சாமானிய மக்கள் மத்தியில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு. அது சிறு சேமிப்பு திட்டங்களாக இருந்தாலும் சரி, இன்சூரன்ஸ் திட்டங்களாக இருந்தாலும் சரி.
அதிலும் இன்றைய காலக்கட்டத்தில் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இதே காப்பீட்டு தொகையில் ஒரு இன்சூரன்ஸினை எடுக்க வேண்டுமெனில் அதிகளவு பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
குறைந்த பிரீமியத்தில் சாமானிய மக்களுக்கு பயன் அளிக்கும், கிராம சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு (Gram Sumangal Rural Postal Life Insurance Schem) திட்டத்தினை தான்.
சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம்
சுமங்கல் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு திட்டம் என்பது ஒரு மணி பேக் பாலிசியாகும். குறிப்பாக இது கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. அரசு இதுபோன்ற திட்டங்களை குறைந்த வருவாய் உள்ள மக்களை இலக்காக கொண்டு அறிமுகம் செய்து வருகின்றது. இதில் சந்தை அபாயம் இல்லை. நிலையான கணிசமான வருவாய் உண்டு. இதனால் இன்றளவிலும் நல்ல லாபகரமான திட்டங்களாக உள்ளன.
அதிகபட்ச க்ளைம்
இந்த பாலிசியில் 14 லட்சம் ரூபாய் வரையில் க்ளைம் செய்து கொள்ள முடியும். இந்த பாலிசியில் இரண்டு திட்டங்கள் உள்ளன. ஒன்று 15 ஆண்டுகால பாலிசி. மற்றொன்று 20 ஆண்டுகால பாலிசி. இந்த பாலிசியின் நுழைவு வயது 19 வயதாகும். அதிகபட்ச வயது 45 வயதாகும். இதில் பாலிசியின் பலன்கள் கணிசமான முறையில் பிரித்து தரப்படுகிறது.
பாலிசியின் நன்மைகள் என்ன
இந்த திட்டத்தின் நன்மைகள் இதில் 15 ஆண்டுக் கால பாலிசியில்,
6 ஆண்டுகள் - 20%
9 ஆண்டுகள் - 20%
12 ஆண்டுகள் - 20%
15 ஆண்டுகள் - 40% + போனஸ்
இதே 20 ஆண்டுக் கால பாலிசியில்
8 ஆண்டுகள் - 20%
12 ஆண்டுகள் - 20%
16 ஆண்டுகள் - 20%
20 ஆண்டுகள் - 40% + போனஸ் -ம் கிடைக்கும்
தினசரி ரூ.95 முதலீடு
இந்த திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 95 ரூபாய் முதலீடு செய்தால், திட்டத்தின் முடிவில் உங்களுக்கு 14 லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளது. இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 10 லட்சம் உறுதி தொகையாக உள்ளது. இதே குறைந்தபட்சம் 10,000 ரூபாய் உறுதி தொகையாக உள்ளது.
பிரீமியம் எவ்வளவு?
இதற்கான பிரீமியம் தொகை நாள் ஒன்றுக்கு 95 ரூபாய் மட்டுமே, அதாவது வருடத்திற்கு 32,735 ரூபாயாகும். இதில் 15 வருட பாலிசியினை ஒருவர் எடுத்தால் எல்லா நன்மைகளும் சேர்த்து அவருக்கு 13.72 லட்சம் ரூபாய் நன்மை கிடைக்கும்.
நாமினி வசதி உண்டு
பாலிசியை எடுத்துக் கொண்ட பிறகு பாலிசி காலத்தில் இறக்கவில்லை என்றால், மணி பேக் பலனையும் அவரே பெறுவார். ஒரு வேளை துரதிஷ்டவசமாக பாலிசி எடுத்த நபர் இறந்து விட்டால், அவரது நாமினிக்கு போனஸும் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications