங்களுடைய 31வது வருடத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் எல் ஐ சி 40,000 ரூபாய் உங்களுக்கு செலுத்த தொடங்கும்.

மொத்தம் ரூ.27.60 லட்சம்+ டெர்ம் தொகை

மொத்தம் ரூ.27.60 லட்சம்+ டெர்ம் தொகை

இதனை 100 ஆண்டுகள் வரையில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் மொத்தம் 27.60 லட்சம் ரூபாய் பெற்றிருப்பீர்கள். ஒரு வேளை துரதிஷ்டவசமாக பாலிசிதாரர் இறந்து விட்டால் அல்லது ஊனம் ஏற்பட்டால், அதற்கு டெர்ம் நன்மையும் கிடைக்கும். இந்த பாலிசிக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகையும் உண்டு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

invest Rs.44 to get over Rs.27 lakh in LIC jeevan umang policy

invest Rs.44 to get over Rs.27 lakh in LIC jeevan umang policy/தினசரி ரூ.44 ரூபாய் போதும்.. ரூ.27 லட்சம் கேரண்டி.. எவ்வளவு ஆண்டு முதலீடு.. என்ன திட்டம்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X