பாசிவ் இன்கம்னா இதுதான்! பெங்களூரு பெண் CA-வின் அசத்தல் அப்டேட் -அப்படி என்ன சொல்லியிருக்கார்?

தூங்கும்போது கூட உங்கள் வங்கி கணக்கில் பணம் ஏற வேண்டும் - இதுதான் பாசிவ் இன்கம் (Passive Income) பற்றி வாரன் பஃபெட் சொன்ன தாரக மந்திரம். ஆனால் பாசிவ் இன்கம் என்றாலே பங்குகள், டிவிடெண்ட் அல்லது வீட்டின் வாடகை மட்டும் தான் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் பெங்களூரை சேர்ந்த பெண் CA, வழக்கமான பாதையை விட்டு விலகி, ஒரு செம ரூட்டை பிடித்துள்ளார். தன் வேலையை ஒரு சுமையாக பார்க்காமல், அதை ரசித்துக்கொண்டே அதே சமயம் கைநிறைய வருமானம் ஈட்டும் ஒரு புதிய வழியை அவர் கண்டறிந்துள்ளார். சிஏ-வின் மாஸ்டர் பிளான் என்ன? நாமும் அதை எப்படி பின்பற்றலாம்? இதோ அந்த சுவாரஸ்யமான ரகசியம்..

பாசிவ் இன்கம்னா இதுதான்! பெங்களூரு பெண் CA-வின் அசத்தல் அப்டேட் -அப்படி என்ன சொல்லியிருக்கார்?

இன்றைய தொழில்முறை உலகம், பாரம்பரியமாக நாம் பின்பற்றி வந்த மதிப்பீடுகளை தாண்டி வெகு தூரம் வந்துவிட்டது. இப்போது வெறும் நிதி முதலீடுகளோ அல்லது அசையும், அசையா சொத்துகளோ மட்டுமே ஒருவரின் மதிப்பை தீர்மானிப்பதில்லை. மாறாக காலப்போக்கில் ஒருவரின் தொடர்ச்சியான உழைப்பு, சமூகத்தில் அவரது இருப்பு மற்றும் அவரை பற்றி மக்களின் பார்வை ஆகியவையே பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.

டிஜிட்டல் தளங்கள் இன்று மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் முறையையே மாற்றிவிட்டன. இதில் வெளிப்படைத்தன்மை என்பது கண்ணுக்கு தெரியாத, ஆனால் வலிமையான ஒரு சக்தியாக வளர்ந்துள்ளது. இது உடனடியாக பணமாக அளவிடப்படாவிட்டாலும், நீண்ட கால அடிப்படையில் ஒருவருக்கான வாய்ப்புகளையும், நம்பிக்கையையும், அங்கீகாரத்தையும் உருவாக்கித் தருகிறது. இன்று ஒருவரின் வெற்றி என்பது அவர் வைத்துள்ள சொத்துகளை பொறுத்தது அல்ல. அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மதிப்பை சார்ந்தது.

இந்த கருத்தை முன்வைத்து, இடி-யில் வெளியான பதிவொன்றில் பெங்களூருவை சேர்ந்த பட்டயக் கணக்காளர் (CA) மீனல் கோயல் என்பவர் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் ஒரு சுவாரஸ்யமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். பலர் பாசிவ் இன்கம் என்பதன் உண்மையான அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.

பொதுவாக பாசிவ் இன்கம் என்றால் பங்குகள் (Stocks), ஈவுத்தொகை (Dividends) அல்லது ரியல் எஸ்டேட் மூலம் வரும் வாடகை வருமானம் என்றுதான் நாம் நினைக்கிறோம். ஆனால் இவற்றிற்கெல்லாம் மேலாக, மிக முக்கியமான ஒரு சொத்து தனிநபர் பிராண்ட் (Personal Brand) என்பதை பலர் கவனிப்பதில்லை.

கோயல் தனது ஆன்லைன் பயணத்தை தொடங்கும் போது, ஒரு பெரிய இலக்கை தீர்மானிக்கவில்லை. தனது எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற சாதாரண நோக்கத்துடன் தான் தொடங்கியிருக்கிறார். ஆனால் இன்ஸ்டாகிராம், லிங்க்டுஇன் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் அவர் காட்டிய தொடர்ச்சியான ஆர்வம், அவருக்கு பெரும் வாசகர் வட்டத்தை உருவாக்கித் தந்தது.

ஒரு பரிசோதனையாக தொடங்கிய இந்த முயற்சி, காலப்போக்கில் அவருக்கு ஆலோசனை வழங்கும் வாய்ப்புகள் (Consulting), பிராண்ட் ஒத்துழைப்புகள், தொழில்முறை நம்பகத்தன்மை மற்றும் மேடைப் பேச்சுகள் போன்ற பல அர்த்தமுள்ள வாய்ப்புகளை அள்ளித் தந்தது. ஒருவரை நேரில் சந்தித்து அறிமுகப்படுத்தி கொள்வதற்கு முன்னரே, அவரது பர்சனல் பிராண்ட் அவருக்கான கதவுகளை திறந்து வைத்துள்ளது.

கோயல் இதில் கற்றுக்கொண்ட மிக முக்கியமான பாடம் என்னவென்றால், கன்டென்ட் உருவாக்குவது என்பது ஏதோ ஒரு வீடியோவை வைரல் ஆக்குவது மட்டும் அல்ல. மாறாக தொடர்ந்து மக்களிடையே நம்மை வெளிப்படுத்திக் கொள்வது.

நிதியியல் முதலீடுகள் எப்படி காலப்போக்கில் பல மடங்கு பெருகுகிறதோ, அதேபோல் ஒருவரின் வெளிப்படைத்தன்மையும் காலப்போக்கில் பெரும் மதிப்பை உருவாக்குகிறது. பாசிவ் இன்கம் என்பது நேரடியாக வரும் பணத்தை மட்டும் குறிப்பதல்ல, செல்வாக்கு மற்றும் அங்கீகாரம் மூலமும் அது வெளிப்படும். நீங்கள் உழைக்காத நேரத்திலும், உங்கள் பெயர் உங்களுக்கான வாய்ப்புகளை ஈர்த்து, நம்பிக்கையை உருவாக்குமானால் அது தான் உண்மையான பாசிவ் வருமானம் என்கிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+