நீங்கள் ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டத்தைத் தேடுகிறீர்களா? மாதத்திற்கு ரூ. 5,000 வரை முதலீடு செய்ய நீங்கள் தயாரா? எனவே அரசாங்கம் பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்தைப் கொடுத்துள்ளது. அதாவது போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்புத்தொகை (RD) தான். எந்தவொரு இந்திய குடிமகனும் வெறும் 100 ரூபாய் வைப்புத்தொகையுடன் தொடர் வைப்புத்தொகையைத் தொடங்கலாம்.
RD முதலீடுகளுக்கு வரம்பு இல்லை என்பது மக்களுக்கு வாய்ப்புகளை அதிகரிக்கிறது. முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை ரூ.10 இன் மடங்குகளில் அதிகரிக்கலாம். இப்போது நீங்கள் ஒரு RD-யில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம். இந்த நிலையில், 5 வருட கால அவகாசம் முடிந்ததும் உங்கள் கணக்கில் தோராயமாக ரூ.3,56,830 பெறுவீர்கள். இதில், ரூ.3 லட்சம் உங்கள் மொத்த முதலீடு மற்றும் ரூ.56,830 வட்டி கிடைக்கும்.

அதே முதலீட்டை நீங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக வைத்துக்கொள்வோம். இதன் பொருள் உங்கள் RD-யில் மொத்த முதலீட்டு காலம் 10 ஆண்டுகள் ஆகும். இது நிகழும்போது, காலக்கெடுவின் முடிவில் உங்கள் கணக்கில் ரூ.8,54,272 இருக்கும். இதில், ரூ.2,54,272 வட்டி வருமானம். இந்த மதிப்பீடுகள் தற்போதைய வட்டி விகிதங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்
தொடர் வைப்புத் திட்டம் என்பது மத்திய அரசின் சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ் வரும் ஒரு திட்டமாகும். நிதி அமைச்சகம் இதுபோன்ற முதலீட்டுத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கிறது. நிதி அமைச்சகம் சமீபத்தில் தபால் அலுவலக RDக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. அக்டோபர்-டிசம்பர் 31, 2023 காலகட்டத்திற்கு வட்டி விகிதம் 6.5% இலிருந்து 6.7% ஆக அதிகரிக்கப்பட்டது. திட்டத்தின் கூட்டு அம்சம் மிகவும் சிறப்பானது
போஸ்ட் ஆபிஸ் RD-யில் எப்படி முதலீடு செய்வது?: உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபிஸ் கிளைக்குச் சென்று RD விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கவும்.
முதல் தவணையை செலுத்துங்கள் (குறைந்தபட்சம் ரூ. 100).
தேவைப்பட்டால் நியமனதாரர் தகவல்களையும் சேர்க்கலாம்.
பின்னர் உங்கள் சேமிப்புக் கணக்கு மூலம் பண வைப்பு அல்லது தானியங்கி பற்று முறையை அமைக்கலாம்.
தொடர் கணக்குகளை இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி செயலி அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைனில் திறக்கலாம். பின்னர் நீங்கள் தானியங்கி பற்று கட்டணங்களை அமைக்கலாம்.


Click it and Unblock the Notifications