முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி!! 24 ரூபாய்க்கு ஜியோ வெளியிட்ட அட்டகாசமான திட்டம்!!

இந்தியாவில் தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யக்கூடிய காலம். இந்த ஆண்டு வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 15ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டிருக்கிறது.

ஜியோ அதிரடி: சம்பளதாரர்கள் பலரும் தற்போது தீவிரமாக வருமானவரி கணக்கை தாக்கல் செய்யும் பணிகளில் இறங்கி இருக்கின்றனர். இதற்கு இடையே முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த நிறுவனம் ஜியோ பைனான்ஸ் என்ற பெயரில் ஒரு செயலியை நடத்தி வருகிறது. இந்த செயலி வாயிலாக சம்பளதாரர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யலாம் என தெரிவித்து இருக்கிறது .

முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி!! 24 ரூபாய்க்கு ஜியோ வெளியிட்ட அட்டகாசமான திட்டம்!!

வருமான வரி கணக்கு: வெறும் 24 ரூபாயிலிருந்து வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. டேக்ஸ் பட்டி என்ற அமைப்போடு கூட்டணி அமைத்து ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் தங்களுடைய செயலி வாயிலாகவே மக்கள் எளிதாக வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யும் வசதியை தந்திருக்கிறது. குறிப்பாக முதன்முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணம்: இதன்படி சம்பளதாரர்கள் தாங்களாகவே இந்த செயலிக்குள் அனைத்து தகவல்களையும் உள்ளிட்டு வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யலாம் அல்லது நிபுணர்களின் உதவியும் பெற்றுக் கொள்ளலாம். தாங்களாகவே வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு 24 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது . அதே வேளையில் ஒரு நிபுணரின் உதவியை பெறக்கூடிய நபர்களுக்கு 999 ரூபாயில் இருந்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி!! 24 ரூபாய்க்கு ஜியோ வெளியிட்ட அட்டகாசமான திட்டம்!!

என்னென்ன வசதிகள்: பயனாளர்கள் பழையவரி நடைமுறை அல்லது புதிய வரி நடைமுறையில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர்களுக்கு எந்தெந்த பிரிவுகளில் எல்லாம் வரி விலக்கு கிடைக்கும் என்னென்ன பிரிவுகளில் எல்லாம் வரியை குறைக்க முடியும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் செயலியில் காட்டப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வசதிகள் இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.

Tax planner எனப்படும் வரி திட்டமிடல்: உங்களுடைய வருமான வரியை எப்படி தாக்கல் செய்வது, பழைய மற்றும் புதிய வரிமுறையில் ஒப்பீடு செய்வது என்பன உள்ளிட்டவை வரி திட்டமிடல் பிரிவில் இருக்கும், இதனை கொண்டு எந்த முறையில் கணக்கு தாக்கல் செய்யலாம் என்பதை முடிவெடுக்கலாம்.

Tax filing எனப்படும் வரி தாக்கல்: இதில் நீங்களாகவே வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யலாம் அல்லது ஒரு நிபுணரின் உதவியையும் கோரலாம். பொதுவாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு உதவக்கூடிய பல்வேறு தளங்களிலும் சொந்தமாக வருமானவரி கணக்கினை தாக்கல் செய்பவர்களிடம் 99 ரூபாயிலிருந்து 499 ரூபாய் வரை கட்டணம் பிடிக்கப்படுகிறது ஒரு நிபுணரின் உதவியோடு செய்யும்போது 799 ரூபாயிலிருந்து 2000 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த சூழலில் ஜியோ நிறுவனம் குறைந்த கட்டணத்தில் இந்த சேவைகளை வழங்குவதால் பலரும் இதனை பயன்படுத்துவார்கள் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+