எதிர்பாராத விதமாக கடைசி நேரங்களில் பயணம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட்களை வழங்குகிறது. இந்த டிக்கெட்களை IRCTC இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இருப்பினும் தற்பொழுது தட்கல் டிக்கெட்களுக்கு அதிக தேவை இருப்பதால் உங்களுடைய டிக்கெட்டை பாதுகாப்பது மிகவும் முக்கியம். அதற்கு கீழ்க்காணும் விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.
முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும்: தட்கல் டிக்கெட்களை ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும். ஏசி கிளாஸ் டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கும் ஏசி அல்லாத பிற டிக்கெடுகள் காலை 11 மணிக்கு கிடைக்கும். கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க இந்த நேரங்களுக்கு முன்பே ஒருவர் தனது IRCTC அக்கவுண்டில் உள்நுழைய வேண்டும்.

விவரங்களை வைத்திருத்தல்: தட்கல் படிவத்தை நிரப்புவதற்கு தேவையான அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே வைத்திருப்பது அவசியம். இதனால் தட்கல் திறக்கப்பட்டதும் உடனடியாக முன்பதிவு செய்யலாம்.
2 அல்லது 3 சாதனங்களில் முன்பதிவு செய்ய முயற்சித்தல்: அதேபோல ஒரே நேரத்தில் 2 அல்லது 3 சாதனங்களில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முயற்சித்தால் கண்டிப்பாக ஒரு டிக்கெட்டை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் இதை செய்வதற்கு உங்களுக்கு நிலையான இன்டர்நெட் வசதி இருக்க வேண்டும். எந்த தடங்கலையும் தவிர்க்க கண்டிப்பாக உங்கள் இன்டர்நெட்டின் வேகம் 4 Mbps-க்கும் குறைவாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
சரியான கேப்ட்சா கோடை என்டர் செய்தல்: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் மேலும் சிலர் செய்யக்கூடிய பொதுவான தவறு என்னவென்றால் கேப்ட்சா குறியீட்டை தவறாக டைப் செய்து விடுவது. இதனால் நீங்கள் செய்த அனைத்து செயல் முறையையும் மீண்டும் செய்ய வேண்டி இருக்கலாம். மேலும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய டிக்கெட்டை இழக்க நேரிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இன்டர்நெட் பேங்கிங்: கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது இன்டர்நெட் பேங்கிங் மற்றும் UPI பரிவர்த்தனைகள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும். ஏனெனில் கிரெடிட் கார்டுகளை வைத்து டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பல விவரங்களை கொடுக்க வேண்டி வரும். இதனால் யுபிஐ-ஐ தேர்வு செய்து பணம் செலுத்துவது எளிய செயல்முறையாக இருக்கும். மேலும் உங்கள் மொபைல் ஃபோனை அருகிலேயே வைத்திருங்கள். அப்பொழுதுதான் OTP-கள் அனுப்பப்பட்ட உடன் அவற்றை பதிவிடலாம்.
வார நாட்களில் பயணம் செய்வது: மேலும் நெரிசலான ரயில்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வார இறுதி நாட்களை விட வார நாட்களில் பயணம் செய்வது எளிதாக டிக்கெட் பெறுவதற்கு உதவியாக இருக்கும். இதை எல்லாம் செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால்.. உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்டேஷனிலிருந்து பயணம் செய்வது பற்றி யோசிக்கலாம்.
மேற்கண்ட அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு தட்கல் டிக்கெட் முன் பதிவு செய்யும் போது எளிதாக நீங்களும் டிக்கெட் பெறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications