டெல்லி: கடந்த ஆண்டு முதலீட்டாளார்களுக்கு மறக்க முடியாத ஆண்டாகவே இருந்திருக்கும். ஏனெனில் எந்தவொரு துறை எடுத்தாலும், மந்தநிலை, வீழ்ச்சி, நஷ்டம் என சுற்றிலும் பலத்த அடி வாங்கிக் கொண்டிருந்தன.
அதிலும் அன்னிய முதலீடுகளும் சரி, உள்நாட்டு முதலீடுகளும் பலமான வீழ்ச்சி கண்டன. இதன் எதிரொலியாக இந்திய ரூபாயும் பலமான வீழ்ச்சியை கண்டது.

பொதுவாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு மற்றும் பங்கு சந்தை முதலீடு என்றாலே அது சிக்கலானதொரு கடினமானதொரு முதலீடாக தெரியும். அதிலும் பங்கு சந்தை முதலீடு என்றால் மிகக் கடினமானதொரு முதலீடாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் தற்போது நாட்டில் நிலவி மந்த நிலையின் எதிரொலியாக அனைத்து முதலீடுகளும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.
குறிப்பாக ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் கடந்த 2019ம் ஆண்டில் 41% வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. கடந்த 2019ம் ஆண்டில் முதலீட்டாளர்கள் 75,000 கோடி ரூபாய் ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடுகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது நாட்டில் நிலவி வரும் வீழ்ச்சி, பொருளாதார மந்த நிலையினை எதிரொலிக்கும் விதமாக சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான முதலீடுகளை விட முதலீடுகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி எனினும் நடப்பு ஆண்டில் சந்தை சிறப்பாக செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரிக்கலாம் என்றும், இதனால் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பகிறது.
எனினும் சந்தையில் நிலவி வரும் ஏற்ற இறக்கம் இன்னும் சில காலம் தொடரக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் சந்தை நிலையற்ற தன்மையில் இருந்தாலும் முதலீட்டாளர்கள் இந்த நிலையற்ற தன்மையிலிருந்து அவர்களின் செல்வத்தை உருவாக்க விரும்புவார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம். இதனால் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியும், தலைமை செயல் அதிகாரியுமான அஸ்வானி பாட்டியாவும் கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டில் 74,870 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்ததாகவும், இது கடந்த 2018ம் ஆண்டில் 1.2 டிரில்லியன் ரூபாயை ஈர்த்தகதாகவும் கூறப்படுகிறது. இதுவே 2017ம் ஆண்டில் 1.33 டிரில்லியன் ரூபாயும், 2016ல் 51,000 கோடி ரூபாயும் முதலீடுகளை மட்டுமே ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தம் மியூச்சுவல் ஃபண்டுகளின் முதலீடு 2019ம் ஆண்டில் டிசம்பர் மாத இறுதியில் 8.04 டிரில்லியன் ரூபாயாக உள்ளது. இதே 2018ல் 7.87 டிரில்லியன் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications