2023ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் திட்டத்தை அறிவித்தார். பெண்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மற்றும் தங்கத்தை மட்டுமே பாதுகாப்பாக முதலீடாக கருதக் கூடாது மற்ற முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய பெண்கள் வர வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டது. இந்த திட்டம் பெண்களுக்கான ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டம். மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் பெண்கள் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.2,00,000 வரை முதலீடு செய்யலாம்.
இந்த சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.வங்கிகளின் பிக்சட் டெபாசிட்டுக்கு கிடைப்பதை விட இந்த திட்டத்தில் அதிக வட்டி கிடைக்கிறது. இந்த பெண்களுக்கான குறுகிய கால சேமிப்பு திட்டம் வரும் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தம் அறிவித்தபோது பெண்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த திட்டத்துக்கு பெரிய வரவேற்பு அல்லது வைப்புத்தொகையும் வரவில்லை. இதனால், இந்த சேமிப்பு எதிர்வரும் பட்ஜெட்டில் இந்த சேமிப்பு திட்டம் நீட்டிப்பு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 பைனான்ஸில் உள்ள மியூச்சுவல் பண்டின் மூத்த துணை தலைவர் ரஜனி தண்டேல் கூறுகையில், 2023 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் பெண்களின் நிதி அணுகல் மற்றும் அதிகாரமளிப்பை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட பெண்கள் மத்தியில் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் முதன்மையாக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், நிதி பாதுகாப்பை உருவாக்குவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாக உள்ளது. இந்த ஆண்டு மார்ச்சில் இந்த திட்டம் முடிவுக்கு வருகிறது. எதிர்வரும் பட்ஜெட்டில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டால், பெண்களின் நிதி சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருக்கும். இருப்பினும், இந்த திட்ட நீடிப்புக்காக முதலீட்டாளர்கள் காத்திருக்கக் கூடாது. இந்த திட்டம் கிடைக்கும்போதே அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
வெல்த் டிரஸ்ட் கேபிடல் சர்வீசஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் சினேகா ஜெயின் கூறுகையில், கடந்த ஆண்டு இந்த திட்டத்திலிருந்து நல்ல வரவேற்பும், வைப்புத்தொகையும் அரசாங்கத்துக்கு கிடைக்காததால் இது நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை. மக்கள் அதிகளில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகளுக்கு மாறி விட்டனர். எனவே இந்த திட்டத்துக்கான வரவேற்பு முந்தைய ஆண்டு போல அதிகமாக இருக்காது என்று தெரிவித்தார்.
Story written by: Subramaian
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications