பொதுவாக வீட்டுக்கடன் வாங்கும்போது நம்முடைய கிரெடிட் ஸ்கோர், வருமானம், வயது என பலவற்றை கவனித்து தான் வங்கிகள் கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும்.
எனினும் ஒரு சிலருக்கு வருமானம் குறைவாக இருக்கும்போது ஜாய்ண்ட் லோன் ஆகவும், வயது அதிகமாக இருந்தாலும் ஜாய்ண்ட் லோன் ஆகவும் வங்கி அதிகாரிகள் பரிந்துரை செய்வார்கள். இது இயல்பான ஒன்று தான் என்றாலும், இது போன்று ஜாய்ண்ட் லோனாக வாங்கும்போது பல்வேறு வகையான பலன்கள் உண்டு.
ஆக இந்த ஜாயிண்ட் லோன் ஏன் சிறந்தது? இதனால் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும் வாருங்கள் பார்க்கலாம்.
வங்கிக் கடன்
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் வீடு என்பதே மிகப்பெரிய கனவாக இருக்கும். அப்படிப்பட்ட கனவு வீட்டை பலரும் வங்கிக் கடன் வாங்கித் தான் கட்டியாக வேண்டும் என்ற சூழ்நிலையே இருந்து வருகின்றது.
ஒன்று விலைவாசி விண்ணை தொட்டுள்ளது. மேலும் நிதிப் பற்றாக்குறையால் கஷ்டப்பட்டும் வரும் சூழலில் இதுபோன்ற வாய்ப்புகள் தான் மக்களுக்கு பெரிதும் உதவுகின்றன. எனினும் தற்போதைய காலகட்டத்தில் வட்டி விகிதமும் அதிகம். குறைவான வட்டியில் கடன் பெற வழி ஜாய்ண்ட் கடனும் ஒரு சிறந்த ஆப்ஷன் எனலாம்.
குறைந்த வட்டி விகிதம்
வயது அதிகம், வருமானம் குறைவு, என பற்பல காரணிகளுக்கு மத்தியில் தான் ஜாய்ண்ட் லோன் ஆப்சன் என்பது பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் வட்டி விகிதம் அதிகமுள்ள இந்த காலக்கட்டத்தில் ஜாய்ண்ட் அக்கவுண்டாக, குறிப்பாக பெண் விண்ணப்பதாரர் ஜாய்ண்ட் அக்கவுண்ட் ஹோல்டராக இணையும்போது உங்களது கடனுக்கான வட்டி விகிதம் இன்னும் குறையலாம்.
சலுகைகள் ஏராளம்
ஏனெனில் பல்வேறு வங்கிகளிலும் இன்றைய காலகட்டத்தில் பெண் வாடிக்கையாளர்களுக்கு, வட்டி விகிதத்தில் சலுகை அளிக்கின்றன. ஆக ஜாய்ண்ட் லோனில் இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. வட்டி விகிதம் மட்டும் அல்ல, சில நேரங்களில் இதுபோன்ற பல சலுகைகள் பெண் விண்ணப்பதார்களுக்கு அறிவிக்கப்படுகின்றன.
கடன் அளவு அதிகரிக்கலாம்
வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்கள் ஜாய்ண்ட் அக்கவுண்டாக விண்ணப்பிக்கும் போது, உங்களது கடனின் தொகை அளவு அதிகரிக்கும். தனியாக விண்ணப்பிக்கும்போது ஒருவரின் வருமானத்தினை பொறுத்தே கடன் அளவு இருக்கும். எனினும் சில சமயங்களில் நாம் எதிர்பார்க்கும் தொகையானது கிடைக்காது. ஆக இருவரும் சேர்ந்த விண்ணப்பதாரர்களாக மாறும்போது கடன் தொகை அளவு அதிகரிக்கும். இங்கு விண்ணப்பதாரர்கள் இருவரின் வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆக இது மிக நல்ல விஷயமே.
வரி சலுகை உண்டு
பொதுவாக கடனுடன் வரிச் சலுகையும் கிடைக்கும். பிரிவு 24 பின் கிழ் சொத்துக்களுக்கான வட்டியை திரும்ப செலுத்துவதில் 2 லட்சம் ரூபாய் வரை வரிச்சலுகை கிடைக்கும்.
இதே பெண்கள் முதன்மை விண்ணப்பதாரராக இருந்தால் தான் 2 லட்சம் ரூபாய் வரையில் சலுகையாக பெற முடியும். மேலும் கடனை திரும்ப செலுத்துவதற்காக 1.4 லட்சம் ரூபாய் வரையில் தனித்தனியான வரி விலக்கு பெறலாம்.
முதன் முறையாக வீடு வாங்குபவராக இருப்பின் அதற்கும் 80EE பிரிவின் கீழ் 50,000 ரூபாய்க்கு வரி சலுகை பெற முடியும். ஆக இருவர் விண்ணப்பதாரராக இருக்கும்போது இரு வகையிலும் வரிச்சலுகை கிடைக்கும்.
மாத தவணை சுமை குறையும்
நீங்கள் மாத மாதம் செலுத்தும் தவணை தொகையும் வட்டி குறையும்போது குறையலாம். அதோடு இருவரும் சேர்ந்து செலுத்தும்போது அதற்கான சுமை என்பது சற்றே குறைவாக இருக்கும். மொதத்தில் இருவரும் இணைந்து ஜாய்ண்ட் கணக்கின் மூலம் கடனுக்கு விண்ணபிக்கும் பட்சத்தில் கடனும் எளிதாக கிடைக்கும். கூடாக சலுகைகளும் கிடைக்கும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications