சேமிப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருக்க வேண்டிய முக்கியமான விஷயம். சேமிக்காமல் வரும் பணத்தை எல்லாம் செலவழித்தால் எதிர்பாராத நேரங்களில் கடன் பெறவேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு சிரமமான சூழ்நிலை வரும் போது உங்கள் உறவினர்களோ அல்லது நன்கு பழகிக் கொண்டிருப்பவர்களோ? உதவிக்கு வருவார்கள் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை.
பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்து வைப்பதும் உதவிகரமானதாக இருக்கும். வணிகங்களில் ஈடுபடுபவர்கள், பணிபுரிபவர்கள் போன்றோர் வெவ்வேறு இடங்களில் பணத்தை முதலீடு செய்கின்றனர். சிலர் போஸ்ட் ஆபீஸ்கள், வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள் என தங்கள் விருப்ப திட்டத்தில் பணத்தை போடுகின்றனர்.

அந்த வகையில் முன்னணி பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவும் பல்வேறு திட்டங்களை வழங்குகிறது. மாதத்திற்கு வெறும் 593 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்வதன் மூலம் சிரமமின்றி ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்.
எஸ்பிஐ வங்கியில் லக்பதி RD என்ற திட்டம் வழங்கப்படுகிறது. RD திட்டம் என்றால் உங்களுக்கே தெரியும்.. மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். ஒட்டுமொத்தமாக சேர்த்து முதலீடு செய்ய முடியாதவர்கள் ரெக்கரிங் டெபாசிட் என்று சொல்லப்படுகிற RD திட்டத்தை தான் தேர்ந்தெடுக்கின்றனர். தற்போது SBI வழங்கும் இந்த லக்பதி RD திட்டத்திற்கு 6.7 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மூத்தக்குடிமக்களாக இருந்தால் ஆண்டுக்கு 7.25 % வட்டி வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களால் கஷ்டம் இன்றி சேமிக்க முடியும். மாதத்திற்கு 593 ரூபாய் டெபாசிட் செய்து வந்தால் 10 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம் சேமிக்கலாம். ஆனால் அதைவிட சீக்கிரமாக ரூ. 1 லட்சம் பணம் வேண்டும் என்று நினைத்தால் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மாதம் 2502 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். மூத்த குடிமக்களாக இருந்தால் 3 வருடங்களுக்கு 2482 ரூபாய் டெபாசிட் செய்தால் போதுமானது.
எந்த ஒரு இந்திய குடிமகனும் எஸ்பிஐ வழங்கும் லக்பதி RD திட்டத்தில் முதலீடு செய்யலாம். தனிநபர் கணக்கு தொடங்கலாம், இல்லை என்றால் கூட்டுக்கணக்காகவும் முதலீடு செய்யலாம். லக்பதி RD திட்டத்தில் கணக்கு தொடங்க அருகில் உள்ள எஸ்பிஐ கிளைக்குச் செல்ல வேண்டும். அங்கு லக்பதி RD திட்டம் தொடர்பான படிவத்தைப் பெற்று நிரப்ப வேண்டும். அவர்கள் கேட்கும் பிற ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த பிறகு தவணை தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிலிருந்து தானாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
மேலே கூறப்பட்டுள்ள தொகையை தான் முதலீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. உங்களுக்கு எவ்வளவு வருமானம் வேண்டும்? என்பதைப் பொறுத்து நீங்களே தேர்ந்தெடுக்கலாம். அதற்கு ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம். அதில் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? எவ்வளவு வட்டி? என்ற விவரங்களை வழங்கினால் போதும், முதிர்வு காலம் முடிந்து உங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். தகவல் அறிந்து முதலீட்டு முடிவுகள் எடுப்பது உங்களுக்கும் நல்லது தானே!


Click it and Unblock the Notifications