ரூ.15 லட்சம் அபராதம்.. பாரதி ஆக்சாவுக்கு கிடுக்குபிடி.. IRDAI அதிரடி நடவடிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய காப்பீடு மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI, முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான பாரதி ஆக்சாவுக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

 

ஏன் என்ன காரணம்? எதற்காக 15 லட்சம் ரூபாய் அபராதம். மற்ற விவரங்கள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ஐஆர்டிஏஐ மோட்டார் காப்பீடு தொடர்பான பல்வேறு விதிமுறைகளை மீறியதற்காக காப்பீட்டு ஆணையம், பாரதி ஆக்சாவுக்கு இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தவறான கணக்கு

தவறான கணக்கு

இது மூன்றாம் தரப்பு மோட்டார் இன்சூரன்ஸ் வணிகம் தொடர்பான விதிமுறைகளை பின்பற்றாததற்காக 10 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த 2017 - 2018ல் மூன்றாம் தரப்பு வாகன இன்சூரன்ஸ் வணிகத்தில், 399.94 கோடி ரூபாய்க்கு எதிராக, 380 கோடி ரூபாய் வணிக கணக்கு எழுதப்பட்டுள்ளதாகவும், மீதம் 19.94 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

எவ்வளவு அபராதம்

எவ்வளவு அபராதம்

இந்த பிரச்சனைக்களுக்கு மத்தியில் 1 கோடி ரூபாய் அபராதம் விதிகப்பட்ட நிலையில், அதன் பின்னர் 10 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதே மற்றொரு வழக்கில் பணம் செலுத்தும் வழிகாட்டுதல்களில் விதிமுறைகளை மீறியதற்காக 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

இணைப்பு நடவடிக்கை
 

இணைப்பு நடவடிக்கை

இதற்கிடையில் கடந்த நவம்பரில் தான் இந்திய இன்சூரன்சஸ் கட்டுப்பாட்டு ஆணையமான ஐஆர்டிஏஐ அமைப்பு நாட்டின் இரு முக்கியத் தனியார் இன்சூரன்ஸ் சேவை நிறுவனங்களான பார்தி AXA - ஐசிஐசிஐ லம்பார்ட் இணைக்க ஒப்புதலை அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்புதல் மூலம் ஐசிஐசிஐ லோம்பார்ட் அடுத்தகட்ட பணியாகப் பிற அரசு அமைப்புகளிடம் தேவையான ஒப்புதல்களைப் பெறுவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது எனப் பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் அந் நிறுவனம் சமீபத்தில் கூறியிருந்தது.

யார் எவ்வளவு பங்கு?

யார் எவ்வளவு பங்கு?

இந்த கையகப்படுத்தலுக்கு பிறகு பார்தி AXA - ஐசிஐசிஐ லம்பார்ட் கூட்டணியானது சந்தையில் 8.7% அளவுக்கு அதன் மதிப்பினை அதிகரிக்கும். பார்தி AXA ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பார்தி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் 51 சதவீத பங்குகளையும், பிரான்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனமான AXA 49 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRDAI imposes Rs.15 lakh penalty on Bharti AXA

Insurance updates.. IRDAI imposes Rs.15 lakh penalty on Bharti AXA
Story first published: Saturday, January 2, 2021, 19:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X