இன்றைய காலத்தில், நிரந்தர வைப்பு திட்டங்கள் என்பது பாதுகாப்பான மற்றும் சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும். இது குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு வகையாக கருதப்படுகிறது. நிரந்தர வைப்பு என்பது நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் செலுத்தும்போது, அதற்கு அந்த நிறுவனம் உங்களுக்கு ஒரு வட்டி விகிதத்தை தருகிறது. இந்த திட்டத்தின் காலம் முடிந்தவுடன், உங்கள் முதலீடும், அதற்கான வட்டியும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பணத்தை எவ்வளவு காலத்திற்கு சேமிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும் (உதாரணமாக 6 மாதங்கள், 1 வருடம், 5 வருடம்).
இந்த சூழலில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழக்கமான நிரந்தர வைப்பு (Fixed Deposit - FD) திட்டங்களுடன் கூடிய சிறப்பு வைப்பு திட்டங்களையும் வழங்கி வருகின்றன. இந்த சிறப்பு திட்டங்கள் குறைந்த காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. மேலும், இது வழக்கமான FDs-ஐ விட அதிக வட்டி தருகின்றன. இவை வழக்கமான FDs போலவே, மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கிறது.

Central Bank of India வங்கியின் சிறப்பு வைப்புத் திட்டங்களை பொறுத்தவரை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு உயர்ந்த வட்டி விகிதம் கிடைக்கிறது. மூத்த குடிமக்களுக்கும் கூடுதல் வட்டி கிடைக்கிறது. அதுவே, யூனியன் வங்கியின் சிறப்பு வைப்புத் திட்டத்தில், வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் மட்டுமே கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு போட்டி விகிதத்தில் வட்டி இருக்கும். மூத்த குடிமக்களுக்கு மேலும் அதிக வட்டி கிடைக்கும்.
Central Bank of India வங்கியில் 1111 நாள் கால அவகாசத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்யும் போது 7.50% வட்டியும், மற்றவர்களுக்கு 7% வட்டியும் வழங்கப்படுகிறது. Central Bank of India-வில் 1111 நாள் சிறப்பு FD-ல் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மூத்த குடிமக்களுக்கு 1,25,379 ரூபாய் கிடைக்கும். மற்றவர்களுக்கு 1,23,519 ரூபாய் கிடைக்கும்.
அதுவே ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு ரூ.2,50,759, மற்றவர்களுக்கு ரூ.2,47,038 கிடைக்கும். ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு ரூ.3,76,138, மற்றவர்களுக்கு ரூ.3,70,557 கிடைக்கும். ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு ரூ.5,01,517, மற்றவர்களுக்கு ரூ.4,94,076 கிடைக்கும். ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு ரூ.6,26,897, மற்றவர்களுக்கு ரூ.6,17,595 கிடைக்கும்.
யூனியன் வங்கியில் 456 நாள் சிறப்பு FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.35% வட்டியும், மற்றவர்களுக்கு 6.85% வட்டியும் வழங்கப்படுகிறது. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு ரூ.1,09,526, மற்றவர்களுக்கு ரூ.1,08,856, ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு ரூ.2,19,052, மற்றவர்களுக்கு ரூ.2,17,712 கிடைக்கும். ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு ரூ.3,28,578, மற்றவர்களுக்கு ரூ.3,26,567 கிடைக்கும். ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் மூத்த குடிமக்களுக்கு ரூ.4,38,104, மற்றவர்களுக்கு ரூ.4,35,423 கிடைக்கும். ரூ.5 லட்சம் முதலீட்டிற்கு மூத்த குடிமக்களுக்கு ரூ.5,47,630, மற்றவர்களுக்கு ரூ.5,44,279 கிடைக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications