இந்திய மக்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஜியோபிளாக்ராக் கூட்டணியின் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் முதலீட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது. JioBlackRock மூன்று புதிய கடன் திட்டங்களின் அறிமுகம் செய்து மக்களின் முதலீட்டை ஈர்க்க NFO வாயிலாக சந்தையில் பட்டியலிட்டு உள்ளது.
JioBlackRock அறிமுகம் செய்துள்ள 3 திட்டங்களின் பெயர் 1. ஜியோபிளாக்ராக் லிக்யூட் ஃபண்ட், 2. ஜியோபிளாக்ராக் மனி மார்க்கெட் ஃபண்ட் 3. ஜியோபிளாக்ராக் ஓவர்நைட் ஃபண்ட். இந்த 3 திட்டங்களின் NFOக்கள் ஜூலை 2, 2025 வரை திறந்திருக்கும். இந்தத் திட்டங்களில் குறித்தும், இதில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் இப்போதும் பார்ப்போம்.

NFO விவரங்கள்:
மூன்று திட்டங்களின் NFOக்களும் தற்போது முதலீட்டிற்கு திறந்துள்ளன. இந்த 3 நாட்களில் NFO வாயிலாக முதலீடு செய்யப்படும் மக்களுக்கு ஜூலை 2 ஆம் தேதிக்கு பின்பு குறித்த நாளுக்குள் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஐந்து வணிக நாட்களுக்குள் மற்ற திட்டங்கள் போல சந்தையில் விற்பனை மற்றும் மறு கொள்முதல்-க்கு அனுமதிக்கப்படும்.
இந்தத் 3 திட்டங்களும் டைரெக்ட் திட்டங்களாகும், மற்றும் குரேத் ஆப்ஷன் மட்டுமே கொண்டு உள்ளது. JioBlackRock கூட்டணி அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு இந்த 3 திட்டங்களிலும் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர் விருப்பத்தின் பெயரில் 500 ரூபாய்க்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதேபோல் SIP திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீட்டு தொகையும் ரூ.500 தான், 500 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய விருப்பினால் 1 பகுதிக்கு அதிகமாக முதலீடு செய்யலாம்.
இந்த மூன்று 1. ஜியோபிளாக்ராக் லிக்யூட் ஃபண்ட், 2. ஜியோபிளாக்ராக் மனி மார்க்கெட் ஃபண்ட் 3. ஜியோபிளாக்ராக் ஓவர்நைட் ஃபண்ட் திட்டங்களையும் விக்ராந்த் மேத்தா, அருண் ராமச்சந்திரன், மற்றும் சித்தார்த் தேப் ஆகியோர் நிர்வகிக்க உள்ளனர்.
ஜியோபிளாக்ராக் லிக்யூட் ஃபண்ட்:
இது ஒரு ஓப்பன் என்டெட் டெபிட் திட்டமாகும், இதில் குறைந்த வட்டி விகித ஆபத்து மற்றும் குறைந்த கிரெடிட் ஆபத்து உள்ளது. இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம், 91 நாட்கள் வரை முதிர்வு காலம் (residual maturity) கொண்ட முதலீட்டு சந்தை மற்றும் டெபிட் கருவிகளில் முதலீடு செய்து, நிலையான வருமானத்தை வாடிக்கையாளர்களுக்கு உருவாக்குவதாகும். இது பாதுகாப்பான மற்றும் குறுகிய கால முதலீடு தேடுவோருக்கு ஏற்றது.
ஜியோபிளாக்ராக் மனி மார்க்கெட் ஃபண்ட்:
இந்தத் ஓப்பன் என்டெட் டெபிட் திட்டம், ஒரு வருடம் வரை முதிர்வு காலம் (residual maturity) காலம் கொண்ட முதலீட்டு சந்தை கருவிகளில் முதலீடு செய்கிறது. இதில் குறைந்த வட்டி விகித ஆபத்து மற்றும் மிதமான கிரெடிட் ஆபத்து உள்ளது. இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம், முதலீட்டு சந்தையில் முதலீடு செய்து, நிலையான வருமானத்தை உருவாக்குவதாகும். இது நடுத்தர கால முதலீட்டு விருப்பங்களை தேடுவோருக்கு உகந்தது.
ஜியோபிளாக்ராக் ஓவர்நைட் ஃபண்ட்:
இது ஒரு ஓப்பன் என்டெட் டெபிட் திட்டமாகும், இதில் ஒரு நாள் முதிர்வு காலம் கொண்ட கடன் மற்றும் பணச் சந்தை கருவிகளில் முதலீடு செய்யப்படுகிறது. இதில் குறைந்த வட்டி விகித ஆபத்து மற்றும் குறைந்த கடன் ஆபத்து உள்ளது. இந்தத் திட்டம் நிஃப்டி 1D ரேட் இன்டெக்ஸ் உடன் ஒப்பிடப்படுகிறது. மிகக் குறுகிய கால முதலீட்டிற்கு இது மிகவும் பாதுகாப்பான விருப்பமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஜியோபிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி?:
ஜியோபிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எளிமையான மற்றும் நேரடியான செயல்முறையாகும். பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
தகுதி மற்றும் ஆவணங்கள்:
பான் கார்டு, ஆதார் கார்டு (மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டது)
வங்கி கணக்கு விவரங்கள் (IFSC குறியீடு தேவை)
KYC சரிபார்க்க வேண்டும்.
எங்கு முதலீடு செய்ய வேண்டும்:
இணையதளம்: https://www.jioblackrock.com
ஜியோபிளாக்ராக் மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்யவும்
புதிய கணக்கு திறக்கவும்:
'Invest Now' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் மின்னஞ்சல், மொபைல் எண், மற்றும் பான் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யவும்.
KYC செயல்பாடுகள்:
KYC வெரிபை செய்யப்படவில்லை எனில், பான் மற்றும் ஆதார் ஆவணங்களை பதிவேற்றவும்.
வீடியோ KYC அல்லது நேரடி சரிபார்ப்பு செய்யவும்.
உங்களுக்கு பிடித்த திட்டம்:
3 திட்டங்களில் உங்களுக்கு பிடித்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்
ஜியோபிளாக்ராக் லிக்யூட் ஃபண்ட் (91 நாள் கருவிகள்)
ஜியோபிளாக்ராக் மனி மார்க்கெட் ஃபண்ட் (1 வருட கருவிகள்)
ஜியோபிளாக்ராக் ஓவர்நைட் ஃபண்ட் (1 நாள் கருவிகள்)
முதலீட்டு விருப்பம்:
குறைந்தபட்சம் ரூ.500 தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் SIP முறையை தேர்வு செய்தால் முதலீட்டு கால அளவீட்டை தேர்வு செய்யவும் (மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, வருடாந்திர)
பணத்தை அனுப்ப வங்கி கணக்கை இணைக்க வேண்டும். இதை நெட் பேங்கிங்/யூபிஐ மூலம் பணம் செலுத்த முடியும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications