இன்றைய கால இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் கனவு அம்சங்களில் ஒன்று ஐபோன். கையில் ஒரு லட்சம் ரூபாய் இல்லையென்றால் என்ன, மாதம் வெறும் 5,000 ரூபாய் கட்டினால் போதும், லேட்டஸ்ட் ஐபோன் உங்கள் கையில் என்பது போன்று வரும் விளம்பரங்கள் நம்மை எளிதில் கவர்ந்து வருகின்றன.
ஆனால் நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) என்ற பெயரில் நாம் வாங்கும் இந்த ஒரு லட்சம் ரூபாய் போன், உண்மையில் நம் பாக்கெட்டில் இருந்து எவ்வளவு பணத்தை உறிஞ்சுகிறது என்று நாம் எப்போதாவது கணக்குப் பார்த்ததுண்டா?ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில், ஒரு மாத இஎம்ஐ என்பது வெறும் தவணை தொகை மட்டுமல்ல, அது உங்கள் குழந்தையின் பள்ளி கட்டணமாகவோ, அவசர மருத்துவ செலவாகவோ அல்லது உங்கள் எதிர்கால சேமிப்பாக இருக்கலாம். மதிப்பு குறையும் ஒரு எலக்ட்ரானிக் பொருளுக்காக, உங்கள் உழைப்பின் பெரும் பகுதியை கடனாகக் கொடுப்பது புத்திசாலித்தனமா? உதாரணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஐபோனை இஎம்ஐ-யில் வாங்கும் போது நீங்கள் செலுத்தும் மறைமுக கட்டணங்கள், வட்டி மற்றும் அந்தப் பணத்தை நீங்கள் முதலீடு செய்திருந்தால் கிடைத்திருக்கக் கூடிய லாபம் என அனைத்து கணக்குகளையும் விரிவாகப் பார்க்கலாம் வாருங்கள்.

ஐபோன்களை பொறுத்த வரையில் இந்தியாவில் ஒரு ஆடம்பரமான வாங்குதலாகவே பார்க்கப்படுகிறது. பலரும் தங்கள் கையில் பணம் என்பது இல்லாவிட்டாலும் கூட, கடன் வாங்கியேனும் வாங்க ஆசைப்படுகின்றனர். இல்லையேல் மாத தவணை அல்லது நோ காஸ்ட் இ எம் ஐ-ல் வாங்க நினைக்கிறார்கள். இது பார்ப்பதற்கு உங்களுக்கு எளிதாக தோன்றலாம். உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கலாம். ஆனால் இதில் சில மறைமுக நிதி சிக்கல்கள் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை.
இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில், ஒரு பொருளை வாங்குவதற்கு நம்மிடம் பணம் இருக்கிறதா என்பதை விட, அதை வாங்குவதற்கு நமக்கு EMI வசதி கிடைக்குமா என்பது தான் பெரிய கேள்வியாகவே இருக்கிறது. இது குறித்து நிதி ஆலோசகர் அபிஷேக் குமார், ஒரு முக்கிய எச்சரிக்கையை முன்வைக்கிறார். ஐபோன் என்பது வாங்கிய அடுத்த கணமே அதன் மதிப்பு குறையக் கூடிய ஒரு மின்சாதனம். அத்தகைய பொருட்களுக்காக உங்கள் வருங்கால வருமானத்தை இப்போதே செலவு செய்வது கவலைக்குரிய ஒரு விஷயம். ஆனால் இதில் ஒரு விதிவிலக்கும் உண்டு.
நீங்கள் அந்த போனை பயன்படுத்தி உங்கள் திறமையை வளர்க்க போகிறீர்களா அல்லது அதன் மூலம் வருமானம் ஈட்ட போகிறீர்கள் என்றால், அந்த செலவு உண்மையில் நியாயமானது தான். ஆனால் இன்று ஐபோன் வாங்கும் பலரும் அதற்காகத் தான் வாங்குகிறீர்களா என்பதை நீங்களே உங்களுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள்.
இதில் வேதனையான விஷயம் என்னவெனில் ஏற்கனவே கார் லோன், கல்விக் கடன் அல்லது கிரெடிட் கார்டு நிலுவை வைத்திருப்பவர்கள், மேற்கொண்டு சுமையை ஏற்றுக்கொள்ளும் விதமாக ஐபோன் தவணையும் சேர்த்து கொண்டு கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஐபோன் வாங்குகிறீர்களா அல்லது கார் வாங்குகிறீர்களா என்பது முக்கியமல்ல. உங்கள் மொத்த மாத வருமானத்தில் 30%-க்கு மேல் கடன்களுக்காக செலவிடக்கூடாது. இது 40% -ஐ தாண்டினால் உங்கள் நிதி நிலைமை ரிஸ்க்கில் இருக்கிறது என்று அர்த்தம். 50%-ஐத் தாண்டினால் நீங்கள் உங்களையும் அறியாமல் ஒரு பெரிய கடன் வலையில் சிக்கியுள்ளீர்கள். நீங்கள் 1,34,900 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஐபோனை 12 மாத நோ காஸ் இஎம்ஐ-ல் வாங்கினால் மாதத்திற்கு 11,242 கட்ட வேண்டும். இந்த தவணை செலவானது மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சுமையாக இருக்காது. ஏனெனில் இது உங்கள் வருமானத்தில் 11.2% மட்டுமே. இதுவே மாத வருமானம் 50,000 ரூபாய் உள்ள ஒருவர் இதை வாங்கினால், வருமானத்தில் 22%-க்கும் மேல்.
மக்கள் பலரும் மாத மாதம் செலுத்தும் தவணை தொகையை மட்டுமே பார்க்கிறார்கள், ஆனால் வாய்ப்பு செலவை (Opportunity Cost) மறந்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு நீங்கள் போனுக்கு கட்டும் அதே 11,242- ரூபாயை ஒரு நல்ல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், அது பல மடங்கு வளர்ந்து உங்களுக்கு ஒரு பெரிய சொத்தை உருவாக்கியிருக்கும். ஆனால் ஐபோன் வாங்குவதன் மூலம், நீங்கள் ஒரு வளர்ந்து வரும் சொத்தை இழந்து, தேய்மானம் அடையும் பொருளை வாங்குகிறீர்கள்.
அப்படி எனில் நாங்க எல்லாம் மாத தவணையில் எந்தவொரு பொருளையும் வாங்க கூடாதா என்று கேட்காதீர்கள். எந்த ஒரு பொருளாக இருந்தாலும் வாங்குவதற்கு முன் இந்த 2 விதிகளை பின்பற்றுங்கள். நீங்கள் ஒரு பிரீமியம் போன் வாங்க தகுதியானவரா என்பதை அறிய இந்த எளிய கேள்விகளை உங்களிடம் கேட்டு பாருங்கள். இன்று ஒரு மாத சம்பள விதி (One Month Rule): நீங்கள் வாங்க இருக்கும் அந்த போனின் மொத்த விலை, உங்கள் ஒரு மாத நிகர சம்பளத்தை தாண்டக்கூடாது. இரண்டாவது விதி, இரண்டு மடங்கு விதி (Twice Over Rule): உங்கள் அவசர கால நிதியை தொடாமல், ஒரே நேரத்தில் இரண்டு ஐபோன்களை வாங்கும் அளவிற்கு உங்களிடம் ரொக்க பணம் இருந்தால் மட்டுமே, நீங்கள் ஒரு ஐபோன் வாங்க தகுதியானவர்.
ஆக வெறுமனே உங்களுக்கு EMI அப்ரூவல் கிடைக்கிறது என்பதற்காக, அந்த பொருளை வாங்கி குவிக்காதீர்கள். உங்கள் கடன் தவணைகளை கட்டிய பிறகும், உங்கள் எதிர்காலத்திற்காக 20% சேமிக்க முடிகிறதா? அவசரத் தேவைக்கு 6 மாத கால EMI தொகை கைவசம் இருக்கிறதா? என்பதை சிந்தித்து பின்னர் உறுதியான முடிவெடுங்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications