சாமானிய மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே பொதுத்துறை வங்கிகள், தபால் துறை போன்றவை பல முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் நிரந்தர வருமானம், 100 சதவீத பாதுக்காப்பு, குறைந்த கட்டண சேவை, அதிகப்படியான பலன்கள் என பல்வேறு சிறப்புகளை கொண்டது.
இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இத்தகைய திட்டம் இருப்பது பலருக்கும் தெரிவது கிடையாது. அப்படி தெரிந்தாலும் அதை முழுமையாக பயன்படுத்திக்கொள்வது கிடையாது. அரசு அமைப்புகள் இதை மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்காதது ஒரு காரணமாக இருந்தாலும், மக்கள் அரசு திட்டங்கள் குறித்து போதுமான விழிப்புணர்வு பெற வேண்டும்.

அப்படி சாமானிய மக்கள் பெரிய அளவில் பலன் பெற கூடிய திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் வழங்கும் விபத்து காப்பீடு வெறும் 755 ரூபாய் முதலீட்டில் ஒருவருக்கு 15 லட்சம் அளவிலான இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்கும். இத்திட்டம் முக்கியமான வாகன ஓட்டுனர்கள் குறிப்பாக சரக்கு வாகனங்கள் ஓட்டுவோர், கிக் தொழிலாளர்களுக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB) புதிய தனிநபர் விபத்துக் காப்பீடு திட்டங்களை வழங்குகிறது. இது மிகக் குறைந்த பிரீமியத்தில் பெரிய அளவிலான பாதுகாப்பு தருகிறது. ஹெல்த் ப்ளஸ், எக்ஸ்பிரஸ் ஹெல்த் ப்ளஸ் ஆகிய இரு வகைகளில் மொத்தம் 3 திட்டங்களை வழங்குகிறது.
ஆண்டுக்கு ஒரு முறை பிரீமியம் செலுத்தி ஒரு ஆண்டு பாதுகாப்பை பெறலாம். இது டாடா ஏஐஜி, பஜாஜ் அலையன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். இது மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
ஹெல்த் ப்ளஸ் ஆப்ஷன் 1:
இத்திட்டத்தில் ரூ.5 லட்சம் காப்பீடு அளிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் குடும்பத்துக்கு முழு தொகை கிடைக்கும். குழந்தை திருமண செலவுக்கு ரூ.50,000 வரை உதவி உள்ளது. எலும்பு முறிவுக்கு ரூ.25,000 வரை பலன் உள்ளது. இத்திட்டத்திற்கான வருடாந்திர பிரீமியம் ரூ.355 மட்டுமே. இது குறைந்த செலவில் நல்ல பாதுகாப்பு தருகிறது.

ஹெல்த் ப்ளஸ் ஆப்ஷன் 2:
இத்திட்டத்தின் ரூ.10 லட்சம் காப்பீடு அளிக்கப்படுகிறது. உயிரிழப்பு அல்லது நிரந்தர ஊனத்துக்கு முழு தொகை குடும்பத்துக்கு கிடைக்கும். எலும்பு முறிவுக்கு ரூ.25,000, மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் வரை பெறலாம். பாலிசிதாரர் கோமா நிலைக்கு சென்றால் வாரந்தோறும் sum insured தொகையில் 1 சதவீதம் உதவி கிடைக்கும். இறுதி சடங்கு செலவுக்கு ரூ.5,000, குழந்தை கல்விக்கு ரூ.50,000 உதவியும் கிடைக்கும். இத்திட்டத்திற்கான வருடாந்திர பிரீமியம் 555 ரூபாய் மட்டுமே.
ஹெல்த் ப்ளஸ் ஆப்ஷன் 3:
இத்திட்டம் மூலம் ரூ.15 லட்சம் காப்பீடு அளிக்கப்படுகிறது. உயிரிழப்பு, நிரந்தர ஊனத்துக்கு முழு தொகை கிடைக்கும். குழந்தை திருமணத்துக்கு ரூ.1 லட்சம் வரை உதவி உள்ளது. எலும்பு முறிவு, மருத்துவ செலவு, கோமா, இறுதி செலவு, கல்வி உதவி ஆகியவை ஆப்ஷன் 2 போல அனைத்து சலுகைகளும் இதில் கிடைக்கிறது. இத்திட்டத்திற்கான வருடாந்திர பிரீமியம் 755 ரூபாய் மட்டுமே.
இத்திட்டத்தில் சேருவது எப்படி:
IPPB சேமிப்பு கணக்கு உள்ளவர்கள் இணையதளம் மூலம் அல்லது அஞ்சல் ஊழியர் மூலம் சேரலாம். இல்லையெனில் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தில் விவரம் பெற்று நேரடியாக சேரலாம். பாலிசி எடுக்கும் முன் பாலிசி விவரங்களை கவனமாக படிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினால் ஒரு ஆண்டுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் பாதுகாப்பு உள்ளது. அடுத்த ஆண்டு மீண்டும் இப்பாலிசியை பெற வேண்டும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications