ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையால் பல துறைகளிலும் மனிதர்கள் வேலைவாய்ப்பினை இழந்து வருகிறார்கள். ஐடி, கால் செண்டர் வேலைகள் , ஹெச்.ஆர் வேலைகள் என படிப்படியாக நம் வேலைகளை ஏஐ வசம் இழந்து வருகிறோம்.
இப்படி திடீரென பணிநீக்கம் செய்யப்படும் போது ஒரு போரில் நிராயுதபாணியாக நிற்கும் நிலைமை தான் ஏற்படும். வேலை இல்லை, சம்பளம் வராது, ஆனால் கடன் கட்ட வேண்டும் , வீட்டு செலவுக்கு பணம் வேண்டும் பிள்ளைகள் படிப்புக்கு பணம் வேண்டும் என செலவுகள் அப்படியே தான் இருக்கும். எதை வேண்டுமானாலும் சமாளிக்கலாம் ஆனால் ஈஎம்ஐ எப்படி சமாளிப்பது.

பணிபாதுகாப்பு இல்லாத துறைகளில் வேலை செய்பவர்கள் மாதம் தோறும் ஈஎம்ஐ செலுத்த கூடிய நபர்களாக இருந்தால் தங்களை தயார் படுத்தி வைத்து கொள்வது நல்லது. நிறுவனங்கள் உங்களுக்கு கடன் இருக்கிறது மாதம் ஈஎம்ஐ கட்டுகிறீர்கள் என பாவம் பார்த்து வேலையை விட்டு நீக்காமல் இருக்காது.இதனால் கடன் வாங்கியவர்கள் முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது. உங்கள் வேலை போய்விட்டதா முதலில் நீங்கள் செய்ய வேண்டியது சேமிப்பு, அவசரகால நிதி, பணிநீக்கத்தின் போது கிடைத்த நிதி இழப்பீடு ஆகியவற்றை கணக்கிட வேண்டும். இந்த பணத்தில் அத்தியாவசிய செலவுகளையும், ஈஎம்ஐ-யும் எத்தனை மாதங்களுக்கு தாக்கு பிடிக்கும் என கணக்கிடுங்கள்.
முதலில் நீங்க செய்ய வேண்டும் தேவையற்ற செலவுகளை நிறுத்துவது. தேவையற்ற சப்ஸ்கிரிப்ஷன்கள், டின்னர், ஷாப்பிங் ஆகியவற்றை நிறுத்தி மிக மிக அத்தியாவசியத்துக்கு மட்டுமே செலவிடுங்கள். இது மீண்டும் வேலை கிடைக்கும் வரை உங்களை பாதுகாக்கும். ஒரு வேளை ஈஎம்ஐ செலுத்தும் அளவுக்கு எல்லாம் சேமிப்பு இல்லை என்றால் உடனே கடன் வாங்கிய வங்கியை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துரைத்து ஈஎம் ஐ செலுத்துவதை தள்ளி போட முடியுமா, அபராதம் இல்லாமல் எத்தனை மாதம் தள்ளி போடலாம் என்பதை கேளுங்கள், கடன் காலத்தை நீட்டித்து மாதாந்திர தவணையை குறைக்க முடியுமா என விசாரிப்பது அவசியம்.
பணிநீக்கம் செய்யப்பட்டால் பழைய சம்பளத்துக்கு பழைய நிலைக்கே வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து நீண்ட காலம் வேலை தேடி கொண்டே இருக்காதீர்கள். முதலில் ஒரு பகுதிநேர வேலையை தேடுங்கள். அந்த வாய்ப்பு கிடைத்தால் தற்காலிக நிதி தீர்வு கிடைக்கும். உங்களின் திறன்களை வளர்த்து கொண்டு புதிய வேலைக்கு நல்ல சம்பளத்துடன் செல்ல முயற்சிக்கலாம்.
இப்படி பகுதி நேர வேலையில் பணம் கிடைக்கும் போதே அதில் கடன் தவணை செலுத்த முயற்சி செய்யவும் இது உங்களின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்காமல் தடுக்கும். நீங்கள் வீட்டு கடன், வாகன கடன், தங்க கடன் வாங்கி இருந்தால் வங்கிகள் சில சலுகைகளை தரவும் தவணையை தள்ளி போடவும் வாய்ப்புள்லது. இதுவே தனிநபர் கடன் என்றால் வங்கிகள் சட்ட நடவடிக்கை கூட எடுக்கலாம்.
எனவே தான் முடிந்தவரை தனிநபர் கடனே வாங்காதீர்கள் அப்படியே வாங்கி இருந்தாலும் முடிந்தவரை முன் கூட்டியே அடைக்க பாருங்கள், இரண்டுமே முடியவில்லை ஆனால் வேலை போய்விட்டது என்றால் வங்கியிடம் நிலைமையை வெளிப்படையாக தெரிவிப்பது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications