எல்.ஐ.சி.யின் துணை நிறுவனமான LIC கார்ட்ஸ், ஐ.டி.எஃப்.சி. பர்ஸ்ட் வங்கி மற்றும் மாஸ்டர்கார்டு ஆகியவை இணைந்து எல்.ஐ.சி. கிளாசிக் மற்றும் LIC செலக்ட் என இரண்டு பிராண்டட் கிரெடிட் கார்களை அறிமுகம் செய்துள்ளன.
குறைந்த வட்டி விகிதம், வெகுமதிகள், விபத்து காப்பீடு, தள்ளுபடி சலுகைகள் என பல கவர்ச்சிகரமான ஆதாயங்கள் இந்த கிரெடிட் கார்டுகளுடன் வழங்கப்பட்டுள்ளன. எல்.ஐ.சி. கிளாசிக் கிரெடிட் கார்டை காட்டிலும் LIC செலக்ட் கிரெடிட் கார்டில் கூடுதல் நன்மைகள் உள்ளன. எல்.ஐ.சி. செலக்ட் கிரெடிட் கார்டு குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

LIC செலக்ட் கிரெடிட் கார்டின் சிறப்பம்சங்கள்
கட்டணங்கள்: நீங்கள் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, இந்த கணக்கை தொடங்குவதற்கு, சேருவதற்கான அல்லது வருடாந்திர உறுப்பினர் கட்டணம் நிறுவனங்களால் விதிக்கப்படும். ஆனால் இந்த கிரெடிட் கார்டுக்கு ஜீரோ சேரும் கட்டணம் மற்றும் வருடாந்திர கட்டணம்.
வட்டி விகிதம்: கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் நிலுவை தொகையை ஒவ்வொரு மாதமும் முழுமையாக செலுத்த தவறினால் வட்டி விதிக்கப்படும். இந்த கிரெடிட் மாதத்துக்கு 0.75 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 9 சதவீதத்தில் இருந்து தொடங்கும். இருப்பினும் இது மாதத்துக்கு 3.5 சதவீதம் அல்லது ஆண்டுக்கு 42 சதவீதம் வரை செல்லலாம்.
பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏ.டி.எம்.களில் 48 நாட்கள் வரை இந்த கார்டை பயன்படுத்தி வட்டியில்லாமல் பணம் எடுக்க முடியும்.
மாதாந்திர தவணைகள்: நீங்கள் கிரெடிட் கார்ட் பயன்படுத்தி செய்யும ஒவ்வொரு ஒரு பரிவர்த்தனைக்கும் ரூ.199 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தாமத கட்டணம்: கிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் செலுத்த வேண்டிய தேதி அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டிய வேண்டிய குறைந்தபட்சத் தொகையை கூட திருப்பி செலுத்த தவறினால் நிறுவனங்கள் தாமத கட்டணம் வசூலிக்கும். மொத்த நிலுவை தொகையில் 15 சதவீதம் வசூலிக்கப்படும் (குறைந்தபட்சம் ரூ.100 அல்லது அதிகபட்சம் ரூ.1,250க்கு உட்பட்டது).
போரக்ஸ் மார்க்அப்: இந்த கிரெடிட் கார்டு பயன்படுத்தி மேற்கொள்ளும் அனைத்து சர்வதேச பரிவர்த்தனைகளுக்கும் அன்னிய செலாவணி மார்க்அப் கட்டணம் 3.5 சதவீதம் விதிக்கப்படும்.
எல்.ஐ.சி. செலக்ட் கிரெடிட் கார்டு சேரும் நன்மைகள்
வெகுமதிகள்: கிரெடிட் கார்டு செயல்பாட்டுக்கு வந்த 30 நாட்களுக்குள் நீங்கள் முதல் ரூ.10,000 செலவழித்தால் உங்களுக்கு 2,000 ரிவார்ட்ஸ் புள்ளிகள் கிடைக்கும். மேலும் இதே காலத்துக்குள் நீங்கள் செய்த முதல் இ.எம்.ஐ.யின் பரிவர்த்தனை மதிப்பில் 5 சதவீதம் கேஷ்பேக் (ரூ.1,000 வரை) வழங்கப்படும்.
தள்ளுபடி: இந்த கிரெடிட் பயன்படுத்தி, விமான டிக்கெட் புக்கிங் தளமான Yatra-ல் உள்நாட்டு விமானங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்தால் ரூ.500 தள்ளுபடி. ஆன்லைன் அழகு சாதன விற்பனை தளமான MYGLAMM-ல் ரூ.899 அல்லது அதற்கு மேல் பொருட்கள் வாங்கினால் ரூ.500 தள்ளுபடி. ஆன்லைன் மருந்து நிறுவனமான PharmEasy-ன் ரூ.399 மதிப்புள்ள் 6 மாத PharmEasy Plus உறுப்பினர் இலவசம். கண்கண்ணாடி தயாரிப்பு நிறுவனமான லென்ஸ்கார்டின் ரூ.500 மதிப்புள்ள 1 ஆண்டு கோல்டு மெம்பர்ஷிப் இலவசம்.
LIC செலக்ட் கார்டு வெகுமதிகள்
இந்த கிரெடிட் கார்ட் பயன்படுத்தி எல்.ஐ.சி. இன்ஸ்யூரன்ஸ் பிரீமியம் செலுத்தினால் 10X வெகுமதி பெறுவீர்கள். இருப்பினும், LICயின அதிகாரப்பூர்வ இணையதளமான https://licindia.in/. மூலம் செலுத்தினால் மட்டுமே எந்த வெகுமதி கிடைக்கும்.
மளிகை பொருட்கள், பயன்பாடுகள்,ரயில்வே, கல்வி மற்றும் அரசாங்க பேமெண்ட்ஸ் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்தினால் 5X வெகுமதிகளை பெறுவீர்கள். மற்ற எல்லா செலவுகளுக்கும் 5X வெகுமதிகள் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு அதிகபட்சம் 300 வெகுமதி புள்ளிகள் மட்டுமே பெற முடியும்.
1X வெகுமதி என்பது ரூ.125 செலவில் 1 வெகுமதி புள்ளிக்கு சமம். 1 வெகுமதி புள்ளி என்பது 0.25 காசுகளுக்கு சமம்.
இந்த வெகுமதிகள் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். எரிபொருள், வாடகை,எல்.ஐ.சி. அல்லாத காப்பீட்டு செலவுகள், இ.எம்.ஐ. பரிவர்த்தனைகள் மற்றும் பணம் எடுத்தல் ஆகியவற்றுக்கு இந்த வெகுமதி திட்டம் பொருந்தாது.
கூடுதல் நன்மைகள்
காலாண்டுக்கு 2 முறை உள்நாட்டு விமான நிலைய லாவுஞ் (ஓய்வறை) வசதி பயன்படுத்துதல் இலவசம்.
காலாண்டுக்கு 4 முறை ரயில்வே லாவுஞ் வசதியை பயன்படுத்துதல் இலவசம்.
இந்தியாவில் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களிலும், 1 சதவீதம் கூடுதல் கட்டணம் தள்ளுபடி, மாதத்துக்கு ரூ.300 வரை. மாதம் ரூ.200 முதல் ரூ.500 வரையிலான பரிவர்த்தனை மதிப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
LIC செலக்ட் கிரெடிட் கார்டு இன்ஸ்யூரன்ஸ் நன்மைகள்
கடந்த 30 நாட்களில் எல்.ஐ.சி. செலக்ட் கிரெடிட் கார்டில் குறைந்தபட்சம் ஒரு பரிவர்த்தனை செய்தால், ரூ.5,00,000க்கான தனிநபர் விபத்துக் காப்பீடு மற்றும் ரூ.25,000க்கான இழந்த கார்டு பொறுப்பு காப்பீடு செல்லுபடியாகும்.
தலா ரூ.25,000க்கு கொள்முதல் பாதுகாப்பு இழப்பீடு, கிரெடிட் ஷீல்டு மற்றும் லாஸ்ட் கார்டு பொறுப்பு. ரூ.1,399 மதிப்புள்ள சாலையோர உதவி.
செக்-இன் சாமான்கள் இழப்பு அல்லது தாமதம், பாஸ்போர்ட் அல்லது பிற ஆவணங்கள் இழப்பு மற்றும் விமானத்தில் தாமதம் ஏற்பட்டால் தலா ரூ.4,000க்கான பயண காப்பீடு வசதி.
ரூ.1,00,00,000 கோடிக்கான விமான விபத்து காப்பீடு வசதி.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications