திடீரென பறிபோகும் வேலைகள்.. நம் SIP முதலீடுகளை எப்படி சமாளிப்பது? இளைஞர்களே உஷார்..!!

தற்போதுள்ள சூழலில் மாத சம்பள பணத்தில் குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி முறையில் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். மாதம் தோரும் சம்பளம் கிரெடிட் ஆன உடன், ஆட்டோ டெபிட் முறையில் எஸ்ஐபி முறையில் நம் வங்கி கணக்கில் இருந்து பணம் தானாகவே முதலீடுக்கு சென்றுவிடும். ஆனால் சம்பளம் வரும் வரை மட்டுமே இது சாத்தியம்.

தற்போது பல்வேறு துறைகளிலும் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக ஐடி துறையில் கொத்து கொத்தாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். திடீரென வேலை இழப்பு ஏற்படும் போது நம் எஸ்ஐபி முதலீடு என்ன ஆகும்? என்பதை பார்க்கலாம்.

திடீரென பறிபோகும் வேலைகள்.. நம் SIP முதலீடுகளை எப்படி சமாளிப்பது? இளைஞர்களே உஷார்..!!

திடீரென பணிநீக்கம் செய்யப்படும் போது வழக்கமான வருமானம் இல்லாமல் போகும். இதனால் வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லாத நிலை ஏற்படும். எனவே எஸ்ஐபி முதலீடுகளுக்கு அந்த தேதியில் கணக்கில் பணம் இல்லாவிட்டால் உங்களது முதலீடு அந்த மாதம் முதல் நின்று போகும். பொதுவாகவே ஆட்டோ டெபிட் முறையில் பணம் எடுப்பதற்கு முன்பு கணக்கில் போதிய இருப்பு வைத்திருங்கள் என மெசேஜ் வரும். ஆனால் வேலை இழந்த சமயத்தில் நாம் கையில் இருக்கும் பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காகவே சேமிக்க வேண்டும்.

முதலீடுகளை சிறிது காலம் நிறுத்தி வைக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு எஸ்ஐபி செலுத்த முடியாமல் போனால், நீண்டகால முதலீட்டு இலக்குகளை பாதியிலேயே கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் இது அடுத்த வேலை கிடைக்கும் வரையில் தான். வேலை கிடைத்த உடன் முதலீட்டை தொடரலாம். உங்களால் அடுத்த மாதம் எஸ் ஐபி செலுய்த்த முடியாது என்றால் முன் கூட்டியே pause sip என்பதை கொடுத்து சிறிது காலம் முதலீட்டை நிறுத்தி வைக்கலாம்.

Also Read

இதனால் புது முதலீடு செய்யாவிட்டாலும் பழைய முதலீடு தொடர்ந்து உங்களுக்கு காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். வேறு வழியில்லை என்ர சூழல் வந்தால் மட்டுமே இந்த முதலீட்டில் உள்ள பணத்தை எடுங்கள். இல்லை என்றால் அப்படியே வளர விடுவது தான் நல்லது.

இல்லை என்னிடம் முதலீட்டையும் தொடரும் அளவுக்கு அவசர கால நிதி இருக்கிறது என்பவர்கள் தற்காலிகமாக முதலீட்டு தொகையை குறைக்கலாம். இதனால் அன்றாட செலவுகளுக்கு கையில் பணம் இருக்கும். ஏனெனில் வேலை பறி போனாலும் வீட்டு வாடகை, மளிகை பொருட்கள், கல்வி, மருத்துவ செலவுகளுக்கு தொடர்ந்து பணம் தேவைப்படும். எனவே கையில் இருக்கும் பணத்தை கொண்டு எத்தனை மாதம் சமாளிக்க முடியும் அதில் முதலீட்டயும் மேற்கொள்ள முடியுமா என பட்ஜெட் போட்டு பாருங்கள்.

Recommended For You

மேலும் பணிநீக்கம் செய்யப்படும் அபாயம் உள்ள துறைகளில் நீங்கள் வேலை செய்து வந்தால் குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரையிலான செலவுகளுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அவசர கால நிதியை சேமித்து வைப்பது அவசியம். ஏஐ காலத்தில் எந்த வேலைகளுக்குமே உத்தரவாதம் இல்லாமல் போய்விட்டது என்பதால் முன்னெச்சரிக்கையாக நிதியை திட்டமிடுவது தான் நல்லது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+