மாதம் பிறந்து கையில் 70,000 ரூபாய் சம்பளம் வந்ததும், வீட்டு வாடகை, இஎம்ஐ என்று செலவு செய்யவே அது கரைந்துவிடுகிறது. அப்ப்டி இருக்கையில் எங்கிருந்து சொத்து சேர்ப்பது. அதுவும் கோடி கணக்கில் எப்படி சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கவில்லை என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். உண்மையில், நீங்கள் மாதம் 70,000 ரூபாய் சம்பாதிக்கிறீர்கள் என்றால், உங்களிடம் ஏற்கனவே அந்த கோடி ரூபாய் சொத்து இருக்கிறது என்றுதான் அர்த்தம்.எப்படி என்று கேட்கிறீர்களா? இது ஏதோ ஒரு மாயை அல்ல. இது முதலீட்டு உலகின் மிக முக்கியமான பணப்புழக்க கணக்கு. ஒரு கோடியை வங்கியில் டெபாசிட் செய்து கிடைக்கும் அதே மாதாந்திர வட்டி வருமானத்தைத் தான், உங்கள் திறமை மூலம் நீங்கள் மாதந்தோறும் உழைத்து ஈட்டுகிறீர்கள்.

பொதுவாக சம்பளம் வாங்கும் ஊழியர்கள், தாங்கள் மாத மாதம் ஈட்டும் சம்பள தொகையை, வெறும் உயிர் பிழைப்பதற்கான வருமானமாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் சிஏ- வான நிதின் கௌஷிக், ஒரு முக்கியமான அம்சத்தை முன்வைக்கிறார். அது உங்கள் சம்பளம் என்பது நீங்கள் கவனிக்க தவறிய ஒரு மறைமுக சொத்து. அதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் என்கிறார்.
மாதம் 70,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு நபரை கருத்தில் கொள்வோம். ஆண்டுக்கு அவர் 8.4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். இந்த தொகையை ஒரு வங்கியில் பிக்சட் டெபாசிட் மூலம் பெற விரும்பினால், 7% வட்டி விகிதத்தில் சுமார் 1.2 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்க வேண்டும்.
அதாவது உங்கள் மாதச் சம்பளம் 70,000 ரூபாய் என்றால், உங்கள் உழைப்பு மற்றும் திறமை மூலம் மாதம் 70,000 ரூபாய் வருமானம் தரும், ஒரு 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை நீங்கள் உங்கள் வசம் வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். வட்டி விகிதம் 6% ஆகக் குறைந்தால், அந்த சொத்தின் மதிப்பு இன்னும் உயர்ந்து 1.4 கோடி ரூபாய் ஆகிவிடும்.
பிக்சட் டெபாசிட் என்பது பணவீக்கத்தை எதிர்கொள்ள போராடும் ஒரு நிலையான முதலீடு. ஆனால், உங்கள் சம்பளம் அப்படிப்பட்டது அல்ல. இந்தியாவில் வளர்ந்து வரும் துறைகளில், கடந்த பத்து ஆண்டுகளில் சம்பளம் ஆண்டுக்கு 8-10% என்ற விகிதத்தில் உயர்ந்துள்ளது.
ஒரு 30 வயது இளைஞர் தனது வருமானத்தை ஆண்டுக்கு 8% வீதம் உயர்த்தினால், 40 வயதில் அவரது மாத சம்பளம் 1.5 லட்சம் ரூபாயாக உயரும். இந்த தொகையை வட்டி வருமானமாக பெற வேண்டுமானால் சுமார் 2.5 கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். இதிலிருந்து தெரிவது என்னவென்றால், உங்கள் உழைப்பு என்பது ஒரு நிலையான சொத்து அல்ல. அது காலப்போக்கில் தானாகவே மதிப்பு உயரும் ஒரு அற்புதமான சொத்து.
பங்குச் சந்தையில் ஆயிரக்கணக்கில் முதலீடு செய்து, அதன் பலனுக்காக பலரும் காத்திருக்கிறோம். ஆனால் அந்த பங்குகள் தரும் லாபத்தை விட, உங்கள் திறமையை வளர்த்து கொள்வதன் மூலம் அல்லது சரியான வேலை மாற்றத்தின் மூலம் உங்கள் வருமானத்தை ஒரே ஆண்டில் 30% வரை உயர்த்த முடியும். எந்தவொரு பங்குச் சந்தையும் இவ்வளவு பெரிய வருமானத்தை விரைவில் தருவதில்லை.
ஆக சம்பளம் என்பது ஒரு நடுத்தர வர்க்கத்தின் வருமானம் என்று மட்டும் பார்க்காதீர்கள். அது உங்கள் வாழ்நாளின் மிகப்பெரிய சொத்தாகிய மனித மூலதனத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகும். உங்கள் வேலையை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள் என்பதில் தான் உங்கள் நிதிச் சுதந்திரம் அடங்கியுள்ளது. ஆக இனி உங்கள் வேலையை சுமையாக பார்க்காமல் உங்கள் நிதிச் சுதந்திரத்திற்கான பாதையாக பாருங்கள். அதை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பாருங்கள்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications