பலரும் வருமானத்தை அதிகரிப்பதற்காக முதலீடு செய்வது வழக்கம். அதில் சிலர் தாம் செய்யக்கூடிய முதலீடு அதே அளவுக்கு இரட்டிப்பாக வேண்டும் என்று எதிர்பார்த்து முதலீடு செய்வார்கள். இதே போன்ற வருமானம் மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கும் என்றாலும் அவற்றில் அபாயம் அதிகம். ஆனால் உங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாக்கும் பாதுகாப்பான முதலீடு திட்டம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதை நம் நாட்டில் இருக்கும் போஸ்ட் ஆபீஸ் தான் வழங்குகிறது. அது அப்படி என்ன திட்டம் எவ்வளவு நாளில் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும் என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
நல்ல வருமானத்துடன் நம்பகமான முதலீட்டு திட்டத்தை தேடுபவர்களுக்கு அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Kisan Vikas Patra - KVP) சரியான தேர்வாக இருக்கும். இந்தத் திட்டம் உங்களுடைய சேமிப்பை வளர்ப்பதற்கான பாதுகாப்பான வழியை வழங்குகிறது. சந்தை அபாயங்கள் எதுவும் இல்லாமல் காலப்போக்கில் உங்களுடைய முதலீட்டை அப்படியே இரட்டிப்பாகிறது.

உத்தரவாதமான வருமானத்தின் காரணமாக இந்தியாவில் இருக்கும் பிரபலமான முதலீட்டு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஆபத்தை நாடாத முதலீட்டாளர்களுக்கு KVP திட்டம் ஏற்றதாக இருக்கும். இந்த லாபகரமான திட்டத்தின் விவரங்கள் குறித்து பார்ப்போம்.
எவ்வாறு செயல்படுகிறது?: கிசான் விகாஸ் பத்ரா என்பது மொத்த தொகையை முதலீடு செய்யக்கூடிய ஒரு திட்டமாகும். இதில் நீங்கள் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்ய வேண்டும். அந்த முதலீடு காலப்போக்கில் இரட்டிப்பாகும். இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் இந்தத் திட்டம் சந்தை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது. தற்போதைய வட்டி விகிதமான 7.5 சதவீதத்துடன் உங்களுடைய முதலீடு வெறும் 115 மாதங்களில் இரட்டிப்பாகும்.
உதாரணமாக நீங்கள் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். 7.5% வட்டி விகிதத்தில் 115 மாதங்களுக்குப் பிறகு உங்களுடைய வருமானம் ரூ.10 லட்சம் ஆக மாறி இருக்கும். முன்னதாக இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் குறைவாக இருந்தது. அதனால் உங்களுடைய பணம் இரட்டிப்பாக சுமார் 20 மாதங்கள் ஆனது. ஆனால் தற்போதைய வட்டி விகிதத்தில் காலக்கெடு குறைக்கப்பட்டுள்ளது.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் சிறப்பம்சங்கள்: ஒருவர் ஒற்றை அல்லது கூட்டு கணக்கை தொடங்கலாம். KVP திட்டத்தின் கீழ் மூன்று பேர் வரை கூட்டுக்கணக்கை திறக்க முடியும். KVP கணக்கை திறக்கும் போது ஒரு நபரை நாமினேட் செய்வது அவசியமாகும்.
துரதிஷ்டவசமாக முதலீடு செய்தவர் இறக்கும் பட்சத்தில் அவருடைய வருமானம் நாமினிக்கு வழங்கப்படும். ரூ.5 லட்ச ரூபாய் தான் முதலீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் கிடையாது இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.1000 என்ற குறைந்த முதலீட்டில் கூட தொடங்க முடியும்.
ஆனால் இது ஒரு முறை செய்யக்கூடிய முதலீடு நீங்கள் ஒரு முறை முதலீடு செய்து விட்டால் 115 மாதங்கள் கழித்து உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். இடையில் எந்தவிதமான முதலீடும் செய்ய வேண்டி இருக்காது. கேவிபி திட்டத்திற்கான வருமானம் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்படுகிறது. இதனால் காலப்போக்கில் உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும்.
More From GoodReturns

பங்குச் சந்தை ரிஸ்க் பயமா? லாபத்திற்கு கியாரண்டி தரும் Bonds - முதலீடு செய்வது எப்படி?

தங்கம் Vs வெள்ளி:ETF ரேஸில் ஜெயிப்பது யாரு? 2026-ல் உங்கள் பணத்தை எதில் போடலாம்?

டாடா கெமிக்கல்ஸை ஓரங்கட்டிய 2 பங்குகள்! மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்த அதிரடி முதலீடு!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!

வாழ்க்கையை என்ஜாய் பண்ண சீக்கிரம் ரிடையர்மெண்ட்? மாதம் ரூ.75,000 டூ 1 லட்சம் பென்ஷன் வேண்டுமா?

தினமும் ரூ.10 போதும்! டீ குடிக்கிற செலவுல லட்சாதிபதி ஆகலாம் – எதிர்காலத்திற்கான மைக்ரோ SIP மேஜிக்!

ரியல் எஸ்டேட் முதலீடு நிஜமாகவே லாபமா? வாடகை வருமானத்தில் ஒளிந்திருக்கும் சவால்கள் என்ன?

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?



Click it and Unblock the Notifications