இந்தியாவில் இன்சூரன்ஸ் நிறுவனங்களை போன்றே அஞ்சலகமும் பல இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்கி வருகின்றது. ஆக நீங்கள் இன்சூரன்ஸ் திட்டங்களை வாங்க நினைத்தால், இது நல்ல சான்ஸ் எனலாம்.
அஞ்சலக ஆயுள் காப்பீட்டில் பல திட்டங்கள் உள்ளன. அந்த வகையில நாம் இன்று பார்க்கவிருப்பது அஞ்சலத்தின் கிராம சுரக்ஷா திட்டம் பற்றித் தான்.
பொதுவாக இன்சூரன்ஸ் திட்டங்கள் எதிர்பாராத விதமாக ஏற்படும் இழப்புகளில் இருந்து, குடும்பத்தினருக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு அளிக்கிறது. இப்படி பாதுகாப்பு அளிக்கும் திட்டங்கள் அரசின் திட்டமாக இருந்தால், இன்னும் பாதுகாப்பானது தானே. அதுவும் கூடுதலாக வரிச்சலுகையுடன் கிடைக்கும் என்றால் இன்னும் நல்லது தானே.
வயது வரம்பு
இந்திய அஞ்சலகம் மக்களின் நலனுக்காக, கிராம சுரக்ஷா அல்லது முழு ஆயுள் காப்பீடு (Gram Suraksha or Whole Life Assurance) என்ற திட்டத்தினை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது 19, அதிகபட்ச வயது 55 ஆகும்.
குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10,000 ரூபாய், அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாய் ஆகும்.
கடன் வசதி உண்டா?
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் 4 வருட முதலீட்டிற்கு பிறகு கடன் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு.
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தினை 3 வருடத்திற்கு பிறகு சரண்டர் செய்து கொள்ளலாம்.
5 வருடங்களுக்கு முன்னதாக பாலிசியை சரண்டர் செய்தால் போனஸ் கிடைக்காது.
எவ்வளவு பிரீமியம்
இந்தத் திட்டத்தில் தனிநபருக்கு பிரீமியம் செலுத்தும் சில விருப்பங்கள் உண்டு. அவை 55 ஆண்டுகள், 58 ஆண்டுகள் மற்றும் 60 ஆண்டுகளாகும்.
ஒரு நபர் 19 வயதில் 10 லட்சம் தொகைக்கான கிராம சுரக்ஷா காப்பீட்டை வாங்கினால், 55 வருடங்களுக்கான மாதாந்திர பிரீமியம் 1515 ரூபாயாக இருக்கும்.
இதே 58 வருடங்களுக்கு எனில் 1463 ரூபாயாக இருக்கும்.
அதுவே, 60 வருடங்களுக்கு 1141 ரூபாயாக இருக்கும்.
முதிர்வு தொகை எவ்வளவு கிடைக்கும்?
இந்த அஞ்சலக திட்டத்தில் 55 ஆண்டுகள் திட்டத்திற்கு முதிர்வுத் தொகை 31.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
இதே 58 வருட திட்டத்தில் முதிர்வு தொகை 33.40 லட்சம் ரூபாயாக இருக்கும்.
60 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகை 34.60 லட்சம் ரூபாயாக இருக்கும்.
போனஸ் உண்டா?
தற்போதைய நிலையில் போன்ஸ் விகிதம் வருடத்திற்கு 60,000 ரூபாய் வரையில் கொடுத்து வருகின்றது. இது ஒரு வருடத்திற்கு 1,000 ரூபாய்க்கு 60 ரூபாய் போனஸ் ஆக கிடைக்கிறது.
இந்த பாலிசியில் நாமினி வசதியும் உண்டு. ஆக பாலிசிதாரர் இறந்துவிட்டால், சலுகைகள் நாமினுக்கு கிடைக்கும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications