சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் கனவாக இருக்கிறது. நமது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் சொந்த வீடு வாங்குவதை பார்க்கிறோம். பொதுவாக சொந்த வீடு வாங்கும் முடிவினை பல்வேறு காரணங்கள் அடிப்படையில் நாம் எடுக்கிறோம்.
சமூக அழுத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் நிதி ரீதியாக நாம் தயாராக இருக்கிறோமா என்பன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பிறகு தான் சொந்த வீடு வாங்கும் முடிவை நாம் எடுக்க முடியும். இந்த நிலையில் சொந்த வீடு வாங்குவதற்கு எது சரியான வயது என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்..

சொந்த வீடு வாங்கும் போது மொத்த தொகையில் டவுன் பேமெண்ட்டாக செலுத்த நம்மிடம் கணிசமான தொகை கையிருப்பாக இருப்பது அவசியம். எவ்வளவு அதிகமாக நாம் டவுன் பேமண்ட் செலுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாம் கடன் பெறும் தொகையை குறைக்க முடியும் இதன் மூலம் நமது இஎம்ஐ மற்றும் கடனை திரும்ப செலுத்தும் காலம் ஆகியவற்றையும் குறைக்க முடியும். வழக்கமாக 20 சதவிகிதமாவது டவுன் பேமெண்ட் வைத்திருந்து வீட்டினை வாங்குவது சிறந்ததாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தொகை நம்மிடம் சேமிப்பாக இருக்க வேண்டுமெனில் கிட்டதட்ட 30 வயதாவது ஆகி இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
நிலையான வேலை நிலையான ஒரு வருமானம் இருக்கும்போது மட்டுமே வீடு போன்ற நீண்ட கால முதலீட்டை பற்றி நாம் யோசிக்கவே முடியும் . பெரும்பாலானவர்களுக்கு 30 களின் போது தான் நிலையான ஒரு வேலை என்பது அமைகிறது. எனவே இந்த வயதில் தான் வீடு வாங்குவதற்கான முடிவை எடுக்க முடியும்.
அடுத்ததாக கிரெடிட் ஸ்கோர் என்பது மிக மிக முக்கியம் . நமது கிரெடிட் ஸ்கோர் 750 க்கு மேல் இருந்தால் நாம் எதிர்பார்த்த தொகை நமக்கு கடனாக கிடைத்துவிடும் என்கிறார் பேங்க்பஜார்.காம்(Bankbazaar.com) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அதில் செட்டி.
கல்யாணம் மற்றும் குழந்தை ஆகிய காரணிகளுமே நாம் சொந்தமாக வீடு வாங்குவதற்கான முடிவினை எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பலர் திருமணத்தின் போது சொந்த வீடு இருக்க வேண்டும் என எண்ணுவார்கள் பலர் தங்களுக்கு குழந்தை பிறக்கும் போது ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என முடிவெடுப்பார்கள். பெரும்பாலும் 30 வயது என்ற நிலையில் இந்த எண்ணங்கள் ஏற்படும்.
இந்தியாவை பொறுத்தவரை 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு தான் நிலையான வருவாய், நிலையான வேலை மற்றும் திட்டமிட்டு செலவு செய்யும் பக்குவம் உள்ளிட்டவைகள் கிடைக்கின்றன. எனவே இந்த வயதினர்தான் சொந்த வீடு வாங்கும் முடிவினை எடுக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
30களின் தொடக்கத்தில் தான் பெரும்பாலானவர்களுக்கு நிலையான ஒரு வேலையும் குறிப்பிட்ட தொகையிலான சேமிப்பும் கொண்டிருக்கிறார்கள். மேலும் தங்களது வாழ்க்கை பற்றிய ஒரு நீண்ட கால இலக்கினை கொண்டு இருப்பார்கள். இந்த தருணங்களில் எடுக்கப்படக்கூடிய முடிவுகள் மிகச் சரியாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர் .
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications