சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது அனைவருக்கும் மிகப்பெரிய கனவாகவே இருக்கும். ஆனால் அந்த சமயத்தில் பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை பணம். ஏனெனில் எல்லோரும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தான் வீடு கட்ட வேண்டும் எனில், அது சாத்தியமில்லாத விஷயமாக இருக்கும்.
அப்படி நிதி இல்லை எனும்போது அனைவரும் தேர்ந்தெடுப்பது வங்கிக் கடனை தான். இப்படி கடன் வாங்கித் தான் வீடு கட்ட வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், எந்த வங்கியில் குறைவான வட்டி? எந்த வங்கியில் என்ன சலுகை என்பதை பற்றி யோசிப்பதில்லை.
கோடக் மகேந்திராவின் புதிய வட்டி
இன்று நாம் பார்க்கவிருப்பது கோடக் மகேந்திரா வங்கியின் புதிய வட்டி விகிதத்தினை தான். இந்த வட்டி விகிதமானது வருடத்துக்கு 6.55% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதமானது நவம்பர் 9 முதல் டிசம்பர் 10 வரையில் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய வட்டியில் கடன் யாருக்கு?
முன்னதாக இவ்வங்கியில் விழாக்கால பருவத்தினை ஒட்டி வட்டி விகிதம் வருடத்திற்கு 6.50% ஆக குறைத்திருந்தது. இந்த வட்டி விகிதமானது இன்றுடன் முடிவுக்கு வருகின்றது. இன்று முடிவடையும் இந்த வட்டி விகிதத்திற்கான கடிதத்தினை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த ஏழு நாட்களில் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் அமல்
ஆக நாளை முதல் புதியதாக வீட்டுக் கடன் அல்லது வீட்டுக் கடன் டிரான்ஸ்பர் செய்தால் அவர்களுக்கான வட்டி விகிதம், 6.55%ல் இருந்து ஆரம்பமாகும். இந்த வட்டி விகிதமானது சம்பளதாரர் அல்லது சுயதொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் பொருந்தும். மேலும் கோடக்கின் 'கோடக் டிஜி ஹோம் லோன்' மூலம் உடனடியாக அனுமதி அளிக்கப்படுகிறது.
இது தான் சரியான தருணம்
வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தினை நீட்டிப்பதில் நாங்கள் மிக மகிழ்ச்சியடைகிறோம். இது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கனவு வீட்டினை இப்போது வாங்குவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஏற்கனவே வீட்டுக் கடன் வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது மேலும் சரிவினைக் காணலாம்.


Click it and Unblock the Notifications