இன்று வெளியாகிவரும் செய்திகள் 2015ஐ நியாபக படுத்தி வருகின்றன. ஏனெனில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று வரையில் பரவலாக கனத்த மழை பெய்து வருகின்றது. பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சென்னை மீண்டும் வெள்ளக் காடாக மாறியுள்ளது.
இன்னும் மழை நீடிக்கும் என்றே ஆய்வுகளும் கூறி வருகின்றன. இதற்கிடையில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இப்படி அச்சத்திற்கும் மத்தியில் கடந்த 2015 போல வெள்ளம் வந்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே கண்ட சேதத்திற்கும் மத்தியில், தற்போது சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் தரப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதிப்பு
இதனால் மீண்டும் தங்களது உடைமைகளை இழக்கும் நிலை வந்து விடுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி வெள்ளம் வரும் பட்சத்தில் ஏற்படும் சேதங்களில் ஒன்று வாகனங்கள். வெள்ளத்தில் வாகனங்கள் சேதமானால், அடித்து செல்லப்பட்டால் அதற்கு இழப்பீடு பெற்றுக் கொள்ள முடியுமா? என்பது பலரின் கேள்வி. நிச்சயம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இழப்பீடு செய்து கொள்ள முடியும் என்கின்றன இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சில.
இரு வகை இன்சூரன்ஸ்
பொதுவாக வாகன இன்சூரன்ஸ்களை பொறுத்த வரையில் வாகனங்களுக்கான முழு காப்பீடு மற்றும் மூன்றாம் நபர் காப்பீடு என உண்டு. இதில் 3ம் நபர் காப்பீடு என்பது அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம் உண்டு. எனினும் முழுக் காப்பீடு என்பது உரிமையாளரின் விருப்பத்தினை பொறுத்தது.
முழு காப்பீடின் அவசியம்
3ம் நபர் காப்பீட்டினை பொறுத்தவரையில் வாகனம் விபத்துக்கு உள்ளாகி, யாருக்கேனும் பாதிப்பு அல்லது, இழப்பு என்றால் இழப்பீடு வழங்கப்படும். ஆனால் இதில் காப்பீட்டாளாருக்கு எந்த இழப்பீடும் கிடைக்காது. ஆனால் முழு காப்பீடும் செய்திருந்தால் காப்பீட்டாளாருக்கும் சேர்ந்து காப்பீடு கிடைக்கும். இது வெள்ளம் மட்டும் அல்ல, சாலை விபத்து, தீ விபத்து, மற்ற இயற்கை பேரிடர் என பலவற்றிற்கும் இழப்பீடு பெற முடியும்.
சில விதிமுறைகள்
ஆனால் இதற்கு சில விதிமுறைகளும் உண்டு. உதாரணத்திற்கு உங்கள் வாகனம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது எனில், அதனை இயக்க கூடாது. மேலும் உங்களது காப்பீட்டு நிறுவனத்திற்கு இதனை தெரியப்படுத்த வேண்டும். இது தொலைபேசியிலோ அல்லது மெயிலில் கூட தெரிவிக்கலாம். அதன் பிறகு இன்சூரன்ஸ் நிறுவனம் வந்து அதனை ஆய்வு செய்யும்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
ஆக உங்களது வாகன நிறுவனங்கள் வெள்ளத்தில் சேதமடைந்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதனை தெரியப்படுத்த வேண்டும். வாகனத்தினை இயக்க முயற்சி செய்யக் கூடாது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், அதனை உங்களது மொபைலில் ஆதாரமாக புகைப்படம் கூட எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
முதலில் இதை செய்யுங்கள்
எனினும் வாகனங்களுக்கான காப்பீட்டினை எடுக்கும்போது இதுபோன்ற அம்சங்கள் உள்ளனவா? எதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியும்? எதற்கு க்ளைம் செய்ய முடியாது என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது. இது ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதால், வாகன உரிமையாளர்கள் முதலில் உங்கள் இன்சூரன்ஸ் நிறுவனங்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். அதேபோல இன்சூரன்ஸ் எடுக்கும்போது விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
காப்பீட்டினை கவனமாக எடுங்கள்
அதேபோல் பொதுவாக கார் இன்சூரன்ஸ் மூலம் உங்களது கார் இன்ஜின்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது. எனினும் இதனை ஆட் ஆன் மூலம் க்ளைம் செய்ய முடியும். ஆக பாலிசி எடுக்கும் முன்னரே இதுபோன்ற விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் பெரு வெள்ளம் வரும்போது கார் இன்ஜின் பாதிக்கப்படுவது உங்களுக்கு பெரும் செலவினைக் கொடுக்கலாம். பொதுவான காப்பீட்டில் இதெல்லாம் கவர் ஆகுமா? என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications