வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு இன்னும் 12 நாட்களே இருக்கின்றன. சம்பளதாரர்கள் தீவிரமாக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். வழக்கமாக ஜூலை 31ம் தேதி தான் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான இறுதி நாளாக இருக்கும். இந்த ஆண்டு வருமானவரித்துறை செப்டம்பர் 15ஆம் தேதியை கடைசி தேதியாக நிர்ணயம் செய்துள்ளது.
வழக்கத்தை விட இந்த முறை 45 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் , மேற்கொண்டு அவர்களால் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியுமா முடியாதா என்பன உள்ளிட்ட விவரங்களை தற்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்திய வருமான வரி சட்டத்தின் படி அரசு அறிவித்த கடைசி தேதிக்கு பின்னர் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள் அதற்கு 5 ஆயிரம் ரூபாய் வரை தாமத கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும். இதில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமானமாக கொண்டவர்களுக்கு இந்த அபராத தொகை என்பது 1000 ரூபாய், 5 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டவர்களுக்கு 5000 ரூபாய் ஆகும்.
செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பின்னர் நீங்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்தால் அதற்கு அபராத தொகை செலுத்த வேண்டும் . உங்கள1000 ரூபாயும் அதற்கு மேல் இருந்தால் 5000 ரூபாயும் செலுத்த வேண்டும். நீங்கள் வருமான வரி செலுத்த வேண்டியது இல்லை என்றால் கூட இந்த அபராத தொகையை செலுத்தி ஆக வேண்டும்.
இந்தியாவில் தற்போது பழைய வரி நடைமுறை மற்றும் புதிய வரி நடைமுறை என இரண்டு முறைகளின் கீழ் நாம் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும். பழைய வரிமுறையில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் கட்டாயம் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். புதிய வரி நடைமுறையின் படி ஆண்டுக்கு 3 லட்சத்திற்கு மேல் வருமானம் கொண்டிருக்கும் அனைவரும் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்தாக வேண்டும்.
இது தவிர நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்பு கணக்குகளில் ஒரு கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம். உங்களுடைய ஓர் ஆண்டுக்கான வீட்டு மின்சார கட்டணம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருகிறது என்றாலும் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ய வேண்டும்.
வெளிநாட்டு சொத்துகளில் இருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது என்றாலும் வருமான வரி கணக்கினை தாக்குதல் செய்வது கட்டாயம். செப்டம்பர் 15 தேதியை தவற விடுபவர்கள் அதன் பிறகு அபராதத்தோடு வருமானவரி கணக்கினை தாக்கல் செய்ததாக வேண்டும். அதே போல அவர்களால் பழைய வரி நடைமுறையை தேர்ந்தெடுக்க முடியாது புதிய வரி நடைமுறையில் மட்டுமே கணக்கு தாக்கல் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications