வெறும் 3 நிறுவனங்களில் முதலீடு செய்து ரூ.100 கோடிக்கு அதிபதியான முதியவர்..!!

பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் அனைவருமே வெற்றி பெறுவதில்லை. சரியான நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்பவர்கள் மட்டுமே நல்ல லாபம் பார்க்கின்றனர். அப்படி வெறும் 3 நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்து இங்கே ஒரு முதியவர் 100 கோடிக்கு அதிபதியாக மாறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அந்த முதியவரின் பங்குச்சந்தை முதலீடு குறித்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. எக்ஸ் பக்கத்தில் ஆல்ஃபா விசார் என்ற ஐடியில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் ஒருவரின் தோற்றத்தை வைத்து யாரையும் எடை போட்டு விடக் கூடாது, இந்த முதியவர் 100 கோடி ரூபாய்க்கு அதிபதி என பதிவிட்டுள்ளார்.

வெறும் 3 நிறுவனங்களில் முதலீடு செய்து ரூ.100 கோடிக்கு அதிபதியான முதியவர்..!!

மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்படும் அந்த முதியவர், தனது நீண்டகால முதலீட்டு அனுபவத்தையும், அதன் பலனாக சேர்ந்த செல்வத்தையும் அதில் பகிர்ந்துள்ளார். அவர் லார்சன் & டப்ரோ (L&T) நிறுவனத்தில் 27,855 பங்குகள் வைத்துள்ளார். இதன் மதிப்பு மட்டும் சுமார் 80 கோடி ரூபாய் என மதிப்பிடப்படுகிறது.

அதே போல அல்ட்ராடெக் சிமெண்ட் (UltraTech Cement) நிறுவனத்தில் 2,475 பங்குகள் வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 21 கோடி ரூபாய். கர்நாடகா வங்கி (Karnataka Bank)யில் 4,000 பங்குகள் வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய்.

Also Read

இந்த முதலீடுகள் அனைத்தையும் சேர்த்து அவரது போர்ட்ஃபோலியோவின் மொத்த மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய். மேலும், இந்த முதலீடுகள் மூலம் தனக்கு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் ரூபாய் டிவிடெண்ட் கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தனது அன்றாட வாழ்க்கைக்கு போதுமானதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தான் முதலீட்டாளர்கள் மத்தியில் செம வைரலான வீடியோவாக உள்ளது. சரியான நிறுவனத்தில் முதலீடு செய்து அதனை வளர்ச்சி அடைய விட்டால் அதன் பலன் எப்படி இருக்கும் என்பதற்கு இவர் ஒரு சிறந்த உதாரணம். பல பயனர்கள், சரியான முதலீட்டு பங்குகளை தேர்ந்தெடுத்து, பொறுமையுடனும் ஒழுக்கத்துடனும் நீண்ட காலம் காத்திருந்தால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றியை அடைய முடியும் என பாராட்டி வருகின்றனர்.

Recommended For You

அதே சமயம், இவ்வளவு சொத்து இருந்தும் ஏன் இன்னும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என கேள்வி எழுப்புகின்றனர். சிலரோ சொத்து விவரங்களை பொதுவெளியில் இப்படி வெளிப்படுத்துவது பாதுகாப்பானதுதானா என கவலை தெரிவிக்துள்ளனர்.

இருந்தாலும் பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு இது ஒரு பாடம். குறுகிய கால லாபத்தை தேடாமல், நல்ல நிறுவனங்களில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து, பொறுமை காப்பதே மிகப்பெரிய செல்வத்தை உருவாக்க வழிவகுக்கும் என்பதற்கு இந்த முதியவர் ஒரு சிறந்த உதாரணமாகியுள்ளார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+