சொந்த வீடு என்பது ஒவ்வொரு குடும்பம்பத்தின் வாழ்நாள் கனவு. ஆனால் விண்ணை முட்டும் வீடுகளின் விலையும், மாதத் தவணை (EMI) சுமையும் அந்த கனவை எட்டாக்கனியாக்கி விடுகின்றன. இங்கேதான் ஜாயிண்ட் ஹோம் லோன் எனும் ஒரு ஸ்மார்ட் ஐடியா கைகொடுக்கிறது.
கணவன், மனைவி இருவரும் இணைந்து வீட்டுக் கடன் வாங்கும் போது, கடனை திருப்பிச் செலுத்தும் சுமை பாதியாக குறைப்பது மட்டுமல்லாமல், வருமான வரிச் சட்டத்தின் கீழ் இருவரும் தனித்தனியாக வரி விலக்கு பெற முடியும். இது வெறும் கடன் மட்டுமல்ல, உங்கள் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு வாய்ப்பு. வீட்டின் உரிமையை எப்படி பிரிக்க வேண்டும்? வட்டி மற்றும் அசல் தொகையில் அதிகபட்ச வரிச் சேமிப்பை பெறுவது எப்படி? ஸ்மார்ட் ஜோடிகளுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ.

இந்திய வீட்டு வசதி சந்தையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வீடு வாங்குவது என்பது இப்போது ஒரு தனிநபரின் முடிவாக இல்லாமல், குடும்பத்தினருடன் இணைந்த நிதி முடிவாக (Joint Financial Decision) மாறி வருகிறது.
இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்கள் வீட்டின் விலையை எளிதாக எதிர்கொள்வது மட்டுமல்லாமல், வங்கிகள் கடனுக்கான அபாயத்தை கணக்கிடும் முறையையும் மாற்றியமைத்துள்ளன. இரண்டு பேர் சேர்ந்து கடன் வாங்கும் போது, கடனை திருப்பிச் செலுத்தும் திறனை அதிகரிப்பதாக கருதி வங்கிகள் எளிதாக கடன் வழங்குகின்றன.
உதாரணத்திற்கு கணவன், மனைவி இருவரும் இணைந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்குகிறார்கள் என வைத்துக் கொள்வோம். இது குறித்து ஆதித்யா பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் கட்கில் தம்பதிகளுக்கான நிதி திட்டமிடலை விரிவாகக் கூறியுள்ளார்.
தற்போதைய காலத்தில் வீடு வாங்குவது என்பது வெறும் சொத்து வாங்குவதாக மட்டுமல்லாமல், அது ஒரு குடும்பத்தின் நிதி சார்ந்த யுக்தியாகவும் மாறியுள்ளது. குறிப்பாக 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டிற்கு திட்டமிடும்போது, தம்பதிகள் இணைந்து கடன் வாங்குவது அவர்களின் கடன் தகுதியை அதிகரிக்கும். அதோடு மிகப்பெரிய அளவில் வரி சலுகையும் பெற உதவும்.
இன்றைய காலத்தில் வங்கிகள் கடன் கொடுக்கும் முன்பு, வாடிக்கையாளர்களின் திருப்பி செலுத்தும் திறன் மற்றும் கடன் வரலாறு ஆகியவற்றை முக்கியமாக கவனிக்கின்றன. ஆக கணவன், மனைவி இருவரின் வருமானத்தையும் ஒன்றாக கணக்கிடுவதால், அதிக கடன் தொகை பெற வாய்ப்புள்ளது. 40 லட்சம் ரூபாய் வீட்டிற்கு மாத தவணையாக 32,000 ரூபாய் முதல் 35,000 ரூபாய் எனும் போது, இரு வருமானங்கள் இருந்தால் எளிதாக சமாளிக்கலாம். மேலும் இருவருக்குமே சிபில் ஸ்கோர் 700-க்கு மேல் இருந்தால் வட்டி விகிதம் குறைவாகவும் இருக்கும். தம்பதிகள் இருவரும் நிலையான வேலை மற்றும் சிறந்த வருமானம் இருக்கும் போது வங்கிகளின் நம்பிக்கையும் அதிகமாக இருக்கும். ஆக வங்கிகள் விரைவில் கடன் கொடுக்க ஒப்புக் கொள்ளலாம்.
கடனுடன் சேர்த்து நீங்கள் வரி சலுகைகளை பெற வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் முக்கியம். ஒன்று நீங்கள் வீட்டின் உரிமையாளராக இருக்க வேண்டும், இரண்டாவது நீங்கள் வீட்டிற்கான மாத தவணையை செலுத்த வேண்டும். ஆக அதற்கான சிறந்த வழிமுறை வீட்டை இருவர் பெயரிலும் ஜாயிண்ட் ஆக பதிவு செய்யுங்கள். வீட்டின் உரிமையை 50;50 என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் வருமான வரி விலக்கையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
வீட்டுக் கடனுக்கு இணைந்து விண்ணப்பிக்கும்போது, தம்பதிகளில் ஒருவரை முதன்மை விண்ணப்பதாரர் ஆக தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் பின்வரும் தகுதிகளை கொண்டிருப்பது கடனை எளிதாக்கும். அதாவது அதிக மற்றும் நிலையான வருமானம் உடையவராக இருக்க வேண்டும். ஏற்கனவே கடன் வாங்கியிருந்தால் அது குறைவாக இருக்க வேண்டும். சிறந்த சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும். முறையான பரிவர்த்தனை வரலாறும் இருக்க வேண்டும்.
பொதுவாக வங்கிகள் கடன் கொடுப்பதற்கு முன்பு, சிபில் ஸ்கோர் 700-க்கும் மேல் இருக்க வேண்டும். அவர்கள் ஒரு வேளை கிரெடிட் கார்டு பயன்பாடு இருந்தால் அது 30%-க்கும் குறைவாக இருத்தல், அதிக வட்டி கொண்ட தனிநபர் கடன்கள் இல்லாமல் இருப்பது, கடந்த 6-12 மாத கால வங்கி அறிக்கை தெளிவாக இருத்தல், வீடு RERA அங்கீகாரம் பெற்ற திட்டமாக இருத்தல். வருமான வரித் தாக்கல் (ITR) மற்றும் சம்பள சான்றிதழ்கள் சரியாக இருக்கிறதா என்பதை கண்காணிக்கின்றன. ஆக இதெல்லாம் உங்களிடம் சரியாக இருந்தால், நிச்சயம் உங்களுக்கு டபுள் ஜாக்பாட் தான்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications