இனி கூகுள் பே, போன்பே, பேடிஎம் பயன்படுத்தி தாமதமான EMI செலுத்திக் கொள்ளலாம்.. எப்படி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு காலத்தில் வங்கியில் கடன் வாங்க வேண்டும்? அதனை கட்ட வேண்டுமெனில் வங்கிக்கு சென்று மணிக் கணக்கில் நின்று தான் வாங்க வேண்டும். கட்ட வேண்டும். ஆனால் இன்றே உங்கள் வீட்டில் இருந்தபடியே, இந்த செயல்பாடுகளை செய்து கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

 

அதிலும் வங்கி சேவைகளை இன்னும் எளிதாக்கும் விதமாக யுபிஐ பேமெண்ட் சேவைகள் வந்துள்ளது. நீங்கள் வாங்கும் பால், காய்கறி, நகை, துணிகள், ரீசார்ஜ், பில் கட்டணங்கள், தங்கம் என அனைத்து பரிவர்த்தனைக்கும், இந்த யுபிஐ சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அந்தளவுக்கு மக்களுக்கு நிதி சேவைகளை எளிதாக கொண்டு சேர்க்கும் பங்கில், இந்த யுபிஐ பேமெண்ட் சேவைகளுக்கு பெரும்பங்கு உண்டு. ஏனெனில் இதனை நாம் 24 மணி நேரமும் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். பெரிய கட்டணம் ஏதும் கிடையாது. பயன்படுத்துவது மிக எளிது. அந்த வகையில் இந்த யுபிஐ ஐடிகளை பயன்படுத்தி தாமதமான இஎம்ஐகளை செலுத்திக் கொள்ளலாம் என்கிறது கோடக் வங்கி.

இஎம்ஐ செலுத்தலாம்

இஎம்ஐ செலுத்தலாம்

கூகிள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட பேமெண்ட் ஆப்களை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் தவறவிட்ட அல்லது தாமதமான கடன் தவணைகளுக்கு பனம் செலுத்தகூடிய, புதிய வழியை கோடக் மகேந்திரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் BBPS சேவையினை அடிப்படையாகக் கொண்டது. ஆக இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த கோடக் மகேந்திரா பேங்க் லோன் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

என்னென்ன கடனை செலுத்தலாம்?

என்னென்ன கடனை செலுத்தலாம்?

அப்படி தேர்வு செய்யும்போது உங்களது நிலுவையிலுள்ள மாத தவணை (EMI) மற்றும் அதன் தேதிகள் என அனைத்தும் இருக்கும். வாடிக்கையாளார்கள் இதன் மூலம் தனிநபர் கடன், வீட்டுக் கடன், நுகர்வோர் நீடித்த கடன், நகைக்கடன், வணிகக் கடன், தங்கள் சொத்துக்களுக்கு எதிரான கடன், டிராக்டர் நிதிக் கடன், கட்டுமான உபகரணங்கள் கடன், வர்த்தக வாகன கடன் போன்ற அனைத்தையும் இந்த முறையில் திரும்ப செலுத்திக் கொள்ளலாம்.

எப்படி பேமெண்ட் செய்வது?
 

எப்படி பேமெண்ட் செய்வது?

வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்துள்ள பேமெண்ட் ஆப்பினை லாகின் செய்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு Kotak Mahindra bank loan என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு கோடக் மகேந்திரா கடன் அக்கவுண்ட் நம்பரை பதிவிடவும். பின்னர் உங்களது ஓவர்டியூ இஎம்ஐ எவ்வளவு உள்ளது என மற்ற விவரங்களையும் பார்த்துக் கொள்ளலாம்.

அதன்பிறகு நிலுவையை செலுத்த விரும்பினால், choose the amount அல்லது pay என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

நீங்கள் செலுத்தப்பட்ட நிலுவை தொகையானது நிகழ் நேர அடிப்படையில் அப்டேட் செய்யப்படுகிறது.

எளிதாக செலுத்திக் கொள்ளலாம்?

எளிதாக செலுத்திக் கொள்ளலாம்?

இது குறித்து கோடக் வங்கியின் President - Consumer Assets அம்புஜ் சந்த்னா கூறுகையில், பேமெண்ட் ஆப்கள் மிக வேகமாகவும் எளிமையாகவும், மக்களின் வசதிக்கு ஏற்ப பிரபலமாகி வருகின்றன. ஆக கோடக் வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ப கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட ஆப்கள் மூலம் தங்களது தாமதமான தவணை தொகையை செலுத்தலாம். வாடிக்கையாளர்கள் தங்களது இஎம்ஐ செலுத்த தவறிய நேரங்கள் உள்ளன. ஆக இனி மிக எளிதாக தங்களுக்கு பிடித்த பேமெண்ட் ஆப்கள் மூலம் செலுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kotak Mahindra bank missed loan EMI, Now pay via G-pay, paytm, phonepe

Kotak Mahindra bank missed loan EMI, Now pay via G-pay, paytm, phonepe
Story first published: Sunday, April 11, 2021, 18:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X