மக்களின் நிதி நலனுக்காக அரசு ஒரு முன்னோடி திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. பணி ஓய்வுக்குப் பின் தனி நபர்களுக்கு கௌரவான எதிர்காலத்தையும் நிதி ஆதாரத்தையும் அவர்களது பணிக்காலத்துக்கு பின்னரும் இந்தத் திட்டம் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் நிச்சயமாக பாதுகாப்பான, அதிகபட்ச பலனைப் பெறலாம். அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டம் உங்கள் வயதுக்கு ஏற்றார்போல ஒரு முதலீடு திட்டமாகும்.
நீங்கள் ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000 லிருந்து ரூ.5000 வரை பென்ஷன் பெறலாம். இந்த திட்டம் கவர்ச்சியான, பாதுகாப்பான பலன்களுக்கு உத்தரவாதமாக உள்ளது.

2015 ஆம் ஆண்டு இந்த அடல் பென்ஷன் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டது. முறைசாரா துறைகளை சேர்ந்த தொழிலாளர்கள் இதில் முதலீடு செய்யலாம். இப்போது 18 முதல் 40 வயது நிரம்பிய அனைத்து இந்திய மக்களுக்கும்
இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்தவர்கள் தங்களது 60 வயதுக்குப் பின்னர் பென்ஷனைப் பெறலாம்.
எடுத்துக்காட்டாக உங்கள் மனைவிக்கு 25 வயது இருந்தால் நீங்கள் மாதாமாதம் ரூ.226ஐ அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் மனைவிக்கு 39 வயது நிரம்பியிருந்தால் ரூ.792ஐ அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
இத்துடன் மாதாந்திர பென்ஷன் உறுதி செய்யப்பட்ட நிலையில் முதலீட்டாளர் இறந்து விட்டால் அவரது வாரிசுக்கு ரூ.5.1 லட்சம் தரப்பட்டு அத்துடன் மாதாந்திர பென்ஷன் முழுமையாகவும் வழங்கப்படும்.
அடல் பென்ஷன் திட்டத்தில் ஒருவர் 18 வயதில் சேர்ந்திருந்தால் அவர் மாதம் ரூ.210 செலுத்த வேண்டும். இதன் மூலம் அவரது 60 வயதுக்குப் பின் ரூ.5000 பென்ஷன் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் சேருவதற்கு விண்ணப்பதாரருக்கு ஒரு வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும்.
ஒருவருக்கு ஒரு அடல் பென்ஷன் அக்கவுன்ட்தான் இருக்கும். எவ்வளவு விரைவில் இந்தத் திட்டத்தில் சேருகின்றீர்கள் அந்தளவுக்கு அதிகமான பலன்களைப் பெறலாம். அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரி சட்டம் 80சி மூலம்ரூ.1.5 லட்சம் வரிச்சலுகை கிடைக்கும்.
எதிர்பாராத விதமாக இந்தத் திட்டத்தில் இணைந்திருந்தவர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்துக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications