அடடே.. தினமும் ரூ.95 போதும்.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.. சுமங்கல் திட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுத்தர மக்கள் மற்றும் கீழ்தட்டு மக்கள் மத்தியில் இன்றும் அஞ்சலக திட்டங்கள் என்பது நல்ல வரவேற்புள்ள திட்டங்களாகவே பார்க்கப்படுகின்றன.

 

இந்திய அஞ்சல் துறை பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்கள் என பலவற்றையும் வழங்கி வருகின்றன.

குறிப்பாக இதுபோன்ற திட்டங்கள் குறைந்த வருமானம் உடைய நபர்களை குறிவைத்தே தொடங்கப்படுகின்றன. குறிப்பாக கிராமப்புற நபர்களுக்கு இது பயனுள்ளதாக அமையலாம் எனலாம்.

டிக்டாக், யூடியூப்-க்கு கட்டம் கட்டும் எலான் மஸ்க்.. ஓரே கல்லில் 2 மாங்காய்..! டிக்டாக், யூடியூப்-க்கு கட்டம் கட்டும் எலான் மஸ்க்.. ஓரே கல்லில் 2 மாங்காய்..!

பாதுகாப்பான திட்டம்

பாதுகாப்பான திட்டம்

அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருக்கும் திட்டம் சுமங்கல் கிராமப்புற அஞ்சலக லைஃப் இன்சூரன்ஸ் திட்டமாகும். இந்த திட்டத்தினை 19 வயது முதல் 45 வயது வரையிலான, இந்திய குடி மக்கள் யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.

பொதுவாக இன்சூரன்ஸ்கள் நாம் இல்லாவிட்டாலும் நமது குடும்பத்தினருக்கு நிதி ரீதியாக பாதுகாப்பான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

சிறிய அளவில் பிரீமியம்

சிறிய அளவில் பிரீமியம்

இன்சூரன்ஸ் என்றாலே பெரியளவில் பிரீமியம் இருக்கும் என்ற தவறான எண்ணம் இருந்து வருகின்றது. இதனால் பலரும் முதலீடு செய்யவே யோசிக்கின்றனர். ஆனால் இன்று மத்திய, மாநில அரசுகள், அஞ்சலகங்களும் சில இன்சூரன்ஸ் திட்டங்களைக் கொண்டுள்ளனர். இவற்றில் சாமானியர்களுக்கு ஏற்ற அளவில் பிரீமியம் என்பது சிறியளவில் இருக்கும்.

ரூ.10 லட்சம் வரையில் காப்பீடு
 

ரூ.10 லட்சம் வரையில் காப்பீடு

அந்த வகையில் அஞ்சலத்தில் உள்ள கிராம சுமங்கல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்றழைப்படும் திட்டமானது, 10 லட்சம் ரூபாய் வரையில் காப்பீட்டினை வழங்குகிறது. பாலிசி காலத்தில் பாலிசிதாரர் துரதிஷ்டவசமாக இறந்துவிட்டால், அவரது நாமினிக்கோ அல்லது சட்டபூர்வ வாரிசுகளுக்கோ காப்பீட்டுத் தொகையானது வழங்கப்படும்.

இரு வகை முதிர்வு தொகை

இரு வகை முதிர்வு தொகை

இந்த இன்சூரன்ஸ் திட்டமானது இரண்டு வகையாக உள்ளது. இது 10 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் என இருவகையாக உள்ளது. இந்த பாலிசியில் 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் முதிர்வு காலத்தினை உடைய திட்டங்கள் உள்ளது.

முதிர்வு தொகை

முதிர்வு தொகை

இதில் 15 ஆண்டுகள் பாலிசியில் 6 மற்றும் 9 வருடம், 12 ஆண்டுகள் காலகட்டத்தில், மொத்த உத்தரவாத தொகையில் 20% பெற்றுக் கொள்ளலாம்.

இதே 20 ஆண்டு திட்டத்தில் 8 வருடங்கள், 12 ஆண்டுகள், 16 ஆண்டுகள் எனும் போது 20% தொகையினையும், முதிர்வு காலத்தில் 40% தொகையினை பெற்றுக் கொள்ளலாம்.

20 வருட பாலிசி?

20 வருட பாலிசி?

உதாரணத்திற்கு நீங்கள் 25 வயதில் 20 வருட பாலிசியினை எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இங்கு ஒவ்வொரு நாளும் நீங்கள் 95 ரூபாயினை பிரீமியமாக செலுத்த வேண்டும். மாதம் 2850 ரூபாயினை செலுத்துவீர்கள். இதன் மூலம் ஆண்டுக்கு 17,100 ரூபாயினை செலுத்துவீர்கள். 20 ஆண்டுகள் பாலிசி முதிர்வுக்கு பிறகு 14 லட்சம் ரூபாய் முதிர்வு தொகையாக கிடைக்கும்.

எவ்வளவு தொகை?

எவ்வளவு தொகை?

20 ஆண்டு பாலிசி முதிர்வு தொகையில் 14 லட்சம் ரூபாய் கிடைக்கும். 7 லட்சம் ரூபாய் மேற்கூறிய 8வது, 12வது மற்றும் 16வது ஆண்டுகளில் காப்பீடு செய்யப்பட்ட தொகையில் 20% பெறுவீர்கள். மூன்று தவணைகளில் நீங்கள் 4.2 லட்சம் ரூபாயினை பெறுவீர்கள். 20வது ஆண்டில் நீங்கள் 2.80 லட்சத்தினை பெறுவீர்கள். அதனை தொடர்ந்து 1000 ரூபாய்க்கு 48 ரூபாய் போனஸாகப் பெறுவீர்கள். இந்த ஆண்டு 48 ரூபாய் போனஸாகப் பெறுவீர்கள். இந்த தொகை 20 ஆண்டுகளில் 6.72 லட்சமாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Is a daily investment of Rs.95 enough? Will you get Rs 14 lakh at maturity?

Sumangal is a rural postal life insurance scheme. Any Indian citizen between 19 years to 45 years can start this scheme. It provides cover up to Rs 10 lakh.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X