சென்னை: இந்தியாவில் தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த பொருட்கள் விலை மதிக்க முடியாதவையாக இருக்கின்றன . வீட்டில் தங்கம் இருந்தால் சற்று கூடுதல் பாதுகாப்போடு நாம் இருக்க வேண்டியது அவசியமாகறது. குறிப்பாக திருட்டு பயம் அதிகமாக இருப்பதால் தங்கத்தை பாதுகாப்பது பெரிய வேலையாக தான் இருக்கிறது. தங்கத்தை லாக்கரில் வைப்பது சிறந்ததா அல்லது வீட்டிலேயே வைத்திருப்பது சிறந்ததா என்பதை நாம் இந்த கட்டுரையில் காணலாம்.
வீடுகளில் தங்க நகைகளை வைத்திருக்கும் போது வீட்டினை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்லும்போது நம் எண்ணம் முழுவதுமே வீட்டில் இருக்கும் தங்கத்தின் மீதுதான் இருக்கும். யாரேனும் வீடு புகுந்து திருடி விடுவார்களோ என்ற அச்சத்துடன் இருக்க வேண்டும். ஆனால் நாம் தங்கத்தை வங்கி லாக்கரில் வைத்து விட்டால் இந்த அச்ச உணர்வு நமக்கு தேவையில்லை. பொதுவாக வங்கி லாக்கர்களில் தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், காப்பீட்டு ஆவணங்கள், உயில் உள்ளிட்டவற்றை நாம் வைக்கலாம்.

லாக்கரில் வைக்கப்படும் போது திருட்டிலிருந்து அவற்றை பாதுகாக்கிறோம் மற்றும் தீ விபத்து உள்ளிட்ட பிற நிகழ்வுகளில் இருந்தும் அவற்றை பராமரிக்கிறோம். நமது தங்க நகை மற்றும் பிற ஆவணங்களை வங்கிகளில் ஒரு லாக்கரை வாடகைக்கு எடுத்து அதில் சேமித்து வைத்துக் கொள்கிறோம்.
அதனை பாதுகாப்பாக பராமரிப்பதற்காக அந்த வங்கிக்கு நாம் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வருகிறோம். நமக்கு தேவைப்படும் சமயங்களில் வங்கிக்கு சென்று அந்த நகைகளையும் ஆவணங்களையும் நம்மால் அணுக முடியும். எனவே இவை பாதுகாப்பாக இருக்கிறது என்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
பொதுவாக இது போன்ற நகை மற்றும் ஆவணங்களை லாக்கரில் வைப்பதற்கு புகழ்பெற்ற மற்றும் மிகச் சிறந்த பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட ஒரு வங்கியை தேர்வு செய்வது அவசியம். வங்கியின் செயல்பாட்டு நேரம் மற்றும் இந்த லாக்கர்களுக்காக வங்கிகள் நம்மிடம் வசூலிக்கும் கட்டணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாம் வங்கிகளை தேர்வு செய்ய வேண்டும்.
வங்கிகளுக்கு சென்று அங்கே கிடைக்கும் லாக்கர்கள் குறித்தும், அதற்கான கட்டணங்கள் குறித்தும் விசாரித்துவிட்டு முடிவெடுத்து உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் நாம் நமது நகைகளையும் ஆவணங்களையும் லாக்கர்களில் பத்திரமாக வைக்க முடியும்.லாக்கர் வசதி ஏற்பட்டவுடன் வங்கியானது 2 சாவியை வழங்கும். ஒரு சாவி உங்களிடமும் மற்றொரு சாவி வங்கிய இடமும் இருக்கும். வங்கி லாக்கரை திறக்கும் போது இரண்டு சாவியும் அங்கே கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது முக்கியமானது.
அதுவே தங்க நகைகளை வீட்டில் வைத்திருப்பதில் கிடைக்கும் சவுகரியம் விரும்பிய நேரத்தில் அந்த நகைகளை நாம் அணிந்து கொள்ள முடியும். லாக்கரில் இருந்தால் வங்கி செயல்பாட்டு நேரத்தில் மட்டுமே நேரில் சென்று நகைகளை அணுக முடியும். ஆனால் பாதுகாப்பு என வரும்போது வங்கி லாக்கரில் வைப்பது தான் சிறந்தது.
ஒருவேளை வீட்டிலேயே உங்களது தங்க நகைகளை வைத்திருக்க விரும்பினால் அதற்கான காப்பீடு திட்டங்களை எடுத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். இதன் மூலம் நகை திருடு போவது, தீ விபத்தால் சேதமடைவது மற்றும் இயற்கை பேரிடர்களால் சேதம் அடைவது ஆகியவற்றுக்கு எதிராக உங்களுக்கு காப்பீடு கிடைக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications