முதலீட்டாளர்களுக்கு பொன்னான 7 போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்கள்.. வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா?

சிறிய முதலீட்டாளர்கள் பெரும்பாலும் செல்வத்தை அதிகரிப்பதற்காக பல முதலீட்டு திட்டங்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், கடன் பாத்திரங்கள் போன்ற விருப்பங்கள் உள்ளன. ஆனாலும் சில முதலீட்டாளர்கள் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் கிடைக்கும் பிக்சட் டெபாசிட்கள் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றில் தான் அதிகம் முதலீடு செய்கின்றனர். இந்தப் பதிவில் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்ய இருந்தால், தற்போது பல்வேறு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியம்.

போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் சிறுசேமிப்பு திட்டங்கள் மக்களுக்கு பயன்பெறும் வகையில் கணிசமான வட்டியை வழங்குகின்றன. அசலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வட்டியை பெற வேண்டும் என்று நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு.. இவை சிறந்த தேர்வாக இருக்கும்.

முதலீட்டாளர்களுக்கு பொன்னான 7 போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்கள்.. வட்டி விகிதம் எவ்வளவு தெரியுமா?


போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் பிரபலமான சிறுசேமிப்பு திட்டங்கள்:

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு: அதிகபட்ச வரம்பு இல்லாத இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் முதலீடு செய்யலாம். ரூ.10,000 வரை வழங்கப்படும் வட்டிக்கு வரி கிடையாது. இந்தத் திட்டங்களுக்கு வழங்கப்படும் தற்போதைய வட்டி விகிதம் 4 சதவீதம்.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்: ஒருவர் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீட்டில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கான வட்டியானது காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஆண்டுதோறும் செலுத்தப்படும்.

பிரிவு 80C-இன் கீழ் வரி விலக்கு 5 வருட கால டெபாசிட்டுக்கு கிடைக்கும். இந்த திட்டங்கள் 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகளில் கிடைக்கும். 1 ஆண்டு முதிர்வு காலத்திற்கு 6.9 சதவீதமும், 2 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு 7 சதவீதமும், 3 ஆண்டு முதிர்வு காலத்திற்கு 7.1 சதவீதமும், 5 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு 7.5 சதவீத வட்டியும் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீட்டில் தொடங்கலாம். அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். வட்டி காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தப்படும். வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் டெபாசிட்டர்கள் வரி விலக்கு பெறலாம். இந்த திட்டம் ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது.

போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS): இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் வெறும் 1,000 ரூபாயில் MIS கணக்கைத் திறக்கலாம். ஒரு MIS கணக்கில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ரூ. 9 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம். இந்த திட்டம் ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டியை வழங்குகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ்: ஒருவர் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் மற்றும் அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கோருவதற்கு டெபாசிட்டர்களுக்கு உரிமை உண்டு. இந்த திட்டங்கள் ஆண்டுக்கு 7.7 சதவீத வட்டியை வழங்குகிறது.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF): ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். PPF மீதான வட்டிக்கு வரி இல்லை. இந்த திட்டத்தில் டெபாசிட் செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது.

கிசான் விகாஸ் பத்ரா: குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீட்டில் இந்தத் திட்டத்தில் முதகலீடு செய்யலாம் மற்றும் அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. இந்த திட்டம் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியை வழங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+