ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் வரி செலுத்துவோர் முந்தைய நிதியாண்டுக்கான தங்கள் வருமான வரி கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்யலாம். இருப்பினும் பெரும்பாலான நிறுவனங்களில மே மாதத்தின் நடுப்பகுதிக்கு பிறகுதான் தங்கள் ஊழியர்களுக்கு படிவம் 16ஐ வழங்குகிறார்கள். இதனால் பெரும்பாலான பணியாளர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதை தாமதப்படுத்துகிறார்கள். படிவம் 16, சம்பளம் மற்றும் டிடிஎஸ் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இதனால் எளிதாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடிகிறது.
ஆனால் படிவம் 16 இல்லாமல் கூட ஐடிஆர் தாக்கல் செய்ய முடியும். சில முக்கியமான ஆவணங்கள் உதவியுடன் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஐடிஆரை நிரப்பலாம்.

படிவம் 16 இல்லாமல் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான ஸ்டெப்ஸ்
1. சம்பள சீட்டுகளை சேகரியுங்க
உங்கள் முழு நிதியாண்டின் சம்பள சீட்டுகள் உங்கள் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் விலக்குகள் பற்றிய தகவல்களை தருகின்றன. இவை உங்கள் வருமானத்தின் துல்லியமான விவரங்களை வழங்க உதவும்.
2. வரி விதிக்கக்கூடிய வருமானம் கணக்கிடுதல்
சம்பள சீட்டுகளிலிருந்து தகவல்களை பிரித்தெடுத்து உங்கள் மொத்த வருமானத்தை கணக்கிடுங்கள். அதில் உங்கள அடிப்படை சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் போனஸ் மற்றும் பிற சலுகைகளை சேர்க்கவும். இப்போது இதிலிருந்து நிலையான விலக்கு (ரூ.50,000), எச்ஆர்ஏ மற்றும் தொழில்முறை வரி போன்ற விலக்குகளை கழிப்பதன் மூலம் உஙகள் வரி விதிக்கக்கூடிய வருமானத்தை கண்டறியவும்.
அனைத்து கழிவுகளும், விலக்குகளும் பழைய வரி முறையில் மட்டுமே அனுமதிக்கின்றன. புதிய வரி விதிப்பு ரூ.75,000 நிலையான விலக்கை மட்டும் அனுமதிக்கிறது.
3. வங்கி அறிக்கையை சரிபார்த்தல்
உங்கள் வங்கி அறிக்கையை சரிபார்த்து, உங்கள் சம்பளத்தை தவிர வேறு ஏதேனும் வருமானம்(வட்டி,டிவிடெண்ட் போன்றவை) உள்ளதா என்று பார்க்கவும், இருந்தால் அதை உங்கள் மொத்த வருமானத்தில் சேர்க்கவும்
4. படிவம் 26AS பதிவிறக்கம்
வருமான வரித்துறை வலைத்தளத்திலிருந்து படிவம் 26AS பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது உங்கள் பான் உடன் இணைக்கப்பட்ட அனைத்து வரி விலக்குகள் மற்றும் வைப்புதொகைகளின் பதிவை வைத்திருக்கிறது. அதனை உங்கள் வருமானம் மற்றும் டிடிஎஸ் விவரங்களுடன் ஒப்பிட்டு பாருங்கள். ஏதேனும் முரண்பாடுகள் கண்டால், உடனடியாக நிறுவனத்தையோ அல்லது வங்கியையோ தொடர்பு கொள்ளுங்க.
படிவம் 16-ன் முக்கியத்துவம்
படிவம் 16 என்பது உங்கள் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்ட டிடிஎஸ் அரசாங்கத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை சான்றளிக்க முதலாளியால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணமாகும். இந்த படிவம் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது.
பகுதி A: இது முதலாளி மற்றும் பணியாளர் விவரங்கள் பான்,டான் மற்றும் டிடிஎஸ் தகவல்களை கொண்டுள்ளது.
பகுதி B: இது சம்பள முறிவு, வரி விதிக்கக்கூடிய வருமானம், விலக்குகள் (80சி,80டி) பற்றிய விவரங்களை கொண்டுள்ளது.
படிவம் 16இன் நன்மைகள்
படிவம் 16 ஐடிஆர் தாக்கல் செய்வதை எளிதாக்குகிறது மற்றும் வங்கி கடன்களை பெறுவதற்கான வருமான சான்றாகச் செயல்படுகிறது. அதிகப்படியான டிடிஎஸ் கழிக்கப்பட்டால் வரி பணத்தை திரும்ப பெற படிவம் 16 உதவுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications