கிரெடிட் கார்டு என்றாலே ஒரு காலத்தில் தயக்கம் காட்டிய நம் மக்கள் இப்போது சர்வ சாதாரணமாக கிரெடிட் கார்டை பயன்படுத்த தொடங்கி விட்டனர். பணம் இல்லாத நேரங்களில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கி கொள்ளும் வசதி, நிறுவனங்கள் வழங்கும் கேஷ்பேக், தள்ளுபடி போன்ற பல நன்மைகள் காரணமாக கிரெடிட் கார்டு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
வங்கிகள் மட்டுமின்றி தனியார் நிதி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்குகின்றன. தற்போது எல்.ஐ.சி. கார்ட்ஸூம் கிரெடிட் கார்டு வர்த்தகத்தில் இறங்கி விட்டது. ஐ.டி.எஃப்.சி. பர்ஸ்ட் வங்கி, LIC கார்ட்ஸ் மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை இணைந்து எல்.ஐ.சி. கிளாசிக் மற்றும் LIC செலக்ட் என இரண்டு பிராண்டட் கிரெடிட் கார்களை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஐ.சி. கிளசாசிக் கிரெடிட் குறித்து முதலில் பார்ப்போம்.

LIC கிளாசிக் கிரெடிட் கார்டின் சிறப்பம்சங்கள்
கட்டணங்கள்: பொதுவாக நீங்கள் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, இந்த கணக்கை தொடங்குவதற்கு, சேருவதற்கான அல்லது வருடாந்திர உறுப்பினர் கட்டணம் நிறுவனங்களால் விதிக்கப்படும். ஆனால் இந்த கிரெடிட் கார்டுக்கு ஜீரோ சேரும் கட்டணம் மற்றும் வருடாந்திர கட்டணம்.
வட்டி விகிதம்: கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் நிலுவை தொகையை ஒவ்வொரு மாதமும் முழுமையாக செலுத்த தவறினால் வட்டி விதிக்கப்படும். இந்த கிரெடிட் மாதத்துக்கு 0.75 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 9 சதவீதத்தில் இருந்து தொடங்கும். இருப்பினும் இது மாதத்துக்கு 3.5 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 42 சதவீதம் வரை செல்லலாம்.
பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏ.டி.எம்.களில் 48 நாட்கள் வரை இந்த கார்டை பயன்படுத்தி வட்டியில்லாமல் பணம் எடுக்க முடியும்.
மாதாந்திர தவணைகள்: நீங்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி செய்யும ஒவ்வொரு ஒரு பரிவர்த்தனைக்கும் ரூ.199 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தாமத கட்டணம்: கிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் செலுத்த வேண்டிய தேதி அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டிய வேண்டிய குறைந்தபட்சத் தொகையை கூட திருப்பி செலுத்த தவறினால் நிறுவனங்கள் தாமத கட்டணம் வசூலிக்கும். மொத்த நிலுவை தொகையில் 15 சதவீதம் வசூலிக்கப்படும் (குறைந்தபட்சம் ரூ.100 அல்லது அதிகபட்சம் ரூ.1,250க்கு உட்பட்டது).
போரக்ஸ் மார்க்அப்: இந்த கிரெடிட் கார்டு பயன்படுத்தி மேற்கொள்ளும் அனைத்து சர்வதேச பரிவர்த்தனைகளுக்கும் அன்னிய செலாவணி மார்க்அப் கட்டணம் 3.5 சதவீதம் விதிக்கப்படும்.
LIC கிளாசிக் கிரெடிட் சேரும் நன்மைகள்
வெகுமதிகள்: கிரெடிட் கார்டு செயல்பாட்டுக்கு வந்த 30 நாட்களுக்குள் நீங்கள் முதல் ரூ.5,000 செலவழித்தால் உங்களுக்கு 1,000 ரிவார்ட்ஸ் புள்ளிகள் கிடைக்கும். மேலும் இதே காலத்துக்குள் நீங்கள் செய்த முதல் இ.எம்.ஐ.யின் பரிவர்த்தனை மதிப்பில் 5 சதவீதம் கேஷ்பேக் (ரூ.1,000 வரை) வழங்கப்படும்.
தள்ளுபடி: இந்த கிரெடிட் பயன்படுத்தி, யாத்ராவில் உள்நாட்டு விமானங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் ரூ.500 தள்ளுபடி. ஆன்லைன் அழகு சாதன விற்பனை தளமான MYGLAMM-ல் ரூ.899 அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்கினால் ரூ.500 தள்ளுபடி. ஆன்லைன் மருந்து நிறுவனமான PharmEasy-ன் ரூ.399 மதிப்புள்ள் 6 மாத PharmEasy Plus உறுப்பினர் இலவசம். கண்கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான லென்ஸ்கார்டின் ரூ.500 மதிப்புள்ள 1 ஆண்டு கோல்டு மெம்பர்ஷிப் இலவசம்.
எல்.ஐ.சி. கிளாசிக் கார்டு வெகுமதிகள்
இந்த கிரெடிட் கார்ட் பயன்படுத்தி LIC இன்ஸ்யூரன்ஸ் பிரீமியம் செலுத்தினால் 6X வெகுமதி பெறுவீர்கள். இருப்பினும், எல்.ஐ.சி.யின அதிகாரப்பூர்வ இணையதளமான https://licindia.in/.மூலம் செலுத்தினாமல் மட்டுமே எந்த வெகுமதி கிடைக்கும்.
மளிகை பொருட்கள், பயன்பாடுகள்,ரயில்வே, கல்வி மற்றும் அரசாங்க பேமெண்ட்ஸ் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தினால் 3X வெகுமதிகளை பெறுவீர்கள். மற்ற எல்லா செலவுகளுக்கும் 3X வெகுமதிகள் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 300 வெகுமதி புள்ளிகள் மட்டுமே பெற முடியும்.
1X வெகுமதி என்பது ரூ.125 செலவில் 1 வெகுமதி புள்ளிக்கு சமம். 1 வெகுமதி புள்ளி என்பது 0.25 காசுகளுக்கு சமம்.
இந்த வெகுமதிகள் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். எரிபொருள், வாடகை,LIC அல்லாத காப்பீட்டு செலவுகள், இ.எம்.ஐ. பரிவர்த்தனைகள் மற்றும் பணம் எடுத்தல் ஆகியவற்றுக்கு இந்த வெகுமதி திட்டம் பொருந்தாது.
கூடுதல் நன்மைகள்
காலாண்டுக்கு ஒரு முறை உள்நாட்டு விமான நிலைய லாவுஞ் (ஓய்வறை) வசதி பயன்படுத்துதல் இலவசம்.
காலாண்டுக்கு 2 முறை ரயில்வே லாவுஞ் வசதியை பயன்படுத்துதல் இலவசம்.
இந்தியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும், 1 சதவீதம் கூடுதல் கட்டணம் தள்ளுபடி. மாதம் ரூ.200 முதல் ரூ.500 வரையிலான பரிவர்த்தனை மதிப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
எல்.ஐ.சி. கிளாசிக் கிரெடிட் கார்டு இன்ஸ்யூரன்ஸ் நன்மைகள்
கடந்த 30 நாட்களில் LIC கிரெடிட் கார்டில் குறைந்தபட்சம் ஒரு பரிவர்த்தனை செய்தால், ரூ.2,00,000க்கான தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் ரூ.25,000க்கான இழந்த கார்டு பொறுப்பு காப்பீடு செல்லுபடியாகும்.
தலா ரூ.25,000க்கு கொள்முதல் பாதுகாப்பு இழப்பீடு, கிரெடிட் ஷீல்டு மற்றும் லாஸ்ட் கார்டு பொறுப்பு.
ரூ.1,399 மதிப்புள்ள சாலையோர உதவி.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications