இந்தியாவில் சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் எல்லாம் வீடுகள் விலை பல மடங்கு உயர்ந்து நிற்கிறது. சராசரியாக நகரின் முக்கியமான ஒரு இடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க வேண்டும் என்றால் கூட ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கேட்கின்றனர். கிட்டத்தட்ட பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பங்களின் வாழ்நாள் வருமானமே இதுதான்.
இந்த சூழலில் நகரங்களில் வீடு வாங்குவது குறித்து பிரபல முதலீட்டு ஆலோசகர் பதிவு செய்துள்ள கருத்து பல விஷயங்கள் குறித்து நம்மை ஆழமாக சிந்திக்க வைக்கிறது. அக்சத் ஸ்ரீவாத்சவா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் தகவலில் இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் சொந்தமாக வீடு வாங்குவது தான் தற்போது இருக்கும் தலைமுறைகள் எடுக்கக்கூடிய மிக மோசமான ஒரு நிதி ரீதியிலான முடிவு எனக் கூறுகிறார்.

இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் ஏன் சொத்து வாங்க கூடாது என்பது குறித்து மூன்று காரணங்களை பட்டியலிட்டு இருக்கிறார். பெரு நகரங்களில் இருக்கும் இந்த ரியல் எஸ்டேட் சந்தை முழுவதுமே பில்டர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது எனவே நீங்கள் அதிக விலை கொடுத்து தான் வாங்குவீர்கள் என கூறுகிறார். இரண்டாவதாக உள் கட்டமைப்பு இல்லை , இந்திய நகரங்கள் வாழ தகுதியற்றவையாக மாறி வருகின்றன உள்கட்டமைப்புகள் இல்லை எனவே இவ்வளவு அதிக விலை கொடுத்து இந்த பகுதியில் சொத்து வாங்குவது தவறு என்கிறார்.
நீங்கள் வாங்கிய இந்த சொத்தை அடுத்த கட்டமாக விற்பனை செய்வது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனவே வாடகை வீட்டிலேயே இருந்து விடுங்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து விடுங்கள் என கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவு சமூக வலைத்தள பக்கத்தில் பலரது கவனத்தையும் பெற்று இருக்கிறது. பலரும் நகர்புறங்களில் எப்படி எல்லாம் வீடுகளின் விலையை பில்டர்கள் போலியாக உயர்த்தியுள்ளனர் என சாடி வருகின்றனர், பெரு நகரங்களில் வீடு வாங்குவது என்பது தவறான முடிவு தான் என சிலர் கூறுகின்றனர் .
இரண்டு மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஒரு நபர் குற்றம் சாட்டியிருக்கிறார். ஒரு நபர் நாம் நினைத்த இடத்தில் நமக்கு தேவையான பொழுது வீட்டை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு வாடகை வீட்டில் மட்டுமே கிடைக்கிறது என கூறியிருக்கிறார். ஒரு நபர் நீண்ட காலம் அந்த நகரில் தான் நான் வசிக்கப் போகிறேன் செட்டிலாக போகிறேன் என்பவர்கள் சொந்தமாக வீடு வாங்கலாம் மற்றவர்கள் வீடு வாங்குவது தேவையற்ற செலவு என கூறி இருக்கிறார் .
ஒரு பயனர் உங்களுடைய மொத்த பணத்தையும் வீடு வாங்க வேண்டும் என்பதற்காகவே ஒதுக்கி விடுவது என்பது மிக மோசமான ஒரு முடிவு அந்த பணத்தை நீங்கள் முதலீடு செய்தால் வாடகையை விட உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறியிருக்கிறார் . இருந்தாலும் ஒரு சிலர் சரியான இடத்தை தேர்வு செய்து நாம் சொத்து வாங்கினால் அது நல்ல லாபம் தருவதாக தான் இருக்கிறது ஆனால் இந்த முடிவு ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் நிதி மற்றும் வசதி உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டது என கூறியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications