வருமான வரித்துறை மற்றும் வரி ஆலோசகர்களிடமிருந்து பலமுறை நினைவூட்டல்கள் வந்த போதிலும், பல வரி செலுத்துவோர் வருமான வரி கணக்கு (ITR) தாக்கல் செய்வதை கடைசி நிமிடத்திற்கு தள்ளி வைக்கும் தவறை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31-ஆம் தேதி ஆகும். இன்றுடன் சேர்த்து இன்னும் 3 நாட்களே உள்ளன.
காலக்கெடு நெருங்கும் இறுதி நாட்களில் ITR தாக்கல் செய்யும்போது பல ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதில் ஒன்று, www.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இ-ஃபைலிங் போர்ட்டல் ஜூலை 31-ஆம் தேதி அன்று அதிகமான வர செலுத்துவோர் ITR தாக்கல் செய்ய முற்படும்போது, தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படலாம். இதனால் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், கெடுவை பூர்த்தி செய்ய அவசரப்பட்டு, வருமானத்தை விட்டுவிடலாம். இது பின்னர் வருமான வரி அறிவிப்புகளில் முடிவடையலாம், அல்லது அதிக வரி செலுத்த வழிவகுக்கலாம்.
தொந்தரவில்லாத ITR தாக்கல், செயலாக்கம் மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவதை உறுதிசெய்ய நீங்கள் தவிர்க்க வேண்டிய 5 பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு சொத்துக்களை வெளியிடுவதில்லை: பல இந்திய ஊழியர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் வெளிநாடுகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் வழக்கமாக தாங்கள் வேலை பார்க்கும் நாடுகளில் வங்கிக் கணக்குகளைத் திறக்க வேண்டும்.
இருப்பினும், பலர் இந்தியாவுக்குத் திரும்பி வந்து, குடியுரிமை பெற்று தங்கள் ஐடிஆர்-களை தாக்கல் செய்தவுடன் இந்தக் கணக்குகளை அறிவிப்பதைத் தவறவிடுகிறார்கள். வெளிநாட்டு சொத்துக்களை வெளியிடாவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் வரி விதிப்புச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம்.
தவறான விலக்குகளை கோருதல்: IT ரிட்டர்ன்களைச் சமர்ப்பிக்கும் போது ஆவணச் சான்றுகள் எதுவும் இணைக்கப்பட வேண்டியதில்லை என்பதால், சிலர் இந்த தளர்வைத் தவறாகப் பயன்படுத்தி வரி திரும்பப் பெறுகிறார்கள்.
சில வரி செலுத்துவோர் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் அல்லது ஊனமுற்ற வரி செலுத்துவோருக்கான பிரிவு 80U-இன் கீழ், 80G பிரிவின் கீழ் விலக்குகளை மோசடியாக கோருகின்றனர். ஆனால் தற்போது AIS மூலம் சரிபார்ப்பு முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தவறான ITR படிவத்தைத் தேர்ந்தெடுப்பது: ITR தாக்கல் செய்வதற்கான தவறான படிவத்தை நீங்கள் தேர்வுசெய்தால் வேண்டுமென்றே உங்கள் வருமானத்தை மறைத்தவராக கருதப்படுவீர்கள். உதாரணமாக,ITR-2 என்பது உங்களுக்குப் பொருத்தமான படிவமாக இருந்து, நீங்கள் கவனக்குறைவாக ITR-2 படிவத்தை தேர்வு செய்தால் இது போன்ற சிக்கலை நீங்கள் சந்திக்கக் கூடும்.
முந்தைய வேலை செய்யும் இடத்திலிருந்து வருமானத்தை வெளிப்படுத்தாதது: நீங்கள் ஒரு நிதி ஆண்டில் வேலை மாறி இருந்தால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற சம்பளம் பெறும் வரி செலுத்துவோருக்கு அவர்களின் முந்தைய மற்றும் தற்போதைய முதலாளிகளால் வழங்கப்பட்ட இரட்டை படிவம் 16 இருக்கும்.
உங்களின் அனைத்து வருமான விவரங்களையும் AIS கைப்பற்றுகிறது. எனவே இரு முதலாளிகளிடமிருந்தும் சம்பாதிக்கப்பட்ட வருமான விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தவறான வங்கி கணக்கு விவரங்களை என்டர் செய்தல்: முன்கூட்டியே சரிபார்க்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களை பயன்படுத்தவும். சரியான நேரத்தில் டேக்ஸ் ரீபண்ட் பெறுவதற்கு இது உதவுகிறது. உங்கள் வங்கி விபரங்களில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால் தாமதம் ஏற்படலாம். எனவே வருமான வரி சமர்ப்பிப்பதற்கு முன்பு உங்கள் ITR படிவத்தில் அக்கவுண்ட் நம்பர், ஐஎஃப்எஸ்சி நம்பர், வங்கியின் பெயர் ஆகியவை சரியாக இருப்பதை உறுதி செய்யவும்.


Click it and Unblock the Notifications