முதலீடு செய்ய வேண்டும், ஆனால் முதலீடு செய்யக்கூடிய தொகை இரட்டிப்பாக வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் அரசாங்கமே ஒரு முதலீட்டு திட்டத்தை வழங்குகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. கிசான் விகாஸ் பத்ரா என்ற அரசாங்க சேமிப்பு திட்டத்தின் மூலம் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்திற்கு தற்போது 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. சேமிப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில் உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கவும் KVP திட்டம் உதவும்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?: பொது வருங்கால வைப்பு நிதி (PPF), பிக்சட் டெபாசிட்கள் (FD) போன்ற இந்தியாவில் உள்ள பிரபலமான சிறுசேமிப்பு திட்டங்களில் கிசான் விகாஸ் பத்ரா திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். வெறும் 115 மாதங்களில் உங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாக்கி பெற்றுக்கொள்ளலாம். இது தோராயமாக 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள். நீங்கள் இன்று முதலீடு செய்தால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள், உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும்.

உதாரணமாக ரூ.10 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால்.. அந்த முதலீடு ரூ.20 லட்சமாக மாறி இருக்கும். அதுவே ரூ.5 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால்.. அது ரூ.10 லட்சமாக மாறி இருக்கும். 1 ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதம் KVP திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.
குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச முதலீடு: கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இந்த திட்டத்திற்கு கிடையாது. 100-இன் மடங்குகளில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
யார் முதலீடு செய்யலாம்?: KVP திட்டத்தில் தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களின் சார்பாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம். கேவிபி திட்டத்தில் கூட்டுக் கணக்கையும் திறக்கலாம்.
வரி விதிப்பு: வேறு சில சேமிப்புத் திட்டங்களைப் போலல்லாமல், KVP-யின் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் முதலீட்டைத் திட்டமிடும் போது உங்கள் வருமானத்தின் மீதான வருமான வரியையும் கணக்கிட வேண்டும்.
கிசான் விகாஸ் பத்ரா: மாதாந்திர வருமானத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் போன்ற அரசாங்க திட்டங்கள் போலவே போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் ஒரு திட்டமாகும். பொதுவாக இந்த சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டுக்கு ஒரு முறை அரசாங்கம் மாற்றியமைக்கும். அந்த வகையில் கடந்த இரு காலாண்டுகளாய் எந்தவித மாற்றமும் இன்றி வட்டி விகிதங்கள் அப்படியே உள்ளது. கணிசமான வருமானத்தை வழங்குவதுடன் பாதுகாப்பான முதலீடாகவும் KVP திட்டம் கருதப்படுகிறது.
எப்படி விண்ணப்பிப்பது?: KVP திட்டத்திற்கு அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். அங்கு கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் குறைந்தபட்ச முதலீட்டை தேர்வு செய்து திட்டத்தின் கணக்கை தொடங்கலாம். இது ஒரு முறை முதலீடு என்பதால் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே தெரிவித்து பணம் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications