பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் என்பது பொதுவாக முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் என்பது 15 ஆண்டுகளாகும். இது வரியில்லா முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும்.
சந்தை அபாயமும் இல்லாத நிலையில், பாதுகாப்பான ஒரு திட்டமாக பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக வட்டி விகிதமும் கணிசமாக இருப்பதால் முதலீட்டுக்கு ஏற்ற ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இடையில் முடித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. சில சமயங்களில் அஞ்சலக திட்டங்களில் இடையில் நிறுத்தி விட்டாலும், அபராதத்தினை செலுத்திவிட்டால், தொடர்ந்து கொள்ள அனுமதி உண்டு.
பிபிஎஃப் திட்டத்தினை முதிர்வுகாலத்திற்கு பிறகு, முதிர்வு தொகையை அப்படியே வருடாந்திர பங்களிப்பு என்பது செய்யாமல் வைத்திருந்தால் பலன் உண்டா? இதற்கு என்ன வருமானம் கிடைக்கும்? என்ன வரி சலுகை கிடைக்கும் என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இது முதிர்வுக்கு பிறகு கவர்ச்சிகரமான ஆப்சனாக இருக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொதுவாக பிபிஎஃப் திட்டத்தினை பொறுத்த வரையில் 15 ஆண்டுகாலம். இந்த முதிர்வுகாலத்திற்கு பின்னதாக, 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ள முடியும். அதில் நீங்கள் வழக்கம் போல முதலீடு செய்து கொண்டு தொடர்ந்து கொள்ளலாம். இதற்கு பார்ம் 4 என்ற ஆவணத்தினை நீங்கள் கொடுக்க வேண்டியிருகும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்த சிறுசேமிப்பு திட்டத்தினை எப்போதும் போல தொடர்ந்து கொள்ள முடியும்.
டெபாசிட் ஏதும் செய்யாமல் அந்த கணக்கினை தொடர்ந்து கொள்ளலாம். ஆனால் வருமானம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. வரி சலுகையும் கிடைக்காது. மாறாக சாதாரணமான சேமிப்பு கணக்கு கிடைக்கும் வட்டியை போல வருமானம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் இணைந்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகே கடன் பெறும் வசதி உண்டு. அதேபோல 6 ஆண்டுகள் முடியும் வரையில் கடன் எடுத்துக் கொள்ளலாம். உங்களது முதலீடு செய்யப்பட்ட முழுமையான தொகையும் கடனாக கிடைக்காது.
இந்த கடனிற்கு வட்டி விகிதம் என்பது, பிபிஎஃப் தொகைக்கான வட்டி விகிதத்திற்கு மேலாக 1% அதிகமாக இருக்கலாம். இது நீங்கள் திரும்ப செலுத்தும் காலம் வரையில் பொருந்தும்.
அதேபோல நீங்கள் பிபிஎஃப் திட்டத்திற்கு எதிராக வாங்கிய கடனை மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்தி விட வேண்டும். இது உங்களுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த கடனை நீங்கள் மொத்தமாகவும் திரும்ப செலுத்திக் கொள்ளலாம். அப்படி இல்லையெனில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையாக செலுத்திக் கொள்ளலாம்.
ஒரு வேளை நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திரும்ப செலுத்தவில்லை அல்லது பகுதி தொகையினை மட்டுமே நிர்ணயம் செய்த காலக்கெடுவுக்குள் திரும்ப செலுத்தியுள்ளீர்கள் எனில், 1% பதிலாக 6% கட்டணம் அதிகரிக்கலாம். இது உங்களுக்கான கால அவகாசம் முடிந்த அடுத்த நாளில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications