பெண்களிடையே நிதி கல்வியறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக எல்ஐசி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பீமா சகி யோஜனா என்ற இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 9 ஆம் தேதியான இன்று தொடங்குகிறார். முதலில் ஹரியானாவில் தொடங்கும் இந்த திட்டம் அதன்பின் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் இந்த திட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-70 வயதுடைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்புப் பயிற்சியும், நிதி அறிவு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் உதவித்தொகையும் பெறுவார்கள்.

பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் எல்ஐசி முகவர்களாகப் பணியாற்றலாம் மற்றும் பட்டதாரி பெண்கள் எல்ஐசியில் டெவலப்மென்ட் ஆபிஸர் பதவிகளுக்குப் பரிசீலிக்கப்படுவதற்குத் தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், எல்ஐசி நிறுவனத்தின் இந்த பீமா சகி யோஜனா என்ற திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
இதில் அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கியத்துவம் ஆனது கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், அவர்களுக்கு நிதி ஆதரத்தை உருவாக்குவதையும் அடிப்படையாக கொண்டது.அந்த வகையில், முதல் ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தின்கீழ் முகவர்களாக பணியாற்றுபவர்களுக்கு மாதம் ரூ.7,000 வழங்கப்படுகிறது. இது அடுத்தாண்டு சம்பளம் மாதம் ரூ.6,000 ஆக குறைக்கப்படும் எனவும் அதற்கு அடுத்து மூன்றாமாண்டில் மாதம் ரூ.5,000 ஆகவும் குறைக்கப்படும் என கூறப்படுகிறது.
இதைத் தவிர்த்து அவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக ரூ.2,100 வழங்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைந்தால் அவர்களுக்கு கூடுதல் கமிஷனும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் பெண்களுக்கு காப்பீடு முகவர் பணி வழங்கப்பட இருக்கிறது. இது வருங்காலத்தில் ரூ.50 ஆயிரம் பெண்கள் வரை நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஹரியானாவில் தொடங்கும் இந்த திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
பீமா சகி யோஜனா திட்டத்தின்கீழ் நீங்கள் விண்ணப்பிக்க, வயது வரம்பு 18 முதல் 50 ஆக இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டம் கிராமப்புற பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது பெண்களை காப்பீட்டு முகவர்களாக தொழில்சார் பாத்திரங்களை வழங்கி அவர்களுக்கு நிதி சுதந்திரம் அளிக்கிறது.


Click it and Unblock the Notifications