எல்ஐசி-யின் ஆதார் ஸ்டாம்ப் திட்டமானது ஆதார் அட்டை வைத்திருக்கும் ஆண்களுக்கு, ஒரு லாப நோக்கமற்ற எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் ஆயுள் காப்பீட்டு திட்டமாகும்.
இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் பாலிசிதாரர் குறைந்த பிரீமியத்தை செலுத்தினால் போதும். இந்த பாலிசியில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில், ஒரு நாளைக்கு 30 ரூபாய் பிரீமியமாக செலுத்தினால் போதுமானது. அப்படி 30 ரூபாய் செலுத்தும்பட்சத்தில் பாலிசி முதிர்வுக்கு பிறகு கிட்டதட்ட 4 லட்சம் ரூபாய் வரையில் முதிர்வு தொகை கிடைக்கும்.
அது மட்டும் அல்ல, இந்த சிறிய திட்டம் மரண சலுகைகள் மற்றும் பிற வசதிகளையும் கொடுக்கிறது.

ஆண்கள் மட்டுமே எடுக்க முடியும்
எல் ஐ சியின் இந்த பாலிசி திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் கொடுக்கிறது. எனினும் இந்த திட்டத்தில் உள்ள மைனஸ் பாயிண்ட் என்னவெனில் இந்த பாலிசியானது ஆண்களுக்கு மட்டுமே. இந்த எல் ஐ சி திட்டத்தை வாங்க, ஆதார் அட்டை அவசியமாகும். எல்ஐசி-யின் இந்த சூப்பரான திட்டத்தில் இறப்பு நன்மைகளும் உண்டு.

என்னென்ன நன்மைகள்?
அதாவது பாலிசிதாரர் ஒரு வேளை இறந்துவிட்டால் பாலிசிதாரரின் நாமினுக்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன. இதே பாலிசிதாரர் உயிருடன் இருந்தால், அவருக்கு முதிர்வு நன்மைகள் கிடைக்கும். இதுவும் ஒரே நேரத்தில் கொடுக்கப்படுகிறது. அதோடு இந்த திட்டத்திற்கு பிணையமாக வைத்து கடன் பெறும் வசதியும் உண்டு.

பாலிசியை யாரெல்லாம் எடுக்கலாம்?
இந்த பாலிசியை எடுக்க பாலிசிதாரர் 8 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். இதே பாலிசி முதிர்வடையும்போது 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 75,000 ரூபாயாகும். அதிகபட்ச காப்பீட்டு தொகை 3 லட்சம் ரூபாயாகும். பாலிசி காலம் 10 - 20 ஆண்டுகளாகும். இதில் காப்பீட்டு தொகை மற்றும் கூடுதலாக 97,500 ரூபாயும், அதனுடன் 4.5% வட்டியும் கிடைக்கும்.

பிரீமியம் எவ்வளவு?
ஆதார் ஸ்டாம்ப் பாலிசி திட்டத்தில் பாலிசிதாரருக்கு 20 வயது என எடுத்துக் கொண்டால், வருடத்திற்கு 10,821 ரூ;பாயாகும். 6 மாதங்களுக்கு பிறகு 5,468 ரூபாயாகும். மாத பிரீமியம் எனில் 921 ரூபாயாகும். பாலிசி காலம் 20 வருடங்களாகும். இதன் மூலம் 3 லட்சம் ரூபாய் முதிர்வு தொகை கிடைக்கும். கூடுதலாக லாயல்டி 97,500 ரூபாய் மற்றும் 4.5% வட்டியும் கிடைக்கும். ஆக மொத்தத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 3.97 லட்சம் ரூபாய் வரையிலும் கிடைக்கும்.