நீங்கள் ஒரு மத்திய அரசு அல்லது மாநில அரசு ஊழியர் என்றால் கோடக் மஹிந்திரா வங்கி செம சலுகை ஒன்றை உங்களுக்கு வழங்கியுள்ளது. இந்த சலுகை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
ஏற்கனவே மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் கோடக் மஹிந்திரா வங்கி தற்போது மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இலவச சேலரி கணக்கை தொடங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.
கோடக் நேஷன் பில்டர்ஸ் என்ற சம்பள கணக்கு மத்திய மற்றும் மாநில அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் இது முழு அளவிலான சேவை நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலரி கணக்கு
இந்த சேலரி கணக்கில் வாழ்நாள் முழுவதும் ஜீரோ பேலன்ஸ் வைத்துக்கொள்ளும் வசதி உண்டு என்றும் அதேபோல் சேவை கட்டணம் இல்லாத லாக்கர் வசதி, மாதம் இரண்டு லட்ச ரூபாய் வரை இலவச ரொக்க வைப்பு மற்றும் ஒரு மாதத்திற்கு 30 இலவச பரிவர்த்தனை ஆகிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கோடக் தெரிவித்துள்ளது.
ரூபே டெபிட் கார்டு
மேலும் ஊழியர்களுக்கு இலவசமாக ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டு வழங்கப்படும் என்றும் அது மட்டுமின்றி ஊழியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச ஆட்-ஆன் கார்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
விபத்து காப்பீடு
மேலும் இந்த கணக்கில் 50 லட்சம் வரை தனிப்பட்ட விபத்து காப்பீடு திட்டமும் அடங்கும் என்பது இந்த காப்பீட்டில் சாலை, ரயில் விபத்து காரணமாக நிரந்தர ஊனம் ஏற்பட்டால் 30 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சலுகை
இதுகுறித்து கோடக் மஹிந்திரா வங்கியின் குழுமத் தலைவர் விராட் திவான்ஜி கூறியபோது கோடாக் நேஷனல் பில்டர் சம்பள கணக்கு நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகை என்றும் அவர்களை பாராட்ட வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கேஷ்பேக் வசதி
இந்த நிலையில் இந்த சேலரி கணக்கில் சேரும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ரூபே பிளாட்டினம் டெபிட் கார்டில் 5 சதவீதம் வரை கேஷ்பேக் வசதி மற்றும் ஒருசில இந்திய பிராண்டுகள் தரும் சலுகைகள் வழங்கப்படும் என்றும் விராட் திவான்ஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் கல்வி காப்பீடு
இதுகுறித்து நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தலைமை இயக்க அதிகாரி பிரவீனா ராய் கூறும்போது, 'இந்த திட்டத்தில் காப்பீட்டு தொகை மற்றும் குழந்தைகளுக்கான கல்வி காப்பீடு உள்ளிட்ட சில நன்மைகள் இருப்பதாகவும் இவை அரசு ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சேலரி கணக்கு அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications