எல்ஐசி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய புதிய இன்சூரன்ஸ் திட்டம் தான் எல்ஐசியின் தன் ரேகா திட்டம்.
பெண்களுக்கு இந்த திட்டத்தில் சிறப்பான சலுகைகள் உண்டு. மேலும் மூன்றாம் பாலினத்தவர்களும் இந்த பாலிசியில் பயன் பெற்றுக் கொள்ளலாம்.
இது தவிர இன்னும் பல சலுகைகளும் இந்த பாலிசியில் உள்ளன. அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
வயது வரம்பு
இந்த பாலிசியில் பாலிசிதாரரின் முதிர்ச்சியின் போது, பாலிசியின் ஏற்கனவே பெற்ற எந்த தொகையையும் கழிக்காமல் முழு காப்பீட்டுத் தொகையையும் அவரின் கைக்கு வழங்கப்படும். இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச வயது 90 நாட்கள் முதல் 8 வயது, அதிகபட்ச வயது வரம்பு 35 வயது முதல் 55 வயது ஆகும்.
பாலிசி வகைகள்
இந்த பாலிசியில் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 40 ஆண்டுகள் என 3 வகையா பாலிசிகள் உண்டு. இதில் உங்களின் தேவைக்கு ஏற்ப பிரீமியம் மற்றும் ஆண்டினை தேர்வு செய்யலாம்.
இந்த பாலிசியில் 20 வருட பாலிசியில் 10 வருட பிரீமியத்தினை செலுத்த வேண்டியிருக்கும்.
இதே 30 வருட பாலிசியில் 15 வருட பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
40 வருட பாலிசியில் 20 வருடம் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும்.
சலுகை என்ன?
இந்த திட்டத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடக்கம் முதல் கொண்டு இறுதி வரையில், குறிப்பிட்ட தொகை கிடைகும். எனினும் முதிர்ச்சியின்போது இதனை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் முழு காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.
தனி நபருக்கான இந்த பாலிசியில் முதலீடு செய்யப்படும் தொகையை விட, சுமார் 125% வரையில் வழங்கப்படலாம். அல்லது உங்களது முதலீட்டு தொகையில் 7 மடங்கு இருக்கலாம். இவை 2ல் எது அதிகமானதோ? அது வழங்கப்படும்.
இறப்பு பலன்
பாலிசியில் இறப்பு பலனை மொத்தமாக முழு தொகையையும் பெறாமல், அடுத்த 5 ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையையும், பிற தொகைகளையும் தவணை முறையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
உத்தரவாதம்
ஒற்றை பிரீமியம் அல்லது லிமிடெட் பிரீமியத்தின் வரையறை காலம் 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை வழங்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையாக, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதிகபட்ச உத்தரவாதத் தொகைக்கு வரம்பு இல்லை. இந்த திட்டத்தின் கால வரையறைக்குகேற்ப, வயது வரம்புகள் மாறும்.


Click it and Unblock the Notifications